சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி CPS திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2014

சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி CPS திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்.


சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்-அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்"

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,' என,அரசு ஊழியர் சங்கமாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 10வது மாவட்ட இரு நாள் மாநாடு துவங்கியது. முதல் நாளான நேற்று, அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.

அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் பாலசுப்பிரமணியன், மாநில செயலர் கண்ணன் பேசினர். அரசுத்துறை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட வேண்டும், மாணவியர் விடுதிகளுக்கு போலீசார் இரவு நேர ரோந்து செல்ல வேண்டும், சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஜெ., ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

3 comments:

  1. GO 71 anybody affect this go, if you want file a case please call 94427 99974

    ReplyDelete
    Replies
    1. திரிபுரா மாநிலத்தில் இன்னும் பழைய ஓய்வூதிய திட்டம் தான் உள்ளது. ஓய்வூதிய திட்டத்தை முடிவு செய் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.எனவே சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி