SPECIAL TET: திருத்தப்பட்ட முடிவு வெளியீடு. ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2014

SPECIAL TET: திருத்தப்பட்ட முடிவு வெளியீடு. ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு.


மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,477பேர் எழுதினர்.தேர்வு முடிவு ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் தேர்ச்சி பெற்ற 933 பேருக்கு ஜூலை 1, 2-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட கீ ஆன்சர் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன.திருத்தப்பட்ட தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தெரிந்துகொள்ளலாம்.புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16-ம் தேதி நடத்தப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், தன்விவரக்குறிப்பு, அடையாள படிவம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் இதற்கு வரத் தேவையில்லை.சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகள்தங்கள் சார்பில் யாராவது ஒருவரை பங்கேற்கச் செய்யலாம். இதற்காகவிண்ணப்பதாரர் கையெழுத்திட்டு வழங்கிய அதிகார கடிதத்தை சான்றிதழ் சரிபார்ப்பின்போது அந்த நபர் சமர்ப்பிக்க வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் ஜூலை 16-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம்.

24 comments:

  1. Nambuvom,
    Nalagalam piraka,
    inum 5 natkal matume,
    Thavarinal
    inum 15 natkal matume,
    Kandipaga oru mudivu therindhuvidum,
    Kavalaiyindri kadavul nambikaiyodu kathirupom,
    Advanced walthukal,
    Arasinal appointment order vanga pogum thiramaiyana nallasiriyargaluku,,,

    ReplyDelete
    Replies
    1. Court order padi puthithaka elegible aana pwd candidates
      varum 16-7-2012 andru cv ill
      kalandhu kolla iyalavillai enil avarkalukkum manidhabamana adippadaiyil innoru vaippu alikka vendum

      Delete
  2. Historymajorwt60.84mbcjobkadaikumapleasesollungaappacell9965291352

    ReplyDelete
    Replies
    1. ஐயா இயற்பியல் துறைக்கு இல்லையா?.....

      Delete
  3. மணியரசன் தமிழில் டைப் செய்ய அனைவருக்கும் கற்று கொடுங்கள் , வழிகாட்டவும் , தமிழர்களாக நாம் இருப்போம் .

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக உதவுகிறேன் sir,

      ஏற்கனவே "தமிழில் எழுதுவது எப்படி?" என்ற தலைப்பில் ஒரு பதிவையே எழுதியிருக்கிறேன்.அந்த பதிவில் அனைத்து OS களுக்கும் தமிழில் எழுத உதவும் மென்பொருள் பொருள் குறித்தும் எழுதியிருந்தேன்.

      அதோடு சந்தேகம் எழுந்தால் என்னை அழையுங்கள் என்று கூறி என்னுடைய அலைபேசி என்னையும் குறிப்பிட்டுருந்தேன்.

      தமிழ் வளர என்னால் முடிந்த சிறு துரும்பைக் கிள்ளி போடுகிறேன் என்று நினைக்கும் போது எனக்கு அவ்வளுவு பெருமிதம்.

      நேரம் கிடைக்கும் போது தமிழின் இலக்கண இலக்கியங்களை சுவை பட எழுத முயற்சித்து பிற துறையை சேர்ந்தவர்களையும் தமிழின்பால் ஈர்ப்பு ஏற்படுத்த முயல்கிறேன்.

      இந்த கல்விசெய்தி வலைதளத்தில் தமிழ்த் துறையை சேர்ந்தவர்கள் சிலரே ழ,ள,ல வை முறை தவறி உபயோகிக்கும் பொழுது எனக்கு அளவற்ற சினமேற்படும்.

      ஏனெனில் இந்த உலயகமயமாக்கல் காலத்தில் இனி தமிழ் வாழ்வதும்,வீழ்வதும் நம் கையில்தானே உள்ளது.

      Delete
  4. Android mobile லில் play store லில் sellinamஎன டைப் செய்து வரும் option ஐ installசெய்து கொள்ளவும்..எந்த ஒருசெய்தியையும் டைப் செய்யும் முன்பும் mobileலில் வரும் choose input method ல் sellinam.options ஐ. OK கொடுத்தால் தமிழ் எழுத்துக்கள் வரும் ..பிறகு எளிதாக டைப் செய்யவும் ..குறிப்பு ; கு ,என்ற எழுத்திற்கு க + உ,என டைப் செய்ய வேண்டும் ..
    Examples..
    ட +ஐ =டை..
    க +ஆ =கா..
    க +ஓ = கோ..

    முயற்சி. செய்யுங்கள் ..எளிதில் பழகி விடும் ...
    த + இ =தி..

    ReplyDelete
    Replies
    1. அதை விட Ezhuthani சுலபமானது.

      Delete
  5. பிஜி தேர்வு நடத்தியதை ஆசிரியர் தேர்வு வாரியம் மறந்து விட்டது.

    எங்கள் உடன் தேர்வு எழுதிய தமிழ் நண்பர்கள் பணியில் சேர்ந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல் ஆசிரயர் தேர்வு வாரியம் இருக்கிறது. இதனை இணையதளங்கள் பார்த்தும் பார்க்காமல் இருக்கிறது

    ReplyDelete
  6. சென்ற ஆண்டு ஜூலை மாதம் தேர்வு வைத்தார்கள்.

    இன்று வரை இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

    முதலில் அடுத்த வாரம் என்ற னர்.

    பின்னர் அடுத்த மாதம் என்றனர்.

    பின்னர் பின்னர் தேர்தல் முடிந்ததும் என்றனர்.

    தேர்தல் முடிந்த பின்னர் வழக்கு முடியும் வரை காத்திருக்க சொன்னார்கள்.

    இப்போ வழக்கு முடிந்தது.

    ஆனால் இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

    இனி எந்த காரணம் கண்டு பிடித்து காரணம் சொல்லி ஏமாற்ற போகிறார்கள் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  7. History major low weitage irrunthu job chance vacant4119

    ReplyDelete
    Replies
    1. how is it tell me vacant history epadi therium sir.pls reply sir.i wait for u

      Delete
  8. ஆசிரியர் தேர்வு வாரியத்தை அரசு மாற்றி அமைக்கும் க ாலம் வந்து விட்டது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் நவீன வசதிகளுடன் கூடியதாக மாற வேண்டும்.மாற்றம் ஓன்றே இனி வரும் காலங்களில் பல பிரச்சினைகள் தேர்வுக்கு மற்றும் தேர்வர்களுக்கு ஏற்படாமல் தடுக்க உதவும்.

    ReplyDelete
  9. காலை வணக்கம்

    ReplyDelete
  10. அனைவரும் நலமாக. இ௫க்க இறுதி. பட்டியல் வெளியிட
    வேண்டும் காலை. வணக்கம்

    ReplyDelete
  11. 17 அன்றாவது ஒரு முடிவு சொல்லுங்க கடவுளே....

    ReplyDelete
  12. Replies
    1. விஜய குமார் சென்னை சார் மதிப்பெண் தளர்வு வழக்கு என்று விசாரணைக்கு வருகின்றது

      Delete
  13. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் மொத்தம் எத்தனைபேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.,(ஏற்கனவே 933 பேர் தேர்ச்சிபெற்றிருந்தனர்)

    ReplyDelete
  14. நண்பர்களே,
    TRB அலுவலர்கள் இதில் வெளிவரும் TRB சம்பந்தமான மோசமான comment- களை வெளியிடுபவர்களை கவனிதுக்கொண்டுதான் உள்ளார்கள். எப்படி தெரியும் எனில் "தமிழ்துறை D.T.Ed., weightage increasing matter" விசயமாகக் போகும் போது இதனைக் கூறினார்கள். ஆகையால், தரமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் அன்பு நண்பர்களே, இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மற்றும் பல்வேறு பணிச்சுமைக்கு இடையே "வழக்குகளினால்" அதிக நேர விரயம் ஆவதினால்தான் கால தாமதம் ஆகின்றது. இதற்கிடையே, "போனில் தகவல் த‌ருவது", மற்ற அலுவல்களையும் கவனிக்க வேண்டிய முக்கிய பொருப்பும் TRB- க்கு உள்ளதால் நாமும் அதனை உணர்ந்து நடப்போம். நன்றி நண்பர்களே..!

    ReplyDelete
  15. we are the most common cause of delay in posting by filling case against the government order related to their individual problem . single G O CAN not be satisfied all . but we are filling case for their need. we are doing all mistake but we are blaming the government . before blaming others see THAT REMAINING THREE FINGERS ARE TOWARDS US . think a minute friend if it is hurting anybody

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி