ரூ.1,000 ஓய்வூதியம் பெறும் திட்டம்-மத்திய அரசு ஒப்புதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2014

ரூ.1,000 ஓய்வூதியம் பெறும் திட்டம்-மத்திய அரசு ஒப்புதல்.


தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மாதம்தோறும், குறைந்தபட்சம், 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம், ஐந்து லட்சம் விதவைகள் உட்பட, 28 லட்சம் தொழிலாளர்கள் பலன் அடைவர்.தொழிலாளர் சேமநல நிதி அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு, அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 'தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் - 1995'ன் கீழ் வழங்கப்படும் இந்த ஓய்வூதியம், மிகவும் குறைவாக இருப்பதாகவும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை, 1,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும், பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், லோக்சபாவில் நேற்று, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் விஷ்ணு தேவ் சாய் கூறியதாவது:தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மாதம்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத்தை, குறைந்தபட்சம், 1,000 ரூபாயாக வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே தொழிற்சங்கங்களுடன், கடந்த மாதம், 24ம் தேதி, மத்திய தொழிலாளர் நலத்துறை கேபினட் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவாதித்துள்ளார். அப்போது, குறைந்தபட்ச ஓய்வூதியம் தொடர்பாக, இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என, தெரிவித்தார். அதன்படி, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறும் திட்டம், இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, நடப்பு நிதியாண்டிற்கு, மத்திய அரசு, 1,217 கோடி ரூபாய் வழங்கும்.இவ்வாறு, அமைச்சர் விஷ்ணு தேவ் சாய் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி