தமிழகத்தில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, இம்மாதம் இறுதியில் துவங்குகிறது.
இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் கூறியதாவது:தமிழகத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு,சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில், ஒரேநாளில் 10 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அதன்பின் தேர்தல் வரை, 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.இப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை, தேர்தலுக்கு பின் வழங்க முடிவு செய்யப்பட்டது.தற்போது, அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டது.டெண்டர் இறுதி செய்யும் பணி முடிந்து, அடையாள அட்டை அச்சிடும் பணி துவங்கி உள்ளது. இப்புதிய அட்டைகள், வாக்காளர்களுக்கு இம்மாதம் இறுதியில் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி