பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு 28ல் துவக்கம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2014

பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு 28ல் துவக்கம் - தினமலர்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு, நாளை துவங்குகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு இடைத் தேர்வுகளும், பொது வினாத்தாளை கொண்டு நடத்தப்படுகிறது. 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளி அளவில், வினாத்தாள் தயாரித்து வைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரே தேதிக்குள் நடத்தி முடிக்கப்படுகிறது. இதில், பிளஸ் 2 வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு, நாளை துவங்குகிறது. காலை இயற்பியல், பொருளியல், தட்டச்சு மற்றும் கணினி இயக்கம் ஆகிய தேர்வுகளும், மதியம் தமிழ் தேர்வும் நடத்தப்படுகிறது.

ஜூலை, 30ம் தேதி காலை வேதியியல், கணக்கு பதிவியல், புள்ளியியல், தொழிற்கல்வி ஆகிய தேர்வுகளும், மதியம் ஆங்கில தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஜூலை, 31ம் தேதி காலை வரலாறு, கணிதம், வணிக கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், புட் மேனேஜ்மென்ட் அண்டு சைல்டு கேர், ஆபீஸ் மேனேஜ்மென்ட் ஆகிய தேர்வுகளும், மதியம் கணினி அறிவியல், உயிர் வேதியியல், மனையியல், செவிலியர், இங்கிலீஸ் கம்யூனிகேஷன், அரசியல் அறிவியல், புள்ளியியல், உணவும் ஊட்டச்சத்தும் உள்ளிட்ட பாடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

ஆகஸ்ட், 1ம் தேதி காலை உயிரியல், தாவரவியல், வணிகவியல், பவுண்டேசன் சயின்ஸ் ஆகிய தேர்வும் நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கு ஜூலை, 28ம் தேதி காலை தமிழ் பாடமும், மாலை அறிவியல் பாடமும், ஜூலை, 30ம் தேதி காலை ஆங்கிலம், மாலை சமூக அறிவியல், ஜூலை, 31ம் தேதி காலை கணித பாட தேர்வும் நடக்கிறது.

7 comments:

  1. நண்பர் சிவகார்த்திக் 26/7/2014 6.47 pm அவர்களுக்கு தங்களுடைய பதிவினை பார்த்தேன் சிறிது வருத்தம் பெருத்த மகிழ்ச்சி.....எங்கள் சகோதரன் ஒருவன் ஐவரையும் தூற்றிகிறானே என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி....
    தாங்கள் செய்தி பகிர்ந்து எத்தனை நாளாக இருக்கும்.....எங்கள் ஐவரின் கட்டுரையெ படித்து விட்டு சொல்லவேன்டும்.....
    இந்த TET க்காக நாங்கள் எடுத்த முயற்சிக்கு தாங்கள் அளிக்கும் பரிசு இதுதானா?????
    உன்மையெ உலகிற்கு உரக்க சொல்லுபர்கள் நாங்கள்....என் பேனாவும் எழுதும் அனைவரின் கண்ணீர் செந்நீர் துடைக்க... யானைக்கும் அடி சறுக்கும் என்பதை மறக்க வேண்டாம் சிவகார்த்திக் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. siva karthikJuly 26, 2014 at 10:45 PM
      கல்வி செய்தியில் ராஜலிங்கம். ஶ்ரீ.மணியரசன் . பவி. ஜெயப்பிரியா போன்றோருக்கு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து பொய்யான. தவறான தேவையற்ற செய்தி பரப்ப வேண்டாம் உண்மை தெரிந்தால் அனுப்புங்கள் இல்லை எனில் சும்மா இருங்கள் நீங்கள் உங்கள் பெயர் பிரபலமாக ஏது வேண்டும் என்றாலும் பதிய வேண்டாம். எனக்கு தெரிந்த செய்தி English க்கு BC க்கு 63 வரை வருமாம். மற்ற வகுப்புகளுக்கு தலா 1&2 மதிப்பெண் குறையும் ஆகவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எந்த செய்தியும் உண்மை அல்ல அரசு வெளியிட்டால் மட்டுமே உண்மை அதுவரையில் வரும் செய்தி பொய். இன்று பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது ஶ்ரீ என்பவரின் பொய்யான செய்தி. அவருக்கு ஒரு அன்புடன் வேண்டுகோள் உண்மை செய்தி தெரிந்தால் அனுப்புங்கள் இல்லை எனில் சும்மா இருங்கள். தமிழகத்தில் 2 ஆண்டுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் மக்கள் நல பணியாளர். பணியை அம்மா அவர்கள் பரித்தார் எனவே வேலை கிடைக்காது என்று அப்பாவி மக்கள் 150 பேர் தற்கொலை செய்த துயரம் இன்றும் மறைவதில்லை தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வர உள்ளன என இன்று கல்வி செய்தி யில் செய்தி வந்துள்ளது அப்படி நிலை உள்ள தமிழகம். ஒரு செய்தி பரப்புவது பெரிய விஷயம் இல்லை உண்மையானதை மட்டுமே கூற வேண்டும் என்ற பொறுப்பு ஒவ்வொரு நபருக்கும் வேண்டும் நாம் அனைவரும் வருங்கால மாமனிதரை உருவாக்க உள்ள பொறுப்பான ஆசிரியர். நீங்கள் கூறும் செய்த பால்வாடி பிள்ளை போல un mature ஆக செய்தி பரப்பி வருகிறீர்கள் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு நபரையும் பாதிக்கும் எனவே உங்கள் பெயர் பிரபலமாக எவ்வளவோ வழி உள்ளன தவறான செய்தி பரப்ப வேண்டாம் என் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நான் தவறாய் பேசி இருந்தால் மன்னிக்கவும்

      Sivakarthik ungaloda karuththukku nantri......
      Ungalathu karuththil entha mariyathaium theriya villaiyee......
      Ungalai mika vanmaiyaaka kandikkireen......
      Nangal peer vaanga kaddurai eluthurooma????
      Nangal yaar engalin nilai, suyaviparam therinthu pesavum....

      Delete
    2. sun news
      arasu 15000 kaalipani idam arivitthu ullathu but tn gov and aided schoolil vacancy enpathu illai .ini than pani idangalai uruvakka vendum . pani niraval seitha pinpu 2000 teachers upariyaga ullanar. tharam uyarthapadum pallikalinai kondu vacancy uruvakkapadum
      ithu na sollala ipo sun newsla patthen

      Delete
  2. நண்பர் ராஐலிங்கம். அவர்களே தங்களை தூற்றவேண்டும் என்பது எனது கொள்கை இல்லை உங்கள் மூலம் நிறைய செய்தி நான் அறிந்து உள்ளேன் உங்கள் 5 பேரின் சேவை கல்வி செய்திக்கு வேண்டும் உங்கள் மீது நிறைய பேர் நம்பிக்கை வைத்து உள்ளனர் நானும் தான். உங்கள் மீது எவ்வளவு மரியாதை உள்ளனவோ அதே அளவு நம்பிக்கையும் உள்ளது உங்கள் செய்தி பலரின் கண்ணீர் துடைக்க வேண்டும் ஒழிய கண்ணீர் உருவாக்க கூடாது தேவையற்ற பலரையும் கஷ்டம் உண்டாகும் செய்தி கொடுக்க வேண்டாம் உங்கள் செய்தியை நாங்கள் நம்பி கொண்டு இருக்கிறோம் சொல்ல போனால் நீங்கள் 5பேரும் எங்களுக்கு முன்னோடி. நாங்கள் அனைவரும் அரசியல் விளையாட்டால் கலக்கம் அடைந்து உள்ளோம் நீங்கள் எங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். செய்வீர்கள் என்று நம்புகிறோம். எனது பதிவு உங்களுக்கு சங்கடத்தை கொடுத்தாள் என்னை மன்னிக்கவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. Nanpare en seithi ethu thavaraanathu ethu kanneer varavalaikirathu.....konjam sollungal paarpom.....
      1000 velaikalukku maththil kalviseithi nanparkalukku aaruthalaaka kaddurai eluthukiroom enpathai maranthu vidatheerkal.....
      Kalviseithi nanparkal engalukku aliththa aatharavai neengal paarthathu illaya.....

      Delete
  3. வருங்கால் ஆசிரியர் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோள்,
    அனைவருக்கும் வணக்கம், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் ஒரு கட்டத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது ஆகையால் கலக்கம் அடைய வேண்டாம், அதற்காக வார்த்தை போர் வேண்டாம். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அளிக்க காரணங்கள்:
    நாடாளாமன்ற தேர்தலுக்காக கொள்கை முடிவு என்ற பெயரில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசு, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் மீதி இருக்கும் 2 ஆண்டுக்களுக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யும் அதற்கு காரணம் தமிழக சட்டமன்ற வரலாற்றில் (கடந்த 20 ஆண்டுகளாக) தொடர்ந்து இரண்டு முறை ஒரே கட்சி ஆட்சியை கைப்பற்றவில்லை , ஆனால் அந்த சாதனை தற்போதைய அரசு , இந்த முறை செய்ய வேண்டும் என்ன நோக்கத்தில் பல நலத்திட்டத்திங்களையும், பல்வேறு வேலைவாய்ப்புகளையும் வழங்க தயார் நிலையில் உள்ளது. இந்த ஒரு சாதகமான சூழ்நிலை பல துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும், அதில் ஒன்றாகிய கல்வித்துறையும் கண்டிப்பாக பயன்பெரும் . கவலை வேண்டாம்,

    ReplyDelete
  4. Yo bharathi un message I ippadhanya padichen nee un peyarukku etrarpol uyarndhavannu nirupichchuta kalvi seithiyil vandha anaithu aruthalkalai kattilum un aarudhal enakenakku100%santhosathai koduthathu idhu en suya comment thank you dear bharathi

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி