பொறியியல் படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.
தமிழகத்தில், பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலையில், கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. முதலில், விளையாட்டுப் பிரிவினருக்கும், 25ம் தேதி, மாற்றுத்திறனாளி பிரிவிற்கும் கலந்தாய்வு நடந்தது. பொதுப் பிரிவினருக்கு, கடந்த 27ம்தேதி கலந்தாய்வு நடக்க இருந்தது.புதிய பொறியியல் கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்க, ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு) அவகாசம் கோரியதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுப் பிரிவினருக்கான, பி.இ.,கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று காலை துவங்குகிறது. ஆக., 4ம் தேதி வரை, 28 நாட்கள் கலந்தாய்வு நடக்கிறது. தொழில் பிரிவினருக்கான கலந்தாய்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 9ம் தேதி முதல், 18ம் தேதி வரை நடக்கிறது.'கலந்தாய்வில் பங்கேற்போருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு, அழைப்புக் கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணி நடந்து வருகிறது.அழைப்புக் கடிதம் கிடைக்காத மாணவர்கள், www.annauniv.eduஎன்ற இணையத்தளத்தில், விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என, அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி