பத்தாம் வகுப்பு மறுகூட்டல் 450 பேருக்கு மதிப்பெண் மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2014

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் 450 பேருக்கு மதிப்பெண் மாற்றம்.


பத்தாம் வகுப்பு மறுகூட்டலில், 450 பேருக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏப்ரலில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுதேர்வு முடிவிற்குப் பின்,
15 ஆயிரம் மாணவர்கள், பல்வேறு பாடங்களில், மறுகூட்டல் கேட்டு, தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்தனர்.'மறுகூட்டல் முடிவு, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்,இன்று காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும்' என, தேர்வுத்துறை, நேற்று தெரிவித்தது.விண்ணப்பித்த மாணவர்களில், 450 பேருக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற மாணவர்களுக்கு, எந்த பாடத்திலும், மதிப்பெண் மாற்றம் இல்லை எனவும், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள், நாளை, (9ம் தேதி) மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் எனவும், தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி