அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வங்கிகளின் மொத்த ஊழியர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள நிலையில், வங்கிப் பணியில் காலியிடம் லட்சக்கணக்கில் ஏற்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் வளர்ச்சி அதிகாரி மிஸ்ரா தெரிவித்தார்.
பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் அடுத்த 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வுபெற உள்ளதாகவும் அவர் கூறினார். ஊழியர்கள், அதிகாரிகள் நிலையில் மட்டுமின்றி பொது மேலாளர்களில் 75 சதவிகிதத்தினர் கூட 2020ம் ஆண்டில் ஓய்வு பெற உள்ளதாகவும் நிதி ஆலோசனை நிறுவனமான மெக்கன்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
its gud news to us. thanks to kalviseithi. i follow website daily.
ReplyDelete