பொறியியல் கலந்தாய்வு தேதி இன்னும் தெரியாததால் மாணவ, மாணவியர் தவியாய் தவித்து வருகின்றனர்.இதற்கிடையே ஏ.ஐ.சி.டி.இ. (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு)
நிலவரத்தை அறிவதற்காக தொழில்நுட்ப கல்வி கமிஷனர் குமார் ஜெயந்த் டில்லியில் முகாமிட்டுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பானவிவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ.க்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 27ம் தேதி துவங்க இருந்த பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கலந்தாய்வு துவக்கம், திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை, எப்போது வெளியாகும் என்று தெரியாமல் மாணவ, மாணவியர், தவியாய் தவித்து வருகின்றனர். இது குறித்து அறிய தினமும் ஏராளமான மாணவ, மாணவியர் அண்ணா பல்கலைக்கு வந்தபடி உள்ளனர்.கலந்தாய்வு தேதி நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பையும் அண்ணா பல்கலை வெளியிடவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகள் மீது ஏ.ஐ.சி.டி.இ. எடுத்துள்ள நடவடிக்கையை அறிந்தால் தான் அதற்கேற்ப கலந்தாய்வு தேதியை அண்ணா பல்கலை நிர்ணயிக்க முடியும்.எனவே ஏ.ஐ.சி.டி.இ. நிலவரத்தை அறிவதற்காக தொழில்நுட்ப கல்வி கமிஷனர் குமார் ஜெயந்த் நேற்று டில்லி விரைந்தார். அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் உள்ளிட்டஅதிகாரிகள், நேற்று உயர்கல்வித்துறை செயலர் ஹேமந்த் குமார் சின்காவுடன் ஆலோசனை நடத்தினர்.குமார் ஜெயந்த் சென்னை திரும்பியதும், புதிய கலந்தாய்வு தேதி மற்றும் புதிய கலந்தாய்வு அட்டவணை ஆகியவை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி