காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ்2 பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகுப்புகள் நேற்று துவங்கியது.
கல்வி துறை ஏற்பாடு பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளால் ஏற்படும் உளவியல்பிரச்னைகள், தற்கொலை முயற்சிகள், பாலியல் பிரச்னைகள் போன்றவற்றால் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்து வருகிறது.இதற்காக நடமாடும் வாகனத்தில் சென்று ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் ஆலோசனை வகுப்புகள் எடுக்க உளவியல் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த திட்டம் துவங்கப்பட்டது.
20 பள்ளிகள்:
காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கியுள்ளது. நேற்று காலை காஞ்சிபுரம் சீனிவாச நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், பிற்பகல் இராணி அண்ணாதுரை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வகுப்புகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 20 பள்ளிகளில் இந்த உளவியல் வகுப்புகள் நடைபெற உள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி