ஹரியானாவில் இளநிலை ஆசிரியர் தேர்வு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதல்வரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம்ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2014

ஹரியானாவில் இளநிலை ஆசிரியர் தேர்வு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதல்வரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம்ஒத்திவைப்பு.


ஹரியானாவில் இளநிலை ஆசிரியர் தேர்வு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவ்தாலாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வரும் 25-ம் தேதிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஹரியானாவில் கடந்த 2000-மாவது ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு சட்டவிரோதமான முறையில் 3,206 இளநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இவ்வழக்கில் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவ்தாலா, அவரது மகனும், சட்டமன்ற உறுப்பினருமான அஜய் சவ்தாலா உட்பட 55 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி தீர்ப்பளித்தது.

அதில், சவ்தாலா, அவரது மகன் அஜய் சவ்தாலா, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் உட்பட 8 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சவ்தாலா உள்ளிட்ட 55 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இம்மனு மீதான தீர்ப்பை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி