பஸ்களில் மொபைல்போன் பாடல்களுக்கு போலீஸ் தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2014

பஸ்களில் மொபைல்போன் பாடல்களுக்கு போலீஸ் தடை.


ராமநாதபுரம் மாவட்டத்தில் பஸ் பயணத்தின்போது மொபைல் போன்களில் சமுதாய பாடல்களை கேட்க போலீசார் தடை விதித்து உள்ளனர்.

தற்போது பாடல், சினிமா வசனங்கள், அரசியல் தலைவர்களின் மேற்கோள்கள், சமுதாய தலைவர்களின் வரலாறு, தாங்கள் சார்ந்துள்ள சமுதாய வரலாற்றுபாடல்களை ரிங் டோன், மெமரி கார்டில் பதிந்துள்ளனர்.பஸ் பயணத்தின்போது குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த பாடல்களை மொபைல்களில் கேட்கும் போது, மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.இது தொடர்பாக பயணிகளுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

விரும்பத்தகாத இத்தகையமோதல்களை தவிர்க்க மொபைல் போன்களில் சமுதாய சார்ந்த பாடல்களை பஸ்சிற்குள் கேட்க போலீசார் தடை விதித்துள்ளனர்.மேலும், இதனை மீறி பாடல்களை கேட்டால் 04567- 232111 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி