BRTE: ஆசிரிய பயிற்றுநர்களின் பணிமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

BRTE: ஆசிரிய பயிற்றுநர்களின் பணிமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுமா?


தமிழகத்தில் வட்டார வளமையத்தின் ஆசிரிய பயிற்றுநர்களை பணிமாறுதல்செய்ய வேண்டுமென்ற அரசின் கட்டாய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பயிற்றுநர்கள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்திடவும், அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு செல்வதோடு அதை தொடர்ந்து கண்காணிக்கவும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்கள்தோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒரு வட்டார வளமையம் உருவாக்கப்பட்டது.

அதில் வட்டார வளமைய மேற்பார்வையாளரின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களின் நிலையிலானஆசிரிய பயிற்றுநர்கள் பணியாற்றினர். அரசு தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் செயல்வழிக்கற்றல், எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி, படைப்பாற்றல் கல்வி போன்ற கற்பிக்கும் முறைகளை கொண்டு சேர்ப்பது, ஒவ்வொரு பள்ளியிலும் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்வது, பள்ளியில் உள்ள வசதிகள், தேவையானவை குறித்தும் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல்போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசால் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களும் இவர்கள் மூலம் அந்தந்த வட்டார ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

கடந்த 2001-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 8 ஆயிரம் ஆசிரிய பயிற்றுநர்கள் பணிபுரிந்தனர். பயிற்றுநர்களும் பட்டதாரிஆசிரியர்கள் நிலையிலானவர்கள் என்பதால் இவர்களில் ஆண்டுக்கு 500 பேர் வீதம் பணி மூப்பு அடிப்படையில் தனியாக கலந்தாய்வுநடத்தி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்களாக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு காலிப்பணியிடத்துக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு பள்ளிக்கு மாறுதலானவர்கள் போக தற்போது தமிழகமெங்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 135, திருச்சி 165, அரியலூர் 107, சிவகங்கை 136, மதுரை 147, தஞ்சாவூர் 158 என மொத்தம் 4,587 பேர் பயிற்றுநர்களாகஉள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக்கு மாற்றப்படாமல் அதே வட்டார வளமையத்திலேயே பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் ஆசிரிய பயிற்றுநர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென ஜூன் 9-ம் தேதி மாநில கல்வித் துறைச் செயலர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த மாதம் கடைசி வாரத்தில் இடமாறுதலுக்கான உத்தரவை பெற்ற பயிற்றுநர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இது குறித்து பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆசிரிய பயிற்றுநர்கள் கூறியது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தந்த வருடமும் தமிழகத்தில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் 500 பேர் தேர்வு செய்து தனியாக கலந்தாய்வு நடத்தி பள்ளிக்கு மாற்றம் செய்தனர். இதன்மூலம் அவரவர் விருப்பத்துக்கு பள்ளியை தேர்வு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக எங்களை பள்ளிக்கு மாற்றம் செய்யவில்லை.

இதுகுறித்து அரசிடம் வலியுறுத்தியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எங்களை வேறு வட்டார வளமையத்துக்கு கட்டாயப்படுத்தி மாற்றியுள்ளது அரசின் விதிமீறலாம். அலுவலராக இருப்பவர்கள் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றம் செய்யலாமென்ற விதியை ஆசிரியர்களாகிய எங்கள் மீது திணித்திருப்பது தவறானது. இந்த நடவடிக்கை அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட்டார வளமைய பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்ட 13 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத செயலாகும். தற்போது தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள்கூடஅவரவர் விருப்பத்துக்கு கலந்தாய்வு மூலம் வீட்டின் அருகேயுள்ள ஒரு பள்ளியை தேர்வு செய்யும் நிலையில் இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த எங்களை திடீரென பணியிடமாற்றம் செய்யவேண்டுமென்ற கல்வித் துறை செயலரின் உத்தரவை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

22 comments:

  1. அன்பு நண்பர்களுக்கு வணக்கம்....
    கூடுதல் ஆசிரிய பணியிடங்களை உருவாக்கவும், 2013௨-2014 கல்வி ஆண்டிற்கான பணியிடங்களையும் சேர்ப்பதற்கான கோரிக்கையெ ச.ம.உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தேன் அவரும் குரல் கொடுப்பதாக சம்மதித்தார்....நாளை சட்டமன்ற உரைமேல் நம் உயிரை வைத்து காத்துக்கொண்டிருப்போம்.....
    இந்த 10627 பணியிடம் என்பது யானைப்பசிக்கு சோளபொரியாகவும்...
    வறண்ட காட்டிற்கு காணல் நீராகவும் அமைந்து விட்டது......இருந்தாலும் அதை நினைத்து கொண்டே சோம்பேறியாக இருந்தால் சிலந்தியும் நம்மை சிறை பிடிக்கும் அதனால் அடுத்த கட்ட நகர்வுக்கு நாம் தயாராக வேண்டும்....உங்களது மேலான ஆக்கபூர்வமான கருத்தை பதிவிடவும்......
    அ)அடுத்த தேர்வுக்கு தயாராகுதல்
    ஆ)10672 பணியிடம் ஏற்றுக்கொள்ளுதல்
    இ) அகிம்சை வழி போராட்டம்
    ஈ)எதுவும் வேண்டாம்
    தயவுசெய்து ஆக்கபூர்வமான கருத்தை பதியவும்.....நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு இராஐலிங்கம் ஐயா அவர்களே என்னை போன்ற மன உளைச்சல் ஆளானவர்களுக்கு உங்களின் கருத்து மருந்தாக உள்ளது...

      Delete
    2. today we will expect good news. varumma? varatha ?

      Delete
  2. Sri,mani ,vijayakumar and rajalingam sir explain
    sir tet pass panna silaruku weightage seatla '"not eligiblenu '" varutham . ithu unmaiya? unmaina en alpadi?

    ReplyDelete
    Replies
    1. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


      மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். காலம் பொன் போன்றது. தாமதிக்காதீர் நண்பர்களே.

      இந்த ஜிஒ வில் அக்காடமிக் மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் கொடுப்பது மிகவும் முரன்பாடாக உள்ளது. ஏனென்றால் இவை அனைத்தும் டிஇடி தேர்வு எழுத தேவையான அடிப்படை தகுதிகள். எனவே இந்த ஜிஒ வும் ரத்து செய்யயப்படவேண்டிடும்.

      சிந்தியுங்கள் செயல்படுங்கள் நண்பர்களே. போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நேரமிது. ஜிஒ வை மாற்ற வேண்டியது மூத்த ஆசிரியர்களுக்கு கட்டாயமாகிறது.

      9003540800
      9442799974

      Delete
  3. Replies
    1. Silar oru sila certificate submit pannala athan not eligible-nu varuthunga sir

      Delete
    2. Dear sir I am eng 71.24 sc tough cmptn irukuma

      Delete
    3. Rajkumar sir தங்களுக்கு பணிநியமனம் உறுதியாகி விட்டது.....
      பள்ளி செல்வதற்கு தங்களை தயார் படுத்தவும்......வருகிற ஆக15 சந்தோசமான சுதந்திரதின விழாவாக உங்களுக்கு அமையும்.....வாழ்த்துக்கள்........

      Delete
    4. இன்று பணி இடங்கள் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளதா?????


      Delete
    5. Be confident usha....
      I am praying for that..
      Especially for you....

      Delete
  4. Mr.rajalingam sir my weit 67.8 bc femal physics.is ther any chance fr me?

    ReplyDelete
  5. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். தாமதிக்காதீர் நண்பர்களே.


    9003540800
    9442799974
    rlakthika@gmail.com

    ReplyDelete
  6. Hello barathi inum a casw podanumnu nenaika y eanda mathavnka life la velaidra poi next tet ku padi

    ReplyDelete
  7. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். காலம் பொன் போன்றது. தாமதிக்காதீர் நண்பர்களே.

    இந்த ஜிஒ வில் அக்காடமிக் மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் கொடுப்பது மிகவும் முரன்பாடாக உள்ளது. ஏனென்றால் இவை அனைத்தும் டிஇடி தேர்வு எழுத தேவையான அடிப்படை தகுதிகள். எனவே இந்த ஜிஒ வும் ரத்து செய்யயப்படவேண்டிடும்.

    சிந்தியுங்கள் செயல்படுங்கள் நண்பர்களே. போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நேரமிது. ஜிஒ வை மாற்ற வேண்டியது மூத்த ஆசிரியர்களுக்கு கட்டாயமாகிறது.

    9003540800
    9442799974

    ReplyDelete
  8. 11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம்!!!
    சென்னை:
    புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது.
    இந்த தேர்வு பட்டியல், வரும், 30ம் தேதி வெளியாகிறது.

    பட்டியல் வெளியான,
    அடுத்த ஓரிரு நாட்களுக்குள், அதன் முழு விவரத்தையும், பள்ளிக்கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பும். அதன்பின், 'ஆன் - லைன்' கலந்தாய்வு மூலம், ஆகஸ்ட் இறுதிக்குள், புதிய ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்.
    அடுத்த நியமனம்:
    நியமிக்கப்பட உள்ள ஆசிரியர் பணியிடம், 2012ல் ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கானது. எனவே, 2013ல் ஏற்பட்ட காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, சட்டசபையில், இன்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், வீரமணி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
    -கல்விக் குயில்

    ReplyDelete
  9. Rajalingam sir- my tam weitage is 73.27, oc. Do I have any chance?

    ReplyDelete
  10. Vijaya kumar chenni sir today what cases hearing. ?

    ReplyDelete
  11. tntet paper 2 expected cutoff released by vellore vidiyal coaching centre

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி