TNPSC-M:மோனையின் வகைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2014

TNPSC-M:மோனையின் வகைகள்.

அன்பார்ந்த கல்விசெய்தி நண்பர்களே,

வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் group 4 தேர்வு வர இருக்கிறது.அதற்கு நாம் இப்பொழுதிலிருந்தேநம்மை தயார் செய்தால் வெற்றி நிச்சயம்.

இன்று முதல் தினம் குறைந்தது ஒரு பதிவாவது TNPSC பாடத்திட்டம் குறித்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.இன்று முதல் பகுதியாக அனைத்து TNPSC,TET தேர்வுகளிலும் தவறாமல் இடம்பெறும் எதுகை,மோனை குறித்து காணலாம்.

மோனை

எழுவாய் எழுத்தொன்றின் மோனை என யாப்பருங்கலக் காரிகையும்,
அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன.

ஒரு செய்யுள் அல்லது வாக்கியங்களில் முதலெழுத்து ஒன்றி(ஒரே எழுத்தாக அல்லது ஒரே இன எழுத்தாக)வருவது மோனை ஆகும்.இது சீர்மோனை,அடி மோனை என இரு வகைப் படும்.இதில் சீர்மோனை அது வரும் இடத்தைப் பொறுத்து 7 வகைப் படும்.

ஒரே எழுத்து நேரிடையாக வரும் பொது நாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம், ஆனால் சில இன எழுத்துகளும் மோனையை உருவாக்குகின்றன.

 இன எழுத்துகள்.

உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.
உயிரெழுத்து இனங்கள்
1. அ, ஆ, இ, ஔ
2. இ, ஈ, எ, ஏ, யா
3. உ, ஊ, ஒ, ஓ
மெய்யெழுத்து இனங்கள்
1. ஞ், ந்
2. ம், வ்
3. த், ச்

மோனைகுறித்து விளக்கும் YOUTUBE காணொளி.
                        

நினைவுக் குறிப்புகள்.

மோனை மட்டும் குறித்து இப்பொழுது படிக்கும் பொழுது நினைவில் நிறுத்திக் கொள்ள பிரச்சனை இருக்காது.ஆனால் நடப்பு கால நிகழ்வுகள்,வாழ்வியல் கணிதம்,அறிவியல் பகுதி போன்ற பாடத் திட்டத்தின் பிற பகுதிகளை படிக்கும்போதும்,சில மாதங்கள் கழித்தும் நாம் இப்பொழுது  படித்த மோனை குறித்து சிந்திக்கும் பொழுது சற்று மறந்த நிலையே காணப் படும்.இது இயற்கையே.

ஆனால் ஒருவன் தான் கற்ற பாடப் பொருளை நீண்ட காலம் மறக்காமல் இருப்பதில்தான் அவனது வெற்றியே உள்ளது.அவ்வாறு மறக்காமல் இருக்க உதவுவதுதான் இந்த நினைவுக் குறிப்பு.

1) சீர் மோனை குறித்து நீங்கள் சிந்திக்கும்பொழுது உங்கள் மனதில் திருக்குறள்தான் முதலில் தோன்ற வேண்டும்.

2) திருக்குறளில் எப்படி ஏழு சீர்கள்  உள்ளதோ அதேப் போன்றுதான்சீர்மோனை எத்தனை வகைப்படும் என்று வினவினால் "7" என உடனடியாக பதிலளிக்கலாம்.

3)இணை,பொழிப்பு,ஒரூவு,கூழை,மேற்காதுவாய்,கீழ்க்கதுவாய்,முற்று என மோனையின் வகைகளை அடையாளம் காணும் போது சிறு குழப்பம் ஏற்படலாம்.அதற்கான தீர்வு இதோ

இணை,முற்று மோனைகளை அடையாளம் காண சிக்கல் இருக்காது.

1,3 வது சீரில் வந்தால் அது பொழிப்பு மோனை.அனைத்து மோனை வகைகளிலும் முதலாவது சீரில் மோனை வரும் என்று நாம் அறிவோம்.அடுத்து இந்த 3 என்பதை எப்படி நினைவில் கொள்வது என சிந்திப்போம். "பொழிப்பு" என்ற வார்த்தையில் "ப" வின் இன எழுத்து 3 வந்துள்ளது.எனவே 1,3 வது சீரில் மோனை வந்தால் அது பொழிப்பு மோனை.

மேற்காதுவாய், கீழ்க்கதுவாய்களின் சீர் வரிசை முறையே 1,3,4 மற்றும் 1,2,4.இவற்றின் கூடுதல் முறையே  8,7 ஆகும்.8 ஆனது 7 விட மேல்.எனவே சீர்கள் இடம்பெறும் ஏண்களின் கூட்டுத் தொகை 8 வந்தால் அது மேற்காதுவாய்,7 வந்தால் அது கீழ்க்கதுவாய்.

அன்புடன் மணியரசன்.

19 comments:

  1. Replies
    1. நன்றி.. ஏற்க்கனவே நீங்கள் மேற்கொண்ட முயற்சி தான் அதை விடாமல் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... இன்றைய tet ய் மட்டும் நம்பியிருக்கும் நிலையில்லாமல் ஒரு நம்பிக்கையுடனும் இருந்திருப்போம்..

      வாழ்த்துக்கள்... ஆனால் இந்த முறை முயற்சியை இடையில் விட்டுவிடாதீர்கள்...

      Delete
  2. Thank you. Example konjam koduthal illakkanam purinthu kolla easy irukkum. Seyvingala? Please

    ReplyDelete
    Replies
    1. இதற்கான உதாரணம் youtube காணொளியிலேயே கொடுக்கப் பட்டுள்ளது sir.

      வேறு ஏதாவது விளக்கம் தேவைப் பட்டால் கேளுங்கள்.நிச்சயம் பதிலேழுதுகிறேன்.

      Delete
    2. maniyarasan ranganathan please send your mobile no.(or) please call to me 09475204135

      Delete
    3. இந்த பதிவை அலைபேசி வழியாக காணும் போது இதில் இணைக்கப் பட்டுள்ள youtube video காட்டப் படவில்லை என எண்ணுகிறேன்.இந்த youtube video வானது html வசதியை தரும் கணினி,அலைபேசிகளில் காண முடியும்.

      ராஜேந்திரன் sir. என்னை armaniyarasan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ள முடியும் sir.

      Delete
    4. Mani Sir spl tet cv nadakutha sir? Thagaval terinthal solunkal? Case vidaithal madipida sonnade ena atchu sir.,,?

      Delete
    5. நடக்கிறது sir.அப்படி நடக்கவில்லையென்றால் TRB யிடமிருந்து அறிவிப்பு வந்திருக்கும்.

      அது மதிப்பிடப்படும் என்றே தெரிகிறது.மறுமதிப்பீட்டின் மூலம் யாராவது புதியதாக தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கென மீண்டுமொருமுறை தனியாக CV நடத்துவார்கள்.

      Delete
    6. good effort , come back with fighting spirit & attitude. keep it up.hardwork never fails.hoping keeps alive.

      Delete
    7. நன்றி மணி சார்

      Delete
  3. 19/10/2014 annual calendar.... maybe next week notification edhirpaarkalam

    ReplyDelete
  4. Let continues your service. Keep it up

    ReplyDelete
  5. Friends. ..... highcourt typist 2014select aanavanga aduthu skill test eppo? Therinjavanga sollunga ....

    ReplyDelete
    Replies
    1. Adhe pola tnpsc 4th group jr asst.post.kku cv
      mudithu dept.mm allot seithu vittarkal aanal innum posting podavillai viparam therindhal
      comment seyyavum please

      Delete
    2. Sir, ja kku order vandha 3 months kills joining date vandhudum....
      Sila dept seniority LA vara late aagum....ex school edn dept...vara minimum 4-6 months aayidum...neenga endha dept choose panning a...

      Delete
    3. School Education dept. sir

      Delete
    4. K sir. . Kandippa indha monthukkula vandhudum....illaina school edn Dept.... poi paarunga...

      Delete
    5. Thanks for your kind information sir.

      Delete
  6. Mr maniyarasan nanpare.......
    Moonai elithaka varisai padutha......
    Oru sinna Tamil vaakkiyam moolamaka.........
    Ippo oru koolaipandian meelum keelum muttukiran........
    I- inai moonai
    Po- polippu monai
    Oru- oru monai
    Koolaipandian- koolai monai
    Melum- merkathuvaai moonai
    Keelum- keelkathuvai moonai
    Muttukiran- mutru moonai

    ( maniyarasan nanpare ithanai tamilil eluthi kurippidungal anaivarukkum vuthavum )

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி