நாட்டின் பல்வேறு வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் யுவ சக்தி இளைஞர் நல அமைப்பு சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது:
சிந்தனை மாற்றத்தின் தொடக்கம் மகாத்மா காந்தி. அவரை வாசிக்கத் தொடங்கினால், இந்தியர் என்ற பெருமிதம் தானாகவே உண்டாகும்.
ஆனால், முன்மாதிரியாக இருந்த ஆளுமையை தற்போது நாம் பிம்பமாக மாற்றி வைத்திருக்கிறோம்.
நாட்டின் பல்வேறு வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. சென்னை ராஜ்ஜியம் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, தியாகி சங்கரலிங்கனார் குறித்து பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.
அதே சமயம், ஆந்திர மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த பொட்டி ஸ்ரீ ராமுலுவை ஆந்திரத்தில் போற்றிக் கொண்டாடுகிறார்கள். சங்கரலிங்கனார் குறித்து முதல் வகுப்பு பாடத் புத்தகத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், நாம் வரலாற்றை தெரிந்திருக்கவில்லை. எனவே மாணவர்கள் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும்.
தாய் மொழியில் கல்வி கற்று, சிந்திக்க வேண்டும். ஆங்கிலம் என்பது மொழியே தவிர அங்கீகாரம் அல்ல.
வளர்வதற்கு இந்தியா, வாழ்வதற்கு வெளிநாடு என்ற நிலை மாற வேண்டும் என்றார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் யுவ சக்தி இளைஞர் நல அமைப்பு சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது:
சிந்தனை மாற்றத்தின் தொடக்கம் மகாத்மா காந்தி. அவரை வாசிக்கத் தொடங்கினால், இந்தியர் என்ற பெருமிதம் தானாகவே உண்டாகும்.
ஆனால், முன்மாதிரியாக இருந்த ஆளுமையை தற்போது நாம் பிம்பமாக மாற்றி வைத்திருக்கிறோம்.
நாட்டின் பல்வேறு வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. சென்னை ராஜ்ஜியம் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, தியாகி சங்கரலிங்கனார் குறித்து பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.
அதே சமயம், ஆந்திர மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த பொட்டி ஸ்ரீ ராமுலுவை ஆந்திரத்தில் போற்றிக் கொண்டாடுகிறார்கள். சங்கரலிங்கனார் குறித்து முதல் வகுப்பு பாடத் புத்தகத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், நாம் வரலாற்றை தெரிந்திருக்கவில்லை. எனவே மாணவர்கள் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும்.
தாய் மொழியில் கல்வி கற்று, சிந்திக்க வேண்டும். ஆங்கிலம் என்பது மொழியே தவிர அங்கீகாரம் அல்ல.
வளர்வதற்கு இந்தியா, வாழ்வதற்கு வெளிநாடு என்ற நிலை மாற வேண்டும் என்றார்.

நண்பர்கள் திரு சிவானந்தம்,திரு dark knight, திரு அலெக்ஸாண்டர்,Shobi malar madam,
ReplyDelete"தாய் மொழியில் கல்வி கற்று, சிந்திக்க வேண்டும். ஆங்கிலம் என்பது மொழியே தவிர அங்கீகாரம் அல்ல." என்ற திரு. ராமகிருஷ்ணன் வரிகளுக்கு உங்களது கருத்தை பதிவிட வேண்டுகிறேன்.
நான் பிற மொழியைக் கற்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை சொல்ல வரவில்லை.ஒருவர் எத்தனை மொழியைக் கற்றாலும் தான் தாய் மொழி வழியாக சிந்திக்கும் பொழுதுதான் அது சிறப்பு பெறுகிறது என்பதை வலியுறுத்த உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
+2 la enaai vida kuraintha mark edutha canditates posting pottaa naanum case podalamnu irukken friends.... anybody join with me..please..please ( correcta friends...)
Deleteதிரு மணியாரசன் அவர்களே
Delete1. "மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தானே?
ஆதி காலத்தில் மணிதன் ஊமை பாசைதான், சைகை மூலமாகத்தான் தனது கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டான். ஆனால் கருத்துப் பரிமாற்றம் எழ வேண்டுமானால் நான் எழுப்புகின்ற ஓசை உங்களுக்குப் புரிய வேண்டும், நீங்கள் எழுப்புவது எனக்குப் புரியவேண்டும் அல்லவா? சரியாகச் சொன்னால், குறிப்பிட்ட ஓசைகளின் படிமங்கள் நம் இரண்டு பேர் மனங்களின் உள்ளே இருக்க வேண்டும் அல்லவா? . ஆதி காலத்தில் மணிதன் தனக்கென வாழும் பொழுது சைகை மொழி பிரச்சனையாக இருந்திருக்காது, தன்னைச்சுற்றி குடும்பம் என்று கூட்டாமாக வாழ்ந்த போது, தங்களுக்கு என்று தனித்தன்மை கலாச்சார மாறிய போது தங்களுக்கு என்று ஒரு மொழியை வடிவமைநத்திருக்களாம்.
2. மொழி என்பது கலாச்சார மாற்றத்திற்க்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். அரசர் காலத்து கல்வெட்டுகளை தமிழன் என்று கூறிக்கொள்ளும் என்னால் இப்போது படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன்??????
3. இலங்கையில் பேசுவதும் தமிழ் மொழிதான், தமிழ் நாட்டில் பேசுவதும் தமிழ் மொழிதான், ஆனால் இலங்கை தமிழரும், நாமும் உரையாடும் போது, கருத்து பரிமாற்றம் எவ்வளவு கடினமாக உள்ளது. ஏன் இலங்கை வரை செல்ல வேண்டும்? நம் தமிழ் நாட்டிற்க்கள்ளே தமிழ் மொழி எத்தனை மாறுபடுகிறது.
ஆங்கிலம் என்பது மொழியே தவிர அங்கீகாரம் அல்ல.";
இதில் என் கருத்து மாறுபடுகிறது திரு மணியாரசன் அவர்களே
மொழிப்பற்று என்று, அரசியல் வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்ளும் சுயநல வாதிகள், அவர்களின் சுயவிளம்பரத்திற்க்காக நம்மை அனைவரையும் முடக்கி வைத்துவிட்டார்கள் என்பதே என் கருத்து.
தமிழ் மொழியால் நாம் அனைவரும் ஒன்று படுவோம். நம் மொழியை உலகிற்க்கு எடுத்துச் செல்ல, நாம் பல மொழிகளை பயில்வோம்.
நன்றி.
மரியாதைக்குரிய திரு A ALEXANDER SOLOMON Aas sir அவர்களுக்கு வணக்கம்,
Deleteநீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் சரிதான்.ஆனால் முன் வைக்கும் வாதத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால் மொழியுணர்வை வளர்ப்போம் என்ற தலைப்பில் உள்ள பகுதிகள் அனைத்தையும் படிக்க வேண்டும்.ஏனெனில் அதன் தொடர்ச்சியாகவே நான் இங்கு கேள்வி எழுப்பியுள்ளேன்.
"நான் பிற மொழியைக் கற்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை சொல்ல வரவில்லை.ஒருவர் எத்தனை மொழியைக் கற்றாலும் தான் தாய் மொழி வழியாக சிந்திக்கும் பொழுதுதான் அது சிறப்பு பெறுகிறது என்பதை வலியுறுத்த உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்."
என்றும் மேலே குறிப்பிட்டு உள்ளேன்.
ஆனாலும் உங்களின் கேள்விக்கு சிறு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.
1) முதலாவது பத்தி மொழியின் தோற்றம் குறித்த உங்களது விளக்கமாகவே உள்ளது.அதில் கேவி எதுவுமில்லை.
2)இரண்டாவது பத்தியும் அவ்வாறே உள்ளது.மாற்றத்திற்கு உட்படாத மொழி எதுவுமில்லை.ஆனால் தமிழைக் காட்டிலும் பிற மொழிகளும் தமிழின் கிளை மொழிகளும் காலச் சூழலால் அதிக மாற்றத்திற்கு உட்படுகிறது என்பதே உண்மை.ஆனால் இன்று நடைமுறையில் உள்ள உள்ள எழுத்து முறையைக் கொண்டு பழங்கால கல்வெட்டுகளை படிக்க முடியாவிட்டாலும் அதற்கென நிபுணத்துவம் பெற்ற மொழியலாளர்கள் உள்ளனர்.பழங்கால எழுத்துத் தமிழ் வட்டெழுத்து வகையைச் சார்ந்தது.
3)மூன்றாவது பகுதி சிறு விளக்கம் அளிப்பதோடு கேள்வியாகவும் அமைகிறது. அனைத்து மொழிகளும் வாட்டாரத்திற்கு ஏற்ப சிறு மாறுபாட்டை பெறுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அமெரிக்கன் ஆங்கிலமும் இங்கிலாந்தில் பேசப்படும் ஆங்கிலமும் ஆஸ்திரேலியாவில் பேசப்படும் ஆங்கிலமும் ஒலி வடிவில் மாறுபடுவதோடு வாக்கிய அமைப்பிலும் சிறு மாறுபாட்டைக் கொண்டிருக்கிறது.
"""""ஆங்கிலம் என்பது மொழியே தவிர அங்கீகாரம் அல்ல.";
இதில் என் கருத்து மாறுபடுகிறது திரு மணியாரசன் அவர்களே
மொழிப்பற்று என்று, அரசியல் வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்ளும் சுயநல வாதிகள், அவர்களின் சுயவிளம்பரத்திற்க்காக நம்மை அனைவரையும் முடக்கி வைத்துவிட்டார்கள் என்பதே என் கருத்து.""
என்று எழுதியுள்ளீர்கள் அப்படியானால் ஆங்கிலம் பயின்றால்தான் ஒரு மனிதனின் சிந்தனை சிறப்பாக அமையும் என்று சொல்கிறீர்களா?
மொழி என்பது ஒரு பரிமாற்ற கருவியாகவே பலராலும் பார்க்கபடுகிறது அதன் சிறப்புகளை உணரும் வரை.அதன் மேன்மையை உணர்ந்தவன் மட்டுமே அந்த மொழியை பயன்படுத்தி அதன் மூலம் பல படைப்புகளை உருவாக்கி தனக்கும் தன் மொழிக்கும் பெருமை சேர்க்கிறான்.
Deleteமொழி செய்தி பரிமாற்றத்திற்காக மட்டுமேயானால் இன்று பல இலக்கியங்களும் அதனை சார்ந்த படிப்புகளும் இருக்காது.
Deleteதிரு மணியாரசன் அவர்களே.
Deleteஆங்கிலம் என்று தலைப்பின் நாயகன் எஸ்.ராமகிருஷ்ணனின் கேள்வியில் தான் உள்ளது. என் பதிலில் ஆங்கிலம் என்று நான் குறிப்பிடவில்லை.
ஆங்கிலம் பயின்றால்தான் ஒரு மனிதனின் சிந்தனை சிறப்பாக அமையும் என்று நான் கூறவில்லை. என் முடிவரையை நீங்கள் கவனிக்க வில்லை என்று நிணைக்கிறேன்
‘தமிழ் மொழியால் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். நம் மொழியை உலகிற்க்கு எடுத்துச் செல்ல, நாம் பல மொழிகளை பயில்வோம்’
சிந்தனை சிறப்பாக அமைய தாய் மொழிக்கு தொடர்பு இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. சிந்தனை என்பது அவனவன் அறிவு சார்ந்த்தது. தாய்மொழியில் கல்வி கற்றால் தான் அறிவுபூர்வமாக சிந்திக்க முடியும், பிற மொழியில் கல்வி கற்று சிந்தித்தால்???? என்ற கருத்து எனக்கு உடன்பாடில்லை.
உங்களது முடிவுரை வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
Deleteஆனால் தாய் மொழி என்பதற்கு நான் அளிக்கும் விளக்காமாக நேற்றைய என்னுடைய பதில் ஒன்றை அப்படியே மீண்டும் எழுதுகிறேன்.
"""""ஹார்வர்டில் பாடமெடுக்கும் பொருளாதார வல்லுனரான சுப்பிரமணிய சுவாமி தன் தாய்மொழியான தமிழில்பேசத் திணறுவதைக் கண்டதில்லையா? அமர்த்யா சென்னுக்கு பெங்காலியைவிட ஆங்கிலம்தான் வசதியாக இருக்கிறது சிந்திக்கவும், எழுதவும், நோபல் பரிசு வாங்கவும்."""""
என்று உங்களைப் போலவே நண்பர் ஒருவர் எழுயிருந்தார்.
அதற்கு என்னுடைய விளக்கம்.
ஆனால் ஆங்கிலமே அவர்களது தாய்மொழியாக மாறிபோனதுதான் யதார்த்தம். அவர்களுக்கு முறையே தமிழும் வங்காளமும் இரண்டாம் பட்சம்.இங்கு தாய்மொழி என்பது மேலோட்டமாக பார்த்தால் தன் பெற்றோர் பேசும் மொழி என்று பொருள் கொண்டு கேள்வி கேட்டால் அது தவறு.தன்னுடைய மழலை மொழியே ஆங்கிலாமாக அமையும் பொழுது அவர்கள் தமிழ் நாட்டில் அல்லது வங்காளத்தில் பிறந்ததால் அவர்களுக்கு எப்படி தமிழும்,வங்காளமும் தாய் மொழியாகும்.
தான் சிந்திக்கப் பயன்படுத்தும் மொழியே அவனது உண்மையான தாய் மொழியாகும்.
ஜி யு போப், வீரமாமுனிவர் போன்றோரின் தாய் மொழிகள் எது என்று நினைக்கிறீர்கள்?
நான் தமிழில் சிந்திக்கிறேன் அதனால் தமிழ் எனக்குத் தாய் மொழி.இங்கிலாந்தில் உள்ள ஒருவன் ஆங்கிலத்தில் சிந்திக்கிறான் அதனால் ஆங்கிலம் அவனது தாய் மொழி.ஆங்கிலேய குழந்தை ஒன்று தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு தமிழில் கல்வி வழங்கினால் அக்குழந்தை பெரியவனானலும் தமிழில் தான் சிந்தனை செய்யும்.அப்பொழுது அக்குழந்தையின் தாய் மொழி தமிழ் தானே தவிர அவர்கள் பெற்றோர் பேசிய ஆங்கிலம் அல்ல.
திரு மணியாரசன் அவர்களே
Deleteபொருளாதார வல்லுனரான சுப்பிரமணிய சுவாமி தன் தாய்மொழியான தமிழில்பேசத் திணறுவதும், அமர்த்யா சென்னுக்கு பெங்காலியைவிட ஆங்கிலம்தான் வசதியாக இருக்கிறது என்பதும்,
தாய் மொழிபற்று மணிதனுக்கு மணிதன் வேறுபடுகிறது. மொழிப்பற்று என்பது அவரவர் இரத்தத்திலும், உணர்விலும் ஊறி வரவேண்டும். இந்த கூற்றுக்கு மேலே கூறிய இருவரும் அப்பால் பட்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
நன்றி திரு மணியாரசன் அவர்களே.
Deleteஇனிய இரவாக அமைய வாழ்த்துக்கள்
"தான் சிந்திக்கப் பயன்படுத்தும் மொழியே அவனது உண்மையான தாய் மொழியாகும்."
Deleteஅருமையான வரிகள் மணி.
அதனால், நகரக் குழந்தைகள் சிந்தனையை ஆங்கிலம் அதிகம் ஆக்கரமிக்க இயல்பாகவே அது அவர்களின் பழகு மொழியாக நிரந்தரமாக மாறிவிட்டது.
One should talk one complete sentence in one language either in Tamil or English. Then no language would b denied from its development.
சோளக்கூழ் புரதம் மிக்கது. பெப்சி பூச்சிக்கொல்லி மிகுந்தது.
But the new generation likes only pepsi more.
பாசமுள்ள நமது பழைய பாட்டியிடம் பேசுவதை விட முகநூல் (facebook) தானே அதிகம் உபயோகிக்கிறது.
பழந்தமிழ் யாவற்றையும் கடந்து மீளும் நண்பா...
திரு Siranjeevi P அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்....
Delete+2 la enaai vida kuraintha mark edutha canditates posting pottaa naanum case podalamnu irukken friends.... anybody join with me..please..please ( correcta friends...)
ReplyDeleteமொழி போர் தியாகி திரு சங்கரலிங்கனார் தமிழ் நாட்டு பெயர் மாற்றத்திற்கு உண்னவிரதம் இருந்து உயிர் நீத்தர் இவர் பெயரில் ஒரு பயிற்சி நிலையம் உள்ளது விருதுநகர் மாவட்டம் சாத்துர் என்ற ஊரில் கூட்டுறவு துறை சார்ந்த படிப்பு உள்ளது diplomo in co/oprative (D.Cop) இந்த படிப்பு படித்தவர்கள் தான் கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்க முடியும்
ReplyDeleteநாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்
ReplyDeleteDear Mr History Sir 2013.
DeleteThe above your repeated message shown that you have very much confident on your stand. Good.my dear friend.
Do you have any data?? Please share with us so that we can also understand.
Thank you
மதிப்பிற்கு உரிய History sir 2013 , ஐயா தங்களின் மேற்கண்ட பதிவு 2 நாட்களுக்கு முன் என்னால் பதிவிடப்பட்டது ஆனால் அதனை சிலரின் மனம் கஷ்டமடைந்ததால் நான் இது போன்ற செய்தி பதிவிட கூடாது என்று எண்ணினேன. இந்த மேற்கண்ட செய்தி என்னால் வெளியிட பட்ட பின்பு மிகவும் வருத்தம் அடைந்தேன். நீங்கள் அதனை மீண்டும் மீண்டும் copy paste செய்வது எனக்கு வருத்தம் தருகின்றன ஆகையால் இந்த செய்தி மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் இது எனது அன்பான வேண்டுகோள். அவ்வப்போது அரசியல் விளயாட்டுகளுக்கு நம்மை போன்று பலர் கடினப்பட்டு உழைத்தவை எல்லாம் வீணாக போய்விட்டது அவர்களின் நிலைமை புரிந்து கொண்டு பதிவு செய்யவும் . அவர்கள் சார்பாக நான் கேட்டு கொள்கிறேன. தயவுசெய்து இது போன்ற பதிவு வேண்டாம் .
DeleteHistory sir unga comment da parkkum pothallaam kaduppa irukku etha athanai naalaikku sollikittu eruppinga ple stop
ReplyDeleteவருகின்ற திங்கள் கிழமை 18.08.2014 அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் (நுங்கம்பாக்கம்) என்ற இடத்தில் ஒரு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது
ReplyDelete90 மற்றும் அதற்கு மேல் பெற்று இறுதிபட்டியலில் இடம்பெறாத சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
கோரிக்கைகள்
1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்
2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்
பதவி உயர்வுக்கு 66.66% நேரடிநியமனம் 33.34 இதனை மாற்றம் செய்ய வேண்டும்
வருகின்ற இரண்டாவது பட்டியலில் தமிழ் மற்றும் கணித துறைக்கு அதிக பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்
குறிப்பு : காவல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது
இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற
82--126 மதிப்பெண் நண்பர்கள் யாரும் வருந்தவோ கோபப்படவோ வேண்டாம்
காரணம்
2013-2014 கல்விஆண்டு பணியிடங்கள் சேர்ந்தால் நாம் அனைவரும் பயன்பெறுவோம்
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்
When is Appointment Day?
ReplyDelete0). Agust 15 th -Independence Day.
1). September 05 - Teachers Day.
2). September 15 - Anna Birth Day.
3). September 17 - Periyar BirthDay.
4). October 02. - Gandhi Jayanthi.
5). October 07. Second Term
School Start
Vry nice sir but god only knows that day.
DeleteDear Mr Aul Tally
ReplyDeleteகோரிக்கைகள் மிகுதியாகும் போது, உங்கள் குறிக்கோள் மற்றும் நோக்கத்தின் பாதை மாறுபட்டுவிடும்.
தமிழ் மொழியை படிக்காமல் இருந்தாலே போதும் அனைவரும் முன்னேறிவிடும் அதை படிப்பதால் 5000 வருடம் பின்னுக்கு இழுத்து கொண்டு செல்கிறது.பாகுபாடற்ற சமுதாயத்தைதான் உருவாக்க வேண்டும்.மனிதநேயத்தை வளர்க்க வேண்டும்.உலக சகோதரத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் எல்லைகள் இல்லா உலகை உருவாக்க வேண்டும் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் இன்னொரு மொழியை கற்கவிடாமல் ஒரு மொழி தடுக்குமானால் அதனை மறந்து விடுவது நலம் ஏன் என்றால் மனித முன்னேற்றம்தான் முக்கியமே தவிர மொழி முன்னேற்றம் அல்ல ஒரு மொழி அழிந்து விட்டது என்றால் அந்த இனம் முன்னேறிவிட்டது என்று பொருள் லத்தீன்.சமஷ்கிரதம் ஹீப்ரு.,.இன்னும் நிறைய எழுதலாம்.
ReplyDeleteதிரு பவி அவர்களே,
Deleteநீங்கள் ஆயிரம் கருத்தை எழுதுங்கள் தவறில்லை.ஆனால் நீங்கள் எழுதியுள்ள
"""""""தமிழ் மொழியை படிக்காமல் இருந்தாலே போதும் அனைவரும் முன்னேறிவிடும் அதை படிப்பதால் 5000 வருடம் பின்னுக்கு இழுத்து கொண்டு செல்கிறது"""""""""""""
என்ற கருத்து வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
உண்மையான தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு மாறுபட்ட பதிலை எழுதுவார்கள் என நினைக்கிறேன்.
திரு பவி அவர்களே.
Deleteகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தாய் மொழி தமிழ்.
அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்றால் தாய் மொழியான தமிழ் தேவை. ஏறி வந்த ஏணியை உதைத்து தள்ளாதிர்கள்
இது என் சொந்த கருத்து தாய் மொழியை கற்றுக்கொடுத்து வருவதில்லை தன் தாய் என்ன மொழி பேசுகிறாலோ அந்த மொழியை அந்த குழந்தை பேசிவிடும்.அந்த மொழியில் புலமை வேண்டுமானால் சிறப்பாக உங்களைப்போல் அதை படிக்க வேண்டும் எதை படிக்க வேண்டும் எதை படிக்ககூடாது என்பதை முடிவெடுக்ககூடியது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.அன்பு மணி ராமதாஸ் எந்த மொழியில் படித்து மருத்துவரானார் கலைஞர் குடும்பத்தில் யாருக்காவது தமிழ் ஒழுங்காக தெரியுமா கலைஞரைதவிர ஒருவேளை அண்ணன் அ ழகிரியையும் எடுத்துகொள்ளலாம்.உம்மைபோல் சரியான கருத்தை முன்வைப்பவர்களுக்கு சரியான என் கருத்தை எழுதுவேன். நானும் தமிழில் தான் எழுதுகிறேன் வேறு மொழியில் இல்லை
Deleteஏறிவந்த ஏணி உண்மையில் அது என்னை ஏற்றி விட்டது என்றால் இன்று அது ஜப்பானை போன்ற மாற்றத்தை உருவாக்கியிருக்கவேண்டும் மாறி மருவிய மொழிபேசுவோர் எல்லாம் முன்னேற்றம் அடைந்துவிட்டன தமிழில் ஒரு மருத்துவரை உருவாக்க முடியுமா இந்த தமிழ் மொழிவளர்வதற்கு என்ன செய்தீர்கள் சட்டசபையில் ஒருமுறை பாமாக கட்சி மணி அவர்களுக்கு பதிலளிக்கும் போது இன்றைய முதல்வர் சைக்கிளில் உள்பொருட்களை ஒவ்வொன்றாக கூறி தமிழில் கூறமுடியுமா என்றார் மணி அவர்கள் திகைத்துப்போய் நின்றார். மொழி என்பது ஒன்றை உருவாக்குவதாக. இருக்கு வேண்டுமேயொழிய அது பழைமையையே பேசிகொண்டு இருக்ககூடாது.
Deletewait
Deleteசொல் களஞ்சியம் மிகவும் முக்கியம் ஆங்கில சொல் களஞ்சியம் அறிவது மிக வும் எளிது ஆனால் தமிழ் அப்படி அல்ல தமிழில் புலமை இருந்தாலொழிய அது கடினம் மாறாக அதிகபட்ச ஒலி ஓசைகளை உடையது தமிழ் மொழி மற்ற மொழிகளை மிகவும் எளிதாக கற்க முடியும் முயற்சி எடுத்தால் மெட்ரிக் மாணவனுடை தாளினை பார்த்தால் சிரிப்பாக வரும் ஆனால் அதே மாணவன் பிரஞ்ச் மிக எளிதாக ஆங்கிலம் மிக எளிதாக கற்றுவிடுவான் மொழிவழியேதான் மனிதன் சிந்திக்கிறான் என்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாமே தவிர முழுமையாக ஏற்க முடியாது ஏன் என்றால் சிந்திக்க மொழி புலமை இருந்தால் தான் சிந்திக்க முடியும் என்பதாகிவிடும் பள்ளி செல்லா காமராசர்.தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கார் எந்த மொழியில் பெற்று இருந்தார்கள்
ReplyDeletethamizh naatin paada thittaththaiye maatri amaikka vendum....
ReplyDeleteஅன்பு பவி...
ReplyDeleteகுழந்தையிலிருந்து 20 வயது வரை வளர பாலூட்ட குளிப்பாட்ட மலம் கழுவ, சமைத்து தர தாய் தேவை.
25 வயதில் நடுத்தெருவில் தாயை தவிக்க விட்டு - மனைவியோடு தனிக்குடித்தனம் ஓடிப்போகும் நின் போன்ற இன்றைய இளைஞர்கள் இவ்வாறு தான் சிந்திப்பீர்கள். (My age 31. Mother is with me forever)
As u had mentioned above no dictionary words for cycle spare parts in tamil language - it is the true fact. Our leaders didn't planned the entire development of our tamil in all fields.
Tamil medium student strives more in engineering and medical college. So they and society want to move towards learning English from lower class to become a Best doctors or engineer. It is the reality. Since no propet plan is developed for Tamil language development in all fields- our Tamil language faces all degrades. Its all the mistake of leaders who lead us.
China developed themselves only alone by Chinese not by English. Likewise we should have extended our tamil to all fields. But it not happened.
British created inferior complex among us to use our food, language, dress, style of living.
Though our loving mother unable to behave modern like our fancy wives, we shouldn't leave our loving mother in bus stand. We have to hug and lift it.
Though our English brain knew that more protein exists in raagi rotti, we move towards neglecting it and like peetsa alone.
பத்தாயிரம் ஆண்டுகள் முன் பிறந்து - பனையோலையிலிருந்து கணினி ஏறி மட்கி அழிந்திராத பழந்தமிழ் - வெறும் 60 ஆண்டில்
வாழ்ந்து மட்கிப் போகும் நின் போன்ற அற்ப மனிதனிடம் கேவலப்படும் நிலை.
மொழியின் எல்லையே அறிவின் எல்லையா
ReplyDeleteமொழிக்கு எல்லையென் றேது முண்டா
கனிவாய்ச் சொற்களில் கட்டுரை தந்தே
மணியின் அரசன் முயல்கிறான் நன்றே!
இது நிலைமண்டில ஆசிரியப்பா. எல்லா அடிகளிலும் நான்கு சீர்களைக்கொண்டிருப்பதால். ஆசிரியர்கள் அறிந்திருப்பீர்கள். சாதரணமாக ஈரசைச்சீர்களை அசைபிரித்து எழுதத்தெரிந்தாலே போதும், தமிழர்கள் யாரும் ஆசிரியப்பா எழுதலாம். எதுகை மோனை அவசியமில்லை, வரும்படி அமைந்தால் அகவலோசைக்குச் சிறப்பு. ஈற்றடி ஏகாரத்தில் முடிந்தால் அழகு. அவ்வளவுதான் விதிகள்.
விவாதத்தோடு தமிழறிவையும் கற்பனை வளத்தையும் சேர்த்தே வளர்ப்போம் வாருங்கள். நம் ஆற்றலை அடுத்தவரை எப்படி மடக்கலாம் என்ற இயல்பான எண்ணத்திலிருந்து விடுவித்து இன்னும் சிறப்பாக எப்படி செய்யுள் எழுதலாம் என்பதில் திருப்புவோம். கருத்துகளையே செய்யுளில் அமைக்கமுடிந்தால் இன்னும் செ(ம்)மை. [ஷெம்த்தியா இருக்குடா என்ற சென்னை வட்டார வழக்கு செம்மையாக உள்ளது என்பதின் மருவிய வடிவமோ என்பது இதை எழுதும்போது உதிக்கும் சிந்தனை. மொழியிலிருந்து சிந்தனை பிறந்துவிட்டது!]
நண்பர் திரு சிவானந்தம் அவர்களுக்கு,
ReplyDeleteஆசிரியப்பா என்றால் என்ன? என்று கேட்கும் பல .............இருக்கும் பொழுது ஆசிரியாபாவில் ஒரு பாடலையே எழுதி உங்களது ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
நம்முடைய விவாதத்தின் தொடர்ச்சியாய் இந்த கட்டுரை அமைந்திருந்தது.என் கேள்வியும் அவ்வாறே அமைய வேண்டும் என்ற நோக்கில்தான் கேட்டேன்.மற்றபடி நீங்கள் குறிப்பிடும் படி இல்லை நண்பரே.
ஆனாலும் உங்களின் "மொழியறிவு" நன்றாக கவனியுங்கள் "மொழியறிவு" என்னை வியக்க வைக்கிறது!
pavikku mozhiyarivai pugattungal maniyarasan sir.pavikku padhil sonna vidham arumai sir.anniyargal kooda pazhikkadha mozhiyai pavi pazhippathu vedhanai.nallavelai valluvar,ilango kambar bharathi indru illai pavi sorkkalai ketka.
Deleteஅன்புள்ள மணியரசன், விவாதத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவோமா? கொஞ்சம் கஷ்டமானது. நிறைய நேரமும் வாசிப்பும் சிந்தனையும் தேவைப்படும். நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஇந்த மொழியின் எல்லை மற்றும் அறிவின் தொடர்பு, மொழிதான் அறிவா போன்ற கேள்விகளோ விவாதங்களோ புதிதல்ல. குறைந்தது நூற்றாண்டுப்பழைமை கொண்டது. Ludwig Wittgenstein என்ற ஜெர்மானிய தத்துவவாதி புகழ்பெற்றதும் இன்றளவும் தர்க்கம்-மொழியியல் தத்துவங்களில் முக்கியமானவராகக் கருதப்படுவதும் இன்று நாம் விவாதிக்கும் விஷயங்களில் சில முக்கியமான சிந்தனைகளுக்காகத்தான். அவரது கொள்கையான 'ஒருவனின் மொழியின் எல்லையே அவனது உலகின் எல்லை' என்ற வாக்கியம் புகழ்பெற்றது. பிற்காலத்தில் அவரது சிந்தனையின் குறைபாடுகளை Bertrand Russel உட்பட பலரும் சுட்டிக்காட்டினார்கள். அவரை நீங்கள் வாசிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன். கீழே உள்ள இணைப்பில் wittgenstein-ன் புத்தகத்துக்கு Russell எழுதிய முன்னுரையை மட்டும் வாசியுங்கள் போதும். மற்றது புரிந்துகொள்வது கடினம்.
http://www.gutenberg.org/files/5740/5740-pdf.pdf
ஒன்றைப்புரிந்துகொள்வோம். புறவயமாக (objective) ஒரு விஷயத்தை அல்லது முடிவை நிரூபிக்கவேண்டுமானால் அது physical reality-யுடன் நிரூபிக்கப்படவேண்டும். ஐன்ஸ்டைன் "time is just the fourth dimension of space" என்றதும் சக இயற்பியலாளர்களே சிரித்தார்கள். ஆனால் அது பத்தாண்டுகள் கழித்து நிரூபிக்கப்பட்டதும் அறிவுலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது.
ஆனால் நூறு வருடங்கள் கழித்தும் Wittgenstein சரியா? தவறா? என்று இன்றும் (நம்மைப்போல்) விவாதங்கள் மட்டுமே நடத்தமுடிவதன் காரணம் மூளையின் செயல்பாடுகள் குறித்தும் அதில் மொழி செயல்படுவதன் விதம் குறித்தும் புறவயமாக நிரூபிக்க அறிவியலும் தொழில்நுட்பமும் வளரவில்லை என்பதுதான். ஒவ்வொரு தலைமுறையின் அறிவுலகமும் அதன் பங்களிப்பைச்செய்து வருகிறது. இன்னும் நூறாண்டுகளோ அதற்குமேலுமோ ஆகலாம். பார்ப்போம். அது நடவாதவரை நான் சொல்வதுதான் சரி, மொழிதான் அறிவு என்று மணியரசனோ சிவானந்தமோ Wittgensteinனோ யாரும் வாதாடலாம். ஆனால் அது hypothesis மட்டுமே. உறுதி செய்யப்பட்ட உண்மையல்ல.
ஒரே ஓர் ஆலோசனை. எதைக்குறித்தும் எழுதுங்கள். ஆனால் தான்தோன்றியாக எழுதாமல் நம்முன் வாழ்ந்த மானுடத்தின் மகத்தான மூளைகள் அதில் எவ்வளவுதூரம் ஆராய்ந்துள்ளது என்று தேடுங்கள். வலைமனைகள்தான் திறந்தகிடக்கிறதே. நம் மனது மூடிக்கிடக்காமலிருந்தால் போதும். அதற்குமேலும் அந்த விஷயத்தில் உங்கள் சிந்தனையின் பங்களிப்பு பொருள்படுமானால் அதையும் சேர்த்து எழுதுங்கள். இல்லையேல் இன்னார் இதில் இவ்வளவு தூரம் முயன்றிருக்கிறார்கள். நாம் இப்போது இங்கே நிற்கிறோம் என்று மட்டும் எழுதுங்கள். குறைந்தபட்சம் உள்ளீடற்ற புள்ளி, ஆறாவது அறிவு, வெற்றிடம்தான் மிஞ்சும் என்றாவது உளறுவதைக் குறையுங்கள்.
கொஞ்சம் கடுமையாக எழுதுவதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் ஆய்வுத்தரத்தில் வளரக்கூடிய potential இருக்கிறது. பொறுமைதானில்லை. அதனால் மனதில் தோன்றியதைத் தோன்றியபடி முடிவெடுத்து அதை எழுதி வலியுறுத்தும் குறைபாடு பின்னுக்கிழுக்கிறது. இது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. தானிருக்கும் சிறு கிணறே உலகம் என்று குண்டுசட்டிக்குள் அடைந்து இறுமாப்பு கொள்ளும் தமிழனின் பிரச்சனை. Mediocrity என்ற சராசரித்தனத்திலேயே திருப்திபெற்றுவிடும் மனநிலைதான் நம் பிரச்சனை. தயவுசெய்து அவ்வட்டத்துக்குள் சென்று சிக்காதீர்கள். பிழையற எழுதத் தெரிந்தால் வாக்கியங்கள் வேண்டுமானால் சரியாக அமையுமே தவிர எழுதும் கருத்துகளெல்லாம் பிழையற இருக்கவேண்டிய அவசியமில்லை; இருக்கவும் முடியாது. பிறகு சிந்தனையாளனுக்கும் வெறும் வார்த்தைகளில் விளையாடும் மொழிப்புலவனுக்கும் என்னதான் வேறுபாடு?
வாருங்கள் mediocrity யிலிருந்து meritocracy ஐ நோக்கி பயனிப்போம். தமிழனின் பெருமையை உலகுக்கு அறிவிப்போம்.
அடடே! உங்களை நான் இவ்வளவு நாள் தவற விட்டுவிட்டேனே.நான் இப்பொழுதுதான் கால தாமதமாக உங்களின் பதிலை பார்க்கிறேன்.நீங்கள் என் பதிலைப் பார்த்தால் ஒரு comment போடுங்கள்.
Deleteஏனெனில் நான் பதிலெழுதி அதை நீங்கள் பார்க்கவில்லை என்றால் அவை அனைத்தும் வீண் தானே!
இன்னும் உங்களது மேற்கண்ட இந்த பதிலைப் படிக்கவில்லை.ஆனால் உங்களது பதிலைப் பார்த்தவுடன் உங்களுக்கு பதிலுரைக்கிறேன்.எப்படியும் உங்களது பதில் என்னை பதிலெழுதத் தூண்டும் என்ற நம்பிக்கையில்............
உங்களது பதிலைப் படித்தேன்.உங்கள் அறிவுரைக்கு நன்றி.நிச்சயம் நான் கிணற்றுத் தவளை கிடையாது.ஒரு வேளை கிணற்றுத் தவளையாக இருந்திருந்தால் என் நிலைப்பாடே வேறு மாதிரி இருக்கும்.
Deleteஎன்னைப் பொறுத்தவரை கற்றல் இனிமை. தினமும் கற்கவே விரும்புகிறேன்...உங்களோடு விவாதம் செய்வதும் அதனோடு தொடர்புடையதே!
அதோடு நான் உளறியிருப்பதை நீங்கள் தெளிவாகக் கூறினால் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.ஒரு வேளை என் கருத்து உங்களை வந்தடையவில்லையென்றால்............?
அதனால் நான் உளறியிருப்பதை தெளிவுபட எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களோடு நிச்சயம் விவாதம் தொடரும்.
எனது மின்னஞ்சல் முகவரி armaniyarasan@gmail.com.
நான் மிகவும் அதிருப்தி அடைந்ததும் உளறல் என்று குறிப்பிட்டதும் உங்களின் கீழ்க்கண்ட பத்தியைத்தான்;
Delete"'இங்கு சிந்தனை என்பதே மொழி என்றாகி விடுகிறது.அதாவது E = mc2 என்றாவது போல சிந்தனை(அறிவு)=மொழி என்றாகி விடுகிறது. மொழியையும் அறிவையும் வேறுபடுத்தவே முடியாது. சிந்தனைதான் அறிவு,அறிவுதான் மொழி, மொழிதான் சிந்தனை. அதாவது இங்கு அறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள 6 வது அறிவை குறிப்பிடுகிறேன்.அந்த 6 வது அறிவுதான் மொழி.மொழியின் ஒரு கூறுதான் சிந்தனை.சிந்தனைதான் அறிவு. இது ஒரு உள்ளீடற்ற ஒரு புள்ளி. அந்த புள்ளியில் எது மொழி எது அறிவு எது சிந்தனை பிரிக்கவே முடியாது. அப்படிப் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தால் அங்கு அந்த புள்ளியே இருக்காது. வெற்றிடம் தான் மிஞ்சும்' என்ற பகுதியை குறித்து உங்கள் கருத்து கூறுங்கள். இந்த கருத்திலேயே உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் பதிலுள்ளது"
ஒன்றுக்குமேல் ஒன்றாகக் குவிந்த இந்த முடிவுகள் தாங்கள் ஆராய்ந்து கண்டறிந்ததா? ஏதாவது ஒரு அறிவியல் அல்லது மொழியியல் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகளை வெளியிடுங்கள். அவைகள் சிலவற்றின் முகவரி வேண்டுமென்றால் கேளுங்கள்; அனுப்பிவைக்கிறேன். ஏனெனில் உலகத்தின் தலைசிறந்த மொழியியல் ஆராய்ச்சியாளர்களும் மூளை நரம்பியல் மருத்துவர்களும் இது தெரியாமல் தேவையில்லாமல் மொழியும் சிந்தனையும் மூளையில் செயல்படும் நுட்பம் குறித்து ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். அவர்களுடைய நேரமும் பணமும் உங்கள் கண்டுபிடிப்பினால் மிச்சமாகும்.
மற்றவர்கள் ஆராய்ந்தறிந்த முடிவுகளை மட்டுமே விவாதிக்கப் பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?
Deleteஅப்படி ஆரந்தறிந்த முடிவுகளை மட்டுமே விவாதிக்க நாம் எதற்கு? நமக்கும் நீங்கள் சொல்லக் கூடிய ஆராய்ந்தறியக் கூடிய சிந்தை இல்லையா?
அப்படி ஆராய்ந்தறிந்த முடிவுகளை தந்தவர்களும் அவர்களின் ஆரம்ப கால கட்டங்களிலேயே சிறப்பான முடிவை தந்து விடவில்லை.
அப்படி ஆராய்ந்தறிந்து ஏற்றுக் கொள்ளப் பட்ட முடிவுகளில் பல காலப் போக்கில் தவறென நிரூபிக்கப் பட்டுள்ளது.சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்று கூறியதைப் போல்.....
நம்முடைய கருத்திற்கு வலு சேர்க்க அப்படி பட்ட முடிவுகளை உதாரணம் காட்டலாமே ஒழிய அவர்களைச் சார்ந்தே முழு விவாதமும் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை.
உண்மையில் ஒரே தீர்விற்கு பல முடிவுகள் சில நேரங்களில் பொருத்தமானதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
உளவியலில் கற்றல் குறித்த பல கோட்பாடுகளை படித்ததுண்டா நீங்கள்?
இல்லை. உளவியலில் கற்றல் குறித்த கோட்பாடுகளை நான் கற்றதில்லை. கற்றுக்கொண்டுவந்து மீண்டும் முடிந்தால் பதிலளிக்கிறேன். என் அறிவுக்கண்ணைத் திறந்ததற்கு நன்றி. Good night and all the best!
Deleteஉங்களுடைய "தையல் சொல் கேளேல்" குறித்த விமர்சனத்திக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன்.
Deleteபதிலளிக்கலாமா?
நிச்சயமாக. அதே பதிவில் பதிலளியுங்கள். வாசிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். நன்றி!
Deleteநண்பர்களே,
ReplyDeleteமொழி ஒரு கருவி தான், தனது எண்ணங்களை வெளியிட பயன்படுவது
நமது இன குல வழக்கப்படி நாம் எதையுமெ ஒரு உணர்ச்சியுடனே பார்க்க பழகிவிட்டோம், அதன் காரண காரியங்களை பார்க்க தவறிவருகிறோம்,
உண்மை என்னவென்றால், நாம் யாருக்கு அடிமைப்படிகிறோமோ, நம்மை யார் ஆளுகிறார்களோ அவர்களின் பழக்க வழக்கங்களையும், நடை உடை பாவனைகளையும் நாம் மிகவும் அதிகமாக விரும்புவோம், அதை கைகொள்ள பெரு முயற்சி செய்வோம், அதோடு மிகவும் முக்கியமானதும், தேவையானதுமான பொருளாதாரம் வழி வகைளும் அதோடு ஒட்டிக்கொள்ளும் போது இன்னும் வேகமாக நாம் அதன் பால் கவரப்படுவோம், இதுதான் உண்மை, இதுதான் காலந்தோரும் நடந்துவருகினறது கண்கூடு.
இந்த பூவுலகில் வாழ பொருள் இன்றியமையாதது, அது இல்லையென்றால் இந்த உலகம் நமக்கானதல்ல, எந்த ஒரு மொழியானாலும், மதமானாலும், பழக்கமானாலும், மனிதனானலும், பொருளிலிருந்து விலகும் போதோ அல்லது அதை தடை செய்யுமபோதோ, அந்த மதமோ, மொழியோ, பழக்கவழக்கமோ உறுதியாக காணாமல்போகும்,
ஒரு மதம் வளர அல்லது மொழி வளர அது பொருளாதார காரணங்களோடு இணைக்கப்பட வேண்டும்,
நமது நாட்டிலே 2300 வருடங்களுக்கு முன்பு இந்து மதம் என்ற ஒன்று இருக்க வில்லை, ஏன் 150 வருடங்களுக்கு முன்பு கூட நமது இந்து மதம் என்ற ஒன்று இல்லை, இது மிகப்பெரும் விவாதம் இது தற்போது வேண்டாம்,
அப்போது தான் வேதம் என்று சொல்லக்கூடியவைகளீன் காரணமாக மிகப்பெரும் வேள்விகளும், யாகங்களூம், சமுதாயத்திலே உயர்ந்த இடத்தில் இருந்த அந்தனர்களுக்கு தட்சினைகளாலும் மிகப்பெரும் பாதிப்படைந்த மக்கள் ஒரு தேவ தூதனை எதிர்பார்த்திருந்தார்கள், அப்போது தான் நாம் இந்து மதம் என்று சொல்லக்கூடிய மதத்திலிருந்தும், அங்கே இருந்த வருணாசிரம வெம்மை தாளாமல் புத்த மதத்திற்கும், சமண மததிற்கும் ஓடினார்கள் இந்திய மக்கள்,
ஆனால் காலப்போக்கில் நடந்து என்ன நாம் அனைவருக்கும் தெரியும்,இரு மதங்களூம் ஏறக்குறைய நாட்டை விட்டே சென்றுவிட்டன, அது எப்படி?
அசோகர் முதலான மிகப்பெரும் சக்கரவர்த்திகளால் ஆதரிக்கப்பட்டதும், இன்று நாம் வண்ங்குகின்ற அனைத்து சைவ கோயில்களும் புத்த கோயில்களே என்றும் , வைணவ கோயில்கள் அனைத்தும் சமண கோயில்களே என்று தொல்லியல் துறை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இன்றும் காஞ்சியை சுற்றி சமணர்களின் சிலைகளை நாம் கண்டெடுக்கின்றோம்
இவ்வளவு பெருமை வாய்ந்த இரு மதங்களும் இந்த நிலை அடைய காரணம் என்னவென்றால், அது போதித்த கொள்கை தான் முழு முதற்காரணம் புத்த சமண சமய கொள்கைகளை படித்து பாருங்கள்,மக்களை அது பொருளிலிருந்து விலகி இருக்க சொல்கிறது, ஆசை படாதே ஆசையே துன்பத்திற்கு காரணம் இவ்வாறாக அதன் கொள்கை செல்கிறது
இன்று இந்தியாவில் இந்த இரு மதத்தை பின்பற்றுகிறவர்கள் தான் மிகப்பெரும் செல்வந்தர்கள் அதுவேறு கதை, ஆனால் அம்மதங்கள் பெருவாரியான மக்களை கவர வில்லை
பொருளாதார காரணங்களிலிருந்து விலகியது தான் முக்கிய காரணம்
ReplyDeleteஆனால் இந்து மதத்திலோ பூஜைகளூம் புனஸ்காரங்களூம், நிறைய உண்டு,
நமது கடவுள்கள் உடல் நிறைய தங்கங்களையும், வைரங்களையும், கணக்கில்லாமல் அணிந்து கொண்டும், தங்கத்திலே விமானங்களும் கொடி மரங்களும் வைத்துக்கொண்டு மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கின்றன,
நமது மதம் அனைத்து விதமான பரிகாரங்களையும், விமோச்சனங்களையும் தருகின்றது, நீங்கள் குபேரனாக வேண்டுமா? நினத்தது நடக்க வேண்டுமா?
என்று பல விதமான பட்டியல் வைத்துகொண்டு மக்களை தன்பால் ஈர்க்கிறது
ஆனால் புத்த சமண மதத்திலோ இதுவெல்லாம் கிடையாது
நாம் நினைக்கலாம் இந்த்தியாவை தவிர மற்ற நாடுகளில் அம்மதம் உள்ளதே என்று ஆம் உள்ளது ஆனால் அது புத்தர் சொன்ன மதம் அல்ல, அது தீர்த்த்ங்கரர்கள் கூறிய சமண மதம் அல்ல பலவித மாறுபாடுகளூடன் கூடிய மதம் அது,
மனித வரலாறு எப்பொதுமே பொருளை நோக்கித்தான் நகரும்,உலக
வரலாற்றில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட காரணம்,புதிய நாடுகளையும் கடல்களையும் கண்டுபிடிக்க காரணம் இந்தியாவில் இருந்த பொன்னும் பொருளூம், வாசனை பொருள்கள் தான், இந்தியாவை தேடி அமெரிக்கா செல்ல தூண்டியது,உலகை சுற்றிவர செய்தது இதுவெல்லாம் வரலாறாகிப்போனது
இப்போது மொழிக்கு வருவோம், நாம் இன்று பேசி பழகி சிறு சிறு சண்டைகள் போட்டு சமாதானமாகி செல்ல பயன் படுத்தும் தமிழ் மொழியின் வரலாறு நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம், தெரியாமலும் போகலாம்,
மொழியை வைத்து அரசியல் பேசும் நம் நாட்டில் துரதிருஷ்டவசமாக அதிலிருக்கும் பொருளாதார அரசியல் நம் கண்ணுக்கு தெரியாமலே போகிறது, இன்னும் சொல்லப்போனால் மறைக்கப்படுகிறது
மனிதன் உயிர் வாழ தேவையானவற்றை தேடி செல்கிறான்,அப்போது ஒரு கேள்வி பிறக்கிறது உயிர் வாழ்வது முக்கியமா அல்லது மொழி முக்கியமா?
இந்த் இடத்திலே மொழியை கைவிட வேண்டி வருகிறது,
அவ்வாறு கைவிட்டுத்தான் வந்திருக்கிறோம்,பொருளாதார தேவையை பூர்த்திசெய்கிறவற்றை தேர்வு செய்கிறோம், தேவை யில்லாத ஒளிவட்டம் கொடுத்தும், பற்று வரவு என்று நமமை நாமே புகழ்ந்து கொண்டிருப்பது அறிவீனத்தையே குறிக்கும், மாறாக அப்பற்றோ வரவோ, தம்மை சார்ந்த மக்களுக்கோ, மொழிக்கோ மிகப்பெரும் கேடாய் முடியும்
இன்று தமிழ்மொழி, பொருளாதார விவகாரங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது கண்கூடு,
நம் மொழி எப்போது அப்பொருளாதாரத்தை கைகொள்கிறதோ அப்போதுதான் அனைத்து தீர்வுகளும் கிடைக்கும்,
அப்பொருளாதாரத்தை கைக்கொள்வது எப்படி?
விவாதம் தொடரும் ,,,,,