ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2014

ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை.


அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ்பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 'பாட வாரியான பணி நியமன வரிசையில், தமிழை,நான்காவது இடத்தில் வைத்திருப்பது தான், இதற்கு காரணம்' என,தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, நேற்று முன்தினம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கிஉள்ள போதும், தமிழ் பாடத்திற்கு, 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.

ஆங்கிலத்திற்கு அதிகம் :

ஆங்கிலத்திற்கு, 2,822 இடங்களும், வரலாறு பாடத்திற்கு, 3,592 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அறிவியல் பாடத்திற்கு, 1,600க்கும் அதிகமான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தமிழ் பாடத்திற்கு மட்டும், பணியிடங்கள் எண்ணிக்கையை குறைத்து வழங்கியதற்கு, தமிழ் ஆசிரியர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து, தமிழ் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: அரசியல் தலைவர்கள், தமிழ் தமிழ் என, மூச்சுக்கு, முன்னூறு முறை கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தில், தமிழ் பட்டதாரிக்கு ஏற்பட்டுள்ள உண்மையான நிலை, இது தான். தமிழ் பாடத்தில், 9,500 பேர் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற்றபோதும், 772 பேருக்கு தான், வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது.தமிழுக்கு முன்னுரிமை வேண்டும்மற்ற பாடங்களுக்கு இணையாக, தமிழ் பாடத்திற்கும், வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதில், தமிழ் பாடத்திற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு, தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, தமிழக தமிழாசிரியர் கழகத்தின், சென்னை மாவட்ட தலைவர், தாயுமானவன் கூறியதாவது: ஆசிரியர் நியமன வரிசை, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம் என, உள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனில், ஒரு வகுப்பில், 120 மாணவர்கள் இருந்தால், முதலில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, மூன்று பாட ஆசிரியர் நியமிக்கப்படுவர். அதே வகுப்பில், 160 மாணவர்கள் இருந்தால் தான், தமிழ் பாடத்திற்கு, ஒரு பணியிடம் கிடைக்கும். அடுத்த 40 மாணவர்கள், கூடுதலாக இருந்தால் தான், ஆங்கிலத்திற்கு ஒரு பணியிடம் கிடைக்கும். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால், எட்டாம் வகுப்பு எடுக்கும் தமிழ் ஆசிரியரையே, 10ம் வகுப்பு தமிழ் பாடமும் எடுக்க சொல்கின்றனர். இதனால், புதிதாக ஒரு பணியிடம் கிடைப்பது தடைபடுகிறது. ஆங்கிலத்திற்கும் இதே நிலை தான். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் இதுவரை, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர் தான், ஆங்கில பாடம் நடத்தி வந்தனர்.தற்போது தான், முதல் முறையாக, நேரடியாக, ஆங்கில பட்டதாரி ஆசிரியர்நியமிக்கப்படுகின்றனர். அதனால், ஆங்கிலத்திற்கு, கூடுதல் பணியிடம் கிடைத்து உள்ளது.பணி நியமனத்தில், தமிழை முதலில் சேர்க்க வலியுறுத்தி, பள்ளிக்கல்வித் துறை செயலர், சபிதாவிடம், கோரிக்கை மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

காரணம் என்ன? :

தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து,டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் கூறியதாவது:காலி பணியிடங்களில், 50 சதவீதத்தை, பதவி உயர்வு மூலமும், 50 சதவீதத்தை, நேரடி பணி நியமனம் மூலமும், கல்வித் துறை நிரப்புகிறது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 66.6 சதவீத இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே, நேரடியாக நியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால்தான், தமிழ் பாடத்திற்கு, இடங்கள் குறைவாக வருகின்றன. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.கல

8 comments:

  1. TNTET 2013 CASTE WISE FIRST MARKS IN ENGLISH, TAMIL.MATHS,HISTORY visit theinbornteachers.blogspot.in

    ReplyDelete
  2. Dear mani sir counselling entha mathiri nadakum! District or state

    ReplyDelete
  3. VERY IMPORTENT NEWS FOR ABOVE 90 TEACHERS.
    TET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் 5% மதிப்பெண் தளர்வு ,மற்றும் சில வருடங்களுக்கு முன் எடுத்த மதிப்பெண்ணை ,இப்போது படித்த மாணவர்களுடன் ஒப்பிடும், முறையற்ற wheitage முறையால் பாதிப்படைந்த ஆசிரியர்களே ,(பாதிப்பு அடைய உள்ள தாள் 1 க்கும் சேர்த்துத்தான் )
    * வெளியிடப்பட்ட தாள் 2க்கான தற்காலிக பட்டியலில் (82-89) மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர் .இதனால் நமக்கு பாதிப்பு உள்ளதால் சட்டத்தின் துணையுடன் நம் உரிமையை கேட்கலாம்,இதுபோன்று பதிப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை தந்த பல உயர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நம் நாட்டு சட்டத்தில் உள்ளன .
    பணி பெற ஒரே வழி ......
    *நான் 5% மதிப்பெண் தளர்வால் பதிப்படைகிறேன் அதனால் எனக்கு பணிகொடுத்துவிட்டு பின் 5% தளர்வில் உள்ளவர்களை பூர்த்தி செய்யுங்கள் என தனிநபர் (குழு)மனு தாக்கல் செய்தால் உங்களுக்கு பணி கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .சந்தேகம் இருந்தால் வழக்கறிஞர் அம்மா தாட்சாயினி(உயர் நீதிமன்றம்,சென்னை.)போன்றவர்களிடம் சென்று கேளுங்கள்.

    காரணம்....
    *TET தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி என வேலைக்கு ஒரு GO வெளி இடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்து தேர்வு பட்டியல் தயாரித்த பின் ,தகுதி தேர்வில் மதிப்பெண் குறைத்து GO வெளியிட்டதால் பாதிப்பு இருப்பின் அதை முறைபடுத்த நீதிமன்றகளுக்கு அதிகாரம் உள்ளதை நம்புவோம் ,நமக்காக நாம் நம் உரிமையை பெற போராடி கண்டிப்பாக வெல்வோம் .
    * இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது அதனால்,அதை வலுபடுத்தும் விதத்தில் , நாமும் குழுவாக சேர்ந்தோ ,அல்லது தனி நபராகவோ, CHENNAI,MADURAI HIGH COURT ல் வழக்கு தொடருவோம் முதலில் நியமன STAY ORDER வாங்குவோம் வாருங்கள்.......
    ''இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
    துணிந்துவிட்டால் உலகம் நம்மல் கையிலே''

    உச்ச நீதிமன்றம் வரை செல்ல துணிந்துவிட்டோம் ,மனதில் தைரியம் உள்ளவர்கள் உடன் வாருங்கள்..வெல்வது உறுதி.

    *ஏற்கனவே களத்தில் உள்ள நண்பர்களை அணுகவும் .

    தொடர்புக்கு
    RISHI CHENNAI 9962157723
    RAJA BHARATHI 9442186176
    9003540800
    MOHAMAD HIDAYATHULLA 9750302137
    SARANESH 8940121034
    KARITHIK 9677191522

    ReplyDelete
  4. CASE PODA VIRUPPAM ULLAVARGAL INRU NAMATHU NANBARGAL LAWYERS PAARKKA SELGIRARGAL UDANE ANUGAVUM....

    ReplyDelete
  5. TRB SELECTED LIST 2011 12 under tamil medium quota இதுவரை தேர்வு செய்யப்பட்டும் வேலை தராமல் அரசு 18மாதமாக‌ ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium க்கு இப்போது வேலை கிடைக்கும் என்பது ரொம்ப சந்தோஸம். இருப்பினும் நம்பிக்கை வரவில்லை , வேலை உத்திரவு வந்த பிறகுதாண் நம்ப முடியும். நான் பல தடவை TRB , palvikalvithurai, சென்ரு வந்தும் சரியான பதில் இல்லை. ஆண்டவன் தான் நம்மை காப்பாற்றனும்.

    ReplyDelete
  6. managaratchi,nagaratchi,adithiravidar nalaththurai pallikalin vacant engey? athu patri entha vacantum sollavillaiye een? vacantey illaiya?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி