பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு---புதிய தலைமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2014

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு---புதிய தலைமுறை


முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
 

                                                                      


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. இதையடுத்து 2012 மற்றும் 13 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதேபோல், கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதித் தேர்வு பட்டியலும் , ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் தேர்வான 543 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட 6 பாடங்களின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

தேர்வுப் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு பட்டியலை விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானோர், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகள் மூலம் பணிநியமனம் செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.


29 comments:

  1. ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    ஆனால் இதில் ஒரு சோகமும் உண்டு. நான் தகுதி தேர்விலே 108 மதிப்பெண் Bc தமிழ். எனக்கு வேலை இல்லை. அரசின் தவறான வெயிட்டேஜ் முறை தான் பாதிப்புக்கு காரணம். எனக்கு யாரும் சமாதானம் சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டில் நல்லாட்சி என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. எனக்கு தெரிந்து 40% பேரின் வேலை பரிக்கப்பட்டு இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
    இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்து விட்டேன்.

    பாதிக்கபட்டவர்கள் யாராக இருப்பினும் போராட தயங்காதீர். இன்று தூங்கினால் எதுவும். மாறாது. எதிர்காலமும் போய்விடும். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வழக்கு தொடர்வது மட்டும் தான். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Enna panraathu sir ellorum varuvaangala sir

      Delete
    2. ATOZ SIR, what can we do sir, here after is there any possibilities to file a case? After two cases judgement we will get the good news. re list may come.

      Delete
    3. suyanelathu ku naiba pli aieto,mark mathunava ga rule mathe erukunu ethu ku da thareya tha, nata alurava ga soilleruka la, pg trb mathere mark padi potuerukala sir, ethuku nailla mudeu yadukanu sir,etha veda kudathu sir,

      Delete
    4. Atoz brother I too got 103 mark in Tet my wgt 70.29 but I didn't get the job. Manasu romba valikuthu. Evlo try panalum samathanam agala uyira kuduthu padichathu wastea akitangale

      Delete
    5. The above weight age system is against to the senior teachers.so awake all the senior teaches.we will form one organization and next we will go to the Court or meet the CM is possible.so affecting senior teachers please contact this no: 88833 22444

      Delete
  2. GOOD MORNING MANIARASAN SIR, SIR ENTHA PAPER-ILUM SECOND LIST PATTRIYO

    OR WELFARE SCHOOLS, CORPORATION SCHOOLS VACANT PATRIYO

    PODAVILLAIYAE ., 2ND LIST KANIPPAKA VIDUVARGALA., TET MARK 107 MBC

    68.21 ., FEMALE., PLS REPLY.,

    2ND LIST VIDUVARGALA., ILLAYA ? PLS. CONFIRM., ENDHA PAPER-ILUM SEIYTHIYAE

    2ND LIST PATRI PODAVILLAI., WHY SIR ., ADIDRAVIDAR SCHOOLS., WELFARE SCHOOLS, CORPORATIONS SCHOOLS VACANCY EVVALOVU., EPPOTHU LIST VIDUVARGAL.,

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. MR. PRATHAP AN SIR, MY DEAR FRIEND VALA SUBRAMANI SIR, SRI SIR, MANI SIR,

    MEENDUM VAZHTHUKIRAEN.,

    SIR, PLS. UNGAL SERVICE MR. VIJAYAKUMAR CHENNAI, SRI ONLY FOR U SIR, MANI SIR, RAJALINGAM SIR, UNGAL SEVAI MEENDUM ENGALUKKU THEVAI.,

    EPPOTHUM POL UNGAL TET NANBALUKKU UTHAVUNGAL., PLS. 2ND LIST

    SAMPATHAMAGA ENTHA NEWS KIDAITHALUM UDANAE COMMEND KODUNGAL., DEAR

    FRIENDS.,

    ReplyDelete
  5. I got weightage 65.13 but my name is not in the selection list but below 65 some candidates are selected in the final list as same community-BC. What the reason pls reply me

    ReplyDelete
  6. Kalviseithi vasagarkal anaivarukkum enadhu kaalai vanakkangal. Puthiya asiriyarkalaga therchi petrulla anaivarukkum enadhu manamarndha vaazthukkal. Mr.mani, sri sir, prathap sir anaivarukkum ungal pani sirakka en vaazthukkal
    Nanum btyaga thervu petrullen i m happy to say. Thank u kalvi seithi.

    ReplyDelete
  7. female reservation and ph for them Mr sathish but wait and see surely second list out soon

    ReplyDelete
    Replies
    1. Kandipa second list iruka plz reply

      Delete
    2. மதுரை மாநகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை - 66
      சென்னை மாநகராட்சி பள்ளிகள் எண்ணிக்கை - 282
      கோவை மாநகராட்சி பள்ளிகள் எண்ணிக்கை - 81
      கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் எண்ணிக்கை - 289
      (மதுரை,தேனி மற்றும் திண்டுகல்)
      இதனை தவிர்த்து BC/MBC ,SC/ST பள்ளிகளும், Minority பள்ளிகளும்,நகராட்சி பள்ளிகளும் உள்ளன. இவற்றில் உள்ள பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் வாய்ப்பு (TRB Notification படி) உள்ளது.

      Delete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. BCM 5% RELAXATION CANDIDATES 1PAPER TOTAL 324 CANDIDATES ONLY THIS IS 100% TRUE
    BY
    ASMA
    TIRUPUR

    ReplyDelete
  10. SIR
    ,pls coleect details for my question & reply sir am pissed off totally. why then didnt announce total vaccencies as 2932 for english. list came only till 2865. pls sir collect details abt it need ur reply

    ReplyDelete
  11. I am selected for history . Thanks to kalviseithi...

    ReplyDelete
  12. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

    பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
    9003540800

    ReplyDelete
    Replies
    1. Ungalin sattaporattam vellattum vaazhthukal nanbare...muyarchi udayar egalchi adaiyaar

      Delete
    2. Thaguthi thervil 103 mathipen petravarkalelam Thaguthi aardvark agivitom. Thamilaga arasu valga valga. Thpu.

      Delete
  13. Pg trb la select anavangalala Namaku chance kidaikuma. Any chance further

    ReplyDelete
  14. Hi bcm candidates send your tet mark and weightage to bcmtet@gmail.com . we will appoint gov-aided school also.we will prepare entire rank list for bcm.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி