நேதாஜிக்கு பாரத ரத்னா தேவை இல்லை: மரணத்தின் மர்ம முடிச்சை அவிழுங்கள் - மாலைமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2014

நேதாஜிக்கு பாரத ரத்னா தேவை இல்லை: மரணத்தின் மர்ம முடிச்சை அவிழுங்கள் - மாலைமலர்

இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன.


இவர் தைவான் நாட்டில் 18-8-1945 அன்று ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985ல் இறந்து விட்டதாகவும் பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட போதும் அறுபதாண்டுக்குப் பிறகும் நேதாஜி இறப்பின் மர்மம் விலகவில்லை.

நேதாஜி பிழைத்திருந்ததற்கான சாத்தியங்கள், சாட்சியங்கள் தவிர்க்க முடியாதவை. அவர் மீது மக்கள் வைத்திருந்த அளவு கடந்த மரியாதையை வெளிப்படுத்த முடியாமல் தடுத்தது யார்? அரசால் நியமிக்கப்பட்ட குழுக்களின் முடிவுகள் வெவ்வேறாக இருப்பது ஏன்? என்பது புரியாத மக்கள் அவர்களின் அன்புக்குரிய தலைவர் விமான விபத்தில் இறந்து விட்டதாகக் கூறப்படுதை நம்பவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டின் ’பாரத ரத்னா’ விருதுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக யூகங்கள் உலவி வருகின்றன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘நேதாஜி கடந்த 1945-ம் ஆண்டு முதல் காணாமல் போய் விட்டார். ஒருவரின் இறப்புக்கு பிறகு, அந்நபருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றால் முதலில் அவர் இறந்ததை உறுதிப்படுத்த வேண்டும். அவரை கவுரவிக்க வேண்டும் என்றால் அவர் எப்போது, எங்கே, எப்படி இறந்தார்? என்பது தொடர்பான ரகசியங்களை முதலில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி உள்பட 43 பேருக்கு பிறகு நேதாஜிக்கு இப்போது பாரத ரத்னா விருது அளிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. பாரத ரத்னாவை விட நேதாஜியின் மதிப்பு மிகவும் உயர்ந்தது. இந்த விருதை வாங்க எங்களில் யாரும் போக மாட்டோம்’ என்று நேதாஜியின் குடும்பத்தினர் போர் கொடி உயர்த்தியுள்ளனர்.

19 comments:

  1. NETHJI IS A REAL NATIONAL LEADER

    ReplyDelete
  2. DEAR KALVISEITHI PLS PUBLISH PAPER 1 BACKLOG VACANCY LIST NOW. VERY USEFUL IN THE TIME.

    ReplyDelete
  3. Hey! Kalviseithi - friends...

    * வெற்றி பெற்ற அனைத்து கல்விச்செய்தி நண்பா்களுக்கும் வாழ்த்துக்கள்..

    அனைத்து நண்பா்களின் ஆதரவுடனும், ஆன்டவாின் ஆசிா்வாதத்துடன் -
    ஆங்கில ஆசிாியாராக பணிபுாியும் வாய்ப்பு - எனக்கும் கிடைத்துள்ளது..

    ***************************************மிகவும் மகிழ்ச்சி**************************************

    * இருப்பினும்,

    தோ்ச்சிபட்டியலில் இடம் பெறாத நண்பா்கள் மனம் தளர வேண்டாம்..

    - நண்பா்கள் குறிபிடுவது போன்று காத்திருங்கள், எதிா்கால வாழ்வில் மிகப்பொிய வாய்ப்பு கிட்டும்...!

    நம்பிக்கையே வாழ்க்கை!!!

    * தோல்வி கண்டு சோா்ந்து விடாமல் - முயற்சித்து கொண்டே இருங்கள்..

    "தோல்வி என்பது நம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முதல் வாய்ப்பு"

    Failure does not mean I am a failure..
    It does mean I have yet to succeed.

    வாழ்க்கைப் பயணத்தில் இனி வரும் அடுத்த வெற்றிக்காக என் வாழ்த்துக்கள்..
    ---------------------------------------------------------------நன்றி--------------------------------------------------------

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே....

      Delete
    2. Sri சார். மீடியம் என்னும் இடத்தில் G என்றும் CT என்னும் இடத்தில் GW என்றும் உள்ளது..இதற்கு என்ன சார் அர்த்தம் ..

      Delete
  4. One god be the world... GOD IS GREAT...

    ReplyDelete
  5. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

    பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
    9003540800

    ReplyDelete
  6. Congratulation to the selected teachers. Thank u kalvi seithi. ThankSri sir , Mani sir and marichamy sir. Marichamy sirwhat u told to me that happen sir .

    ReplyDelete
  7. Yes Mr Sri.

    Still there is secrecy behind the great late Nethaji death. After the the independence of India, why the Our Government still keep mum.

    ReplyDelete
  8. Special TET:சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்
    PH BACKLOG VACANCIES IN TRB ALONE FROM 2007
    B GRADE – PG & BT PAPER 2 = 777
    But Now only 200 PH BACKLOG VACANCIES released.

    ReplyDelete
  9. TN TET: தேர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்கக்கோரும் கோரிக்கை மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அப்பொருள் சம்மந்தமாக அரசு துணைச்செயலர் ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்
    at http://thamaraithamil.blogspot.in/
    my cell : 9600691977

    ReplyDelete
    Replies
    1. any paper 2 Eng passed candidates in Tirupur dist msg me 7598893499.

      Delete
    2. Why ?i am english passed candidate cuddalore dist

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Salute Our national Hero Nethaji....

    ReplyDelete
  12. Mr.Maniarasan ranganathan sir, pls give ur mob no. my email id is pranavdevupriyam@gmail.com, paper 2 minority list eppothu viduvarkal. pls contact me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி