முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு இறுதி முடிவு வெளியீடு - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2014

முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு இறுதி முடிவு வெளியீடு - தினகரன்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றின் இறுதி முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.

அரசு மேனிலைப் பள்ளிகளில் 2012&2013ம் ஆண்டுக்கான காலிப் பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், விளையாட்டு கல்வி இயக்குநர் கிரேடு&1 ஆசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. கடந்த அக்டோபர் 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதற்கான கீ&ஆன்சர் மீதுதொடரப்பட்ட வழக்கின் காரணமாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் பின்னர் வெளியிடப்பட்டு கடந்த ஜனவரி 17ம் தேதி சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட முதுநிலை பட்டதாரி தேர்வில் ஆங்கிலம்(347), கணக்கு(288), வேதியியல்(220), தாவரவியல்(192), வரலாறு(173), நுண்ணுயிரியல்(31) பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் சிலரின் விவரங்கள் விடுபட்டுள்ளதாகவும், சிலரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரியல் பாடத்தில் மட்டும் 13 பேர் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைத்து நியமனங்கள் வழங்கப்படும்.

மேலும், பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதி முடிவையும் வெளியிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் சான்று சரிபார்ப்பில் பங்கேற்காமல் விடுபட்டவர்களுக்கு கடந்த மாதம் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. 

இதன் பேரில் இறுதி பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில் தொடக்க கல்வி துறையில் பணி நியமனம் செய்ய இயற்பியல் 65, வேதியியல் 65, தாவரவியல் 33, விலங்கியல் 32 பேர் ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை யின் கீழ் வரும் உயர்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்வதற்காக தமிழ் 772, ஆங்கில் 2865, கணக்கு 993, இயற்பியல் 642, வேதியியல் 642, தாவரவியல் 275, விலங்கியல் 275, வரலாறு 3659, புவியியல் 916 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

20 comments:

  1. Dear friends...I have selected for ENGLISH B.T...I am very happy...thanks for your love and support...all the best for other candidates...

    ReplyDelete
  2. Congrats to all the selected trs.I am also selected in physics

    ReplyDelete
  3. Vijaykumar chennai sir
    Next list erukuma

    ReplyDelete
  4. ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    ஆனால் இதில் ஒரு சோகமும் உண்டு. நான் தகுதி தேர்விலே 108 மதிப்பெண் Bc தமிழ். எனக்கு வேலை இல்லை. அரசின் தவறான வெயிட்டேஜ் முறை தான் பாதிப்புக்கு காரணம். எனக்கு யாரும் சமாதானம் சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டில் நல்லாட்சி என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. எனக்கு தெரிந்து 40% பேரின் வேலை பரிக்கப்பட்டு இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
    இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்து விட்டேன்.

    பாதிக்கபட்டவர்கள் யாராக இருப்பினும் போராட தயங்காதீர். இன்று தூங்கினால் எதுவும். மாறாது. எதிர்காலமும் போய்விடும். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வழக்கு தொடர்வது மட்டும் தான். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. I am also affected by weightage method

      Delete
    2. I am ready. I am also affected by go no 71

      Delete
    3. my weitage 66.18 tet mark 100 bc tamil I am not selected I am join with your case please phone number

      Delete
    4. நான் select ஆகவில்லை. இந்த மாதிரியான weightage system இருக்கும் வரை நான் எப்போதும் select ஆக மாட்டேன். 20 வருடங்களுக்கு முன் +12, படித்தது என் தவறா? முடியவில்லை. அழுகையை நிறுத்த முடியவில்லை. 6 மாத கடின உழைப்பு எல்லாம் வீண்.

      Delete
  5. PAPER-2 க்கு இரண்டாம் தேர்வு பட்டியல் வருமா? .தகவல் தெரிந்த நண்பர்கலே கூறுங்கள்

    ReplyDelete
  6. My weightage 65.13 for BT english but my name is not in the selection list. Below 65 some candidates are in the selection list as same BC community. What's the reason pls reply me

    ReplyDelete
    Replies
    1. Mr. sathis kumar ! just check the rtesult once again both roll number list and selected list thoroughly. if it continues as the same problem. immedietly go to CHENNAI TRB office with all your certtificates. do it fast. dont delay. DONT WORRY you will get the good result. MY BEST WISHES FOR U.

      Delete
  7. nanum case poda vareen pa..,my wt 65..

    ReplyDelete
  8. Replies
    1. நான் select ஆகவில்லை. இந்த மாதிரியான weightage system இருக்கும் வரை நான் எப்போதும் select ஆக மாட்டேன். 20 வருடங்களுக்கு முன் +12, படித்தது என் தவறா? முடியவில்லை. அழுகையை நிறுத்த முடியவில்லை. 6 மாத கடின உழைப்பு எல்லாம் வீண்.

      Delete
  9. Go 71 ethirthu poradavillai enill seniors ku eppothum velai kidaika vazhi illai

    Go 71 pathikapaduvathu only seniors and high tet mark candidates only
    Judge nagamuthu avarkal dinamalar parthu thirppu kuriyatha sonnar engal kuraikaliyum en parisilikavillai
    Inru kidaikavittal sari etru kolkirom

    anall enrumay kidaimudiyathu poll thirpu alithathu vethanai alikirathu

    Thirpu alipathu seniorsku pathipu varum vakaiyil irupathai trb en sutti katta villai enumpothu varuthathai alikirathu
    Trb kuraikalai sutti kattiyuruka vendum

    Anaivarum job pera vendum
    Anall seniors job pera vazhiyey illaiyey
    Job pera 10 andukal wait seithu piragu tet ill 104 eduthu velai illai enum pothu manathu valikirathu

    ReplyDelete
    Replies
    1. Babu prasad sir
      நீங்கள் சொல்வது மிகவும் சரி. இந்த மாதிரியான weightage system இருக்கும் வரை 20 வருடங்களுக்கு முன் படித்தவர்களுக்கு அரசு வேலை என்பது கானல் நீர் தான். நாம் இளைய தலைமுறையை விட அதிக மதிபெண் எடுத்தும் பணிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை .காரணம் weightage system.
      அழுகையை நிறுத்த முடியவில்லை. 6 மாத கடின உழைப்பு எல்லாம் வீண்.

      Delete
  10. Mr.Maniarasan ranganathan sir, pls give ur mob no. my email id is pranavdevupriyam@gmail.com, paper 2 minority list eppothu viduvarkal. pls contact me

    ReplyDelete
  11. Backlog means what?? Then what is mean by BG???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி