பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2014

பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு.


அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேரஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 1090 தொடக்க மற்றும் ௩௦௭ நடுநிலை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இதில், அரசுப்பள்ளிகளில் மட்டும், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதிநேர கலையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு,

இம்மாத துவக்கத்தில், மாதந்தோறும் 2,000 ரூபாய் ஊதிய உயர்வுஅளிக்கப்படும் என தகவல் வந்தது.தொடர்ந்து, சம்பள தொகை அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, மாவட்டந்தோறும் அரசுப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர கலையாசிரியர்களது தகவல்களை சேகரித்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பணிப்புரியும் பகுதிநேரகலையாசிரியர் குறித்த விபரங்களை அனுப்புமாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தின் சார்பில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி