சர்வீஸ் கமிஷன் தேர்வு பட்டியல் ரத்து : விதான் சவுதாவை முற்றுகையிட முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2014

சர்வீஸ் கமிஷன் தேர்வு பட்டியல் ரத்து : விதான் சவுதாவை முற்றுகையிட முடிவு

கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (கே.பி.எஸ்.சி.,) நியமனத்தை ரத்து செய்துள்ள, அரசுக்கு எதிராக, தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், வரும், 16ல், விதான் சவுதாவை முற்றுகையிட தீர்மானித்துள்ளனர்.

மறு பரிசீலனை : இது தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபடும் பார்வை குறைபாடுள்ள கெம்பஹொன்னய்யா கூறியதாவது: அரசு தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும், என, தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தும், முதல்வர் சித்தராமையா எங்கள் பிரச்னைகளை கேட்க தயாராக இல்லை. தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என, மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். வேறு வழியில்லாமல், விதான் சவுதாவை முற்றுகையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், விதான் சவுதாவை முற்றுகையிட, வாய்ப்பளிக்காமல், அரசு, தன் தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.கே.பி.எஸ்.சி., வரலாற்றிலேயே, முதல் முறையாக, பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதி, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். என்னை போன்ற பார்வை குறைபாடு உள்ளவர்களும் கூட, தேர்வு எழுதி தேர்வாகியிருக்கிறோம். இப்பட்டியலை ரத்து செய்தால், என்னை போன்றவர்களின் கதி என்ன. அரசு இவ்விஷயத்தை கவுரவ பிரச்னையாக நினைக்காமல் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார். தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மிருதுஞ்சயா கூறுகையில், "கடந்த, 2011 தேர்வு பட்டியலில், முன்னாள் ராணுவ வீரர்கள் 31 பேர் இடம் பெற்றுள்ளனர். திடீரென்று பட்டியலை ரத்து செய்தால், என்னை போன்றவர்களின் நிலை என்ன, ராணுவத்தில் உழைத்தவர்களுக்கு அரசு தரும் கவுரவம் இதுதானா?” என்றார்.

போராட்டக்காரர்கள் எச்சரிக்கை : அரசு, தன் தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என, வலியுறுத்தி, நடத்தி வரும் போராட்டம், நேற்று, 26வது நாளை எட்டியது. நேற்றைய போராட்டத்தில் பெரும்பாலான அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அரசு தன் முடிவை மாற்றி கொள்ளும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என, போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர். போராட்டம் நடத்துபவர்களில், 10 பேர், சோர்வடைந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். போராட்டம் நடக்கும் சுதந்திர பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி