ஆசிரியர்கள் நீக்கத்திற்கு இடைக்காலத்தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

ஆசிரியர்கள் நீக்கத்திற்கு இடைக்காலத்தடை.


தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி,பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில்நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் & 2009 பொருந்தாது என கடந்த 6.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சியின்றி பணியமர்த்தப்பட்ட எங்களை, பணியில் இருந்து நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். பின் அவர் பிறப்பித்த உத்தரவில் 4 ஆசிரியர்களையும் பணியில் இருந்து நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தார்.

இதுதொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.

5 comments:

  1. WE PRAY GOD TO APPOINT US SOON !

    ReplyDelete
  2. hi friends i'm new to kalvisethi.p1 vacancy athikarikka chance irukka

    ReplyDelete
  3. கல்விச்செய்தி நண்பர்களுக்கு,
    GOOD MORNING TO ALL. BCM full list [STATE LEVEL] தயாரிக்கும் பணி [நண்பர்களின் உதவியால்] முடிவடைந்து விட்டது. எனினும் ஒரு சில ROLL NO விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. BCM பற்றிய DETAILS உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். தொடர்புக்கு : nismahussain2012@gmail.com .இன்னும் சில தினங்களில் BCM full list ஐ நமது கல்விச்செய்தியில் இறைவன் நாடினால் வெளியிட இருக்கின்றோம்.

    ReplyDelete
  4. வழக்கறிஞர் அஜ்மல்கான் அலைபேசி நம்பர் தெரிந்தால் பதிவிடவும் நண்பர்களே!!! நானும் சிறுபான்மை பள்ளியால் பாதிக்கப்பட்டுள்ளேன்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி