கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2014

கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம் - தினமணி

அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், ஊராட்சித் தலைவர் காந்திமதி சேதுராமனை தேசியக் கொடி ஏற்ற, தலைமையாசிரியர் செல்வமணி அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தலைவர் காந்திமதி சேதுராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டார்.

இதன்பேரில், தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விசாரணைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தலைமையாசியர் செல்வமணி, கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். மேலும், பள்ளி அலுவலக ஆவணங்களை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தலைமையாசிரியர் செல்வமணியை இடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வட்டார உதவி தொடக்கக் கல்வி அதிகாரி திருநாவுக்கரசு வியாழக்கிழமை, போலீஸ் பாதுகாப்புடன் தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வந்து இடைநீக்க உத்தரவை செல்வமணியிடம் கொடுத்தார். மேலும் இப் பள்ளியின் தலைமையாசிரியராக அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் ரேகா என்பவர் (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.

3 comments:

  1. athikaari yaar ente theriyaamal erunthirukkalam.adaiyalaattai kettaal thavaraa.ennaiya koduamai idu.edarkkaga idaineekama. maanavarin kalvi kelvikuriyaguthe.pallikku etho arimugam illathor nulaium pothu adaiyalaattai ketpathu eyalbutaane.

    ReplyDelete
  2. மேற்கண்ட சம்பவம் மிகவும் கொடுமையானது. தலைமை ஆசிாியா் நீதிமன்றம் சென்று நீதியை வென்று முதன்மை கல்வி அதிகாரியை பணி நீக்கம் (நிரந்தரமாக) செய்ய வேண்டும். இது முற்றிலும் உண்மையாக இருக்கும் பட்சத்தில்.....
    நண்பா்களே! இதிலிருந்து நம் நாட்டின் ( கலெக்டா் உட்பட) லட்சனம் நன்றாக தொிகிறது. படித்தவர்களுக்கு மதிப்பு இல்லை. அரசியல் வியா(வா)திகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் துணை போகின்ற இது போன்ற அதிகாரிகளை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அடையாள அட்டை கேட்பது என்ன தவறு.... இது போன்ற அதிகாாிகளால்தான் கல்வித்துறை மிகவும் கேவலமாக இருக்கிறது. இது அடையாள அட்டைக்காக நடந்தது இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்ததே!

    ReplyDelete
  3. happy independence day my dear friends.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி