கூகுளில் தேடலில், இனி பாதுகாப்பான வலைதளங்களுக்கே முன்னுரிமை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2014

கூகுளில் தேடலில், இனி பாதுகாப்பான வலைதளங்களுக்கே முன்னுரிமை.


இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வலைப்பதிவில், பாதுகாப்பான அம்சங்கள் கொண்டுள்ள இணையதளங்களுக்கே (http-க்கு பதிலாக https பயன்படுத்துதல்) முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில்,” இந்த அம்சமானது இணையத் தேடலில் 1% மீதே தாக்கம் செலுத்தும். மற்ற அம்சங்களுக்கும் கூகுள் தேடலில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும்.நாங்கள் இணையதள உரிமையாளர்கள் அனைவரும் பாதுகாப்பான இணையதள முறைக்கு மாறவேண்டும் என்றும், இணையம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றும் கருதுவதால், இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.மேலும், இந்நிறுவனம் ஏற்கனவே ‘Gmail’ வலைதளத்தைப் பாதுகாப்பான வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு, கூகுள் தேடல் ‘https’ பயன்படுத்தி, பாதுகாப்பாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

7 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி