உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ்...., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ்....,


உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காரணமாக, மேற்கு ஆப்பிரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எபோலா வைரஸ் குறித்த ஆரம்ப நிலை அறிகுறிகளை அறிவதில் சிரமம் உள்ளதால், இந்த நோய் வேகமாக பரவுகிறது என்றும், அசாதாரண நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.2013-ஆம் ஆண்டு, மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் 2 வயது சிறுவனிடம் இந்த நோய் தென்பட்டது.

அதிலிருந்து மெதுவாகப் பரவிய இந்த நோய்2014-ஆம் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் வெளிப்பட்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் முழுவதிலும் பரவி உள்ளது.உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, 128 பேருக்கு புதிதாக இந்த நோய் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. ஆகஸ்ட் 10 மற்றும் 11- ஆம் தேதிகளில் மட்டும், கினியா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,975 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1,069 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஜெனிவாவில், உலக சுகாதார நிறுவனத் தலைவர் மார்கரெட் சான் கூறும்போது, " எபோலா நோய்க்கு 10 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளோர் தங்களது தினசரி தேவைகளான அத்தியாவசிய பொருட்கள், உணவு என அனைத்தையும் பெறுவதற்கு சிரமப்படுகின்றனர்.பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருமே எல்லை நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

ஆகையால், அவர்களிடமிருந்து மற்ற நாட்டினருக்கு நோய் பரவுக்கூடிய அபாயம் அதிக அளவில் உள்ளது.நோய்த் தடுப்புக்கான வழிகளை உடனடியாக மேற்கொள்ளக்கூடிய நிலை தற்போது இல்லை. அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பதனால் மட்டுமே நோய் பரவுவதை தடுக்க இயலும் நிலை உள்ளது.தற்போது கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளைகவனத்துடன் மேற்கொள்ளாவிட்டால், விரைவில் அதிக அளவிலான மனித இழப்புகளை ஏற்படுத்த நேரிடும்.எபோலா பரவுவதற்குரிய முக்கிய இடமாக ஒவ்வொரு நகரங்களின் விமான நிலையமும் உள்ளது. நோயை மற்ற நாடுகளிருந்து இறக்குமதி செய்துவிடக்கூடிய அபாயத்தை ஒவ்வொரு நாடுகளும், அதன் நகரங்களும் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கினியா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளில், நோய் அபாயகரமான நிலையில் உள்ளது. நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் இங்கு மிக சுலபமாக இருக்கும். இதனால் இந்த நாடுகளின் எல்லையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நோய் உள்ளுக்குள்ளே இருந்து அது தெரியாமல், எல்லைத் தாண்டிச் சென்று நோய் பரவுவதை தடுக்க முடியும். முக்கியமாக, எல்லை ஓரங்களில் உள்ள மக்களை தீவிர கண்கானிப்பில் வைக்க வேண்டும்.ஆனால், இந்த நடவடிக்கை அவ்வளவு சுலபமானதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துவது என்பது மிகவும் கடினம். மருத்துவர்களுக்கு எல்லை என்பது கிடையாது.

மருத்துவர்கள், செவிலிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பாதிப்பு உள்ள பகுதிக்கு கொண்டுவர வேண்டும். ஆகையால் நாம் தற்போது நெருக்கடியான நிலையில் தான் உள்ளோம்.கிராமப்புரங்களில் நோய் தீவிரமடைந்து வருகிறது. அவர்களை மருத்துவக் குழுக்கள் சென்றடைவதில் சிரமம் உள்ளது. இதே நிலை முக்கிய நகரங்களிலும் உள்ளது. மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் கைக்கோர்க்க வேண்டும். மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த விவகாரம் முன்னெப்போதும் இல்லாத ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை செய்த 170-க்கும் அதிகமான சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தற்போது எபோலா நோய் தொற்று ஏற்பட்டுவிட்டது, இதுவரை இதனால் 80 அதிகாரிகள் இறந்துள்ளனர்" என்றார்.

9 comments:

  1. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

    * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

    நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
    உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
    * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

    * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
    சேம்பர் எண் : 222

    வழக்கறிஞர் திரு .சங்கரன்
    சேம்பர் எண்: 354

    வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
    வழக்கறிஞர் திரு நமோ.நாராயணன்

    மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
    நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
    திரு. கருப்பையா 9942342608.

    ReplyDelete
    Replies
    1. Ramasamy go71 highcourt guidance no change go71 change panna rajabarati tension ayiduvar because go71 ku karanam rajabarathi.nasama ponavan avar pondatiku intha go vil vela illayam udane vera oru go matha group form pandrar.

      Delete
    2. i support நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
      திரு. கருப்பையா 9942342608.
      and sathesh kumar sathesh 8760561190
      raja barathi 9843311339




      best of luck

      if u win aqll above 90 will hug u .

      be confident

      monday 18/8/ 14 antru sathesh kumar sathesh thalamaiil

      raja barathi thalamai il befor trb

      Delete
  2. palani m sir,

    நன்றி sir.வானபுரத்திற்கு அருகிலுள்ள தென் கரும்பலூரில் தான் எனது அத்தை வீடு இருக்கிறது.

    உங்களுக்கும் கண்டிப்பாக தாள் 1 வேலை கிடைக்கும் sir.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Mani sir en wtge 72.77.bc.dob1983.any chance sir.plz tell me.itha nambi tan irukken sir

      Delete
    2. இறைவன் அருளால் உங்களுக்கும் கிடைக்கும் sir வாழ்த்துக்கள்.

      Delete
  3. என் விஷயத்தை வெளிப்படையாக சொல்ல விருப்பம் இல்லை . முதலில் சிஸ்டர் ,அப்புறம் பெயர் பின்னர் செல்ல பெயர் . நான் பேசினால் உங்கள் .......... யை என் கோச்சிங் சென்டர் அனுப்பினால் நான் பாஸ் பண்ண வைக்கிறேன் .
    பணம் தந்தால் இந்த முறையே உள்ளே பெயரை சேர்ந்து விடுகிறேன் .எனக்கு அந்த ....... அரசியல்வாதி சொந்தக்காரர் . அவரிடம் கொடுத்து கடந்த முறை பலருக்கு ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்தேன் .நீங்களும் பணம் தாருங்கள் .ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பல்வேறு போலியான வாக்குறுதி .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி