அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் வினா வங்கி புத்தகத்தை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி) வினா எழுப்பினார்.
அப்போது, அனைத்து மாவட்டங்களிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான வினா வங்கி புத்தகத்தை கூடுதல் மையங்களில் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பதில்:
வினா வங்கி புத்தக தொகுப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையத்தின் மூலமாக மிகக் குறைந்த விலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனாலும், அவற்றை விலையில்லாமல் கூடுதல் மையங்களின் மூலம் விநியோகம் செய்வது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்யப்படும்.
வினா வங்கி புத்தகம் உள்பட தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் 90.7 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 90.6 சதவீதமுமாக தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி