யு.பி.எஸ்.சி., தலைவராக ரஜனி ரஸ்தான் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2014

யு.பி.எஸ்.சி., தலைவராக ரஜனி ரஸ்தான் தேர்வு

புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி.,யின் தலைவராக, ரஜனி ரஸ்தான், 64, தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும், யு.பி.எஸ்.சி., யின் தலைவராக உள்ள, பேராசிரியர் டி.பி.அகர்வாலின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த அமைப்பின் புதிய தலைவராக, யு.பி.எஸ்.சி., உறுப்பினராக, தற்போது பணியாற்றும் ரஜனி ரஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஸ்தான், வரும் சனியன்று புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். அரியானா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரஸ்தான், 2010 ஏப்ரல், 19ல், யு.பி.எஸ்.சி., உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி