சென்னை: ''தமிழகத்தில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, பல வகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம்நீட்டிக்கப்படும்,'' என, சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சென்னை, கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்றி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்பது பழமொழி. 'ஏழை சொல் தான், புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும்' என்ற புதுமொழியை, தமிழகத்தில் நிலைநாட்டிக் கொண்டிருப்பது இந்த அரசு.விளை நிலங்கள் வழியே, 'கெய்ல்' நிறுவன குழாய் பதிப்பு திட்டம்; தஞ்சையில், 'மீத்தேன் எரிவாயு' திட்டம்; மரபணு மாற்று விதை திட்டம்; சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீடு போன்றவற்றை, உறுதியாக எதிர்க்கும் அரசாக உள்ளது.சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம், 9,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய்; அவர்களின் வாரிசுகளுக்கான குடும்ப ஓய்வூதியம், 4,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
இதன் மூலம், 1,955 பேர் பயன்பெறுவர். அரசுக்கு, ஆண்டுக்கு 1.43 கோடி ரூபாய், கூடுதல் செலவாகும்.வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்து ராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, ஆகியோரின் வழித் தோன்றல்கள்,வ.உ.சிதம்பரனாரின் பேரனுக்கு, 2,000 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது, இனி, 4,500 ரூபாயாக, உயர்த்தப்படும். இதன் மூலம், 195 பேர் பயனடைவர். அரசுக்கு, ஆண்டுக்கு, 58.50 லட்சம் ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.சத்துணவு திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு ஒன்றியத்தில் உள்ள, அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று பள்ளிகளில் உள்ள, சத்துணவு மையங்களில், சோதனை அடிப்படையில், பல வகை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு, மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், தமிழகத்தில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும்அங்கன்வாடி மையங்களுக்கு, இத்திட்டம் நீட்டிக்கப்படும். இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு, 103.28 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
ReplyDeleteவருகின்ற திங்கள் கிழமை 18.08.2014 அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் (நுங்கம்பாக்கம்) என்ற இடத்தில் ஒரு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது
90 மற்றும் அதற்கு மேல் பெற்று இறுதிபட்டியலில் இடம்பெறாத சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
கோரிக்கைகள்
1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்
2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்
பதவி உயர்வுக்கு 66.66% நேரடிநியமனம் 33.34 இதனை மாற்றம் செய்ய வேண்டும்
வருகின்ற இரண்டாவது பட்டியலில் தமிழ் மற்றும் கணித துறைக்கு அதிக பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்
குறிப்பு : காவல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது
இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற
82--126 மதிப்பெண் நண்பர்கள் யாரும் வருந்தவோ கோபப்படவோ வேண்டாம்
காரணம்
2013-2014 கல்விஆண்டு பணியிடங்கள் சேர்ந்தால் நாம் அனைவரும் பயன்பெறுவோம்
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்