இசையோடு கற்பித்தால் திருக்குறளை எளிதாக மனதில் பதிய வைக்கலாம் தேவகோட்டை -ஆக - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் செயல் வழி கற்பித்தல் பயற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது.
கல்லுரி முதல்வர் பேச்சு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் முத்தமிழ் குறள் நிகழ்வு செயல் வழி கற்பித்தல்பயிற்சி நடை பெற்றது.
பயற்சிக்கு வந்திருந்தோரை மாணவி பரமேஸ்வரி வரவேற்றார்..பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லுரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கி பேசுகையில்,என் அன்னை தொடக்கப்பள்ளி ஆசிரியை.அவரிடம் தான் நான் முதலில் திருக்குறள் கற்றேன்.அவர் சொல்லி கொடுத்த ராகத்துடன்இங்கே நான் திருக்குறளை படி காண்பிக்கின்றேன்.அகரம்தான் தமிழுக்கு சிகரம் எனவும்,இந்தியாவில் பிறந்ததால் தான் திருக்குறளை படிக்கும் பாக்கியம் பெற்றோம் எனவும் கூறினார்.சீன நாட்டினர் ஒரு திருக்குறள் முழுமையாக பொருள் புரிந்து படித்தால் பல கோடிகளை பணமாக சம்பாதித்து விடுவோம்.அவ்வளவு பொருள் அதனில் பொதிந்துள்ளது என கூறுகின்றனர்.1330 திருக்குறளை நம்மிடம் நமது தாய்மொழியில் வைத்துள்ள நாம் அதனை சிறுவயதிலிருந்தே படிக்கவேண்டும் என கூறினார்.அகர முதல,கற்றதனால் என்ற இரு குறளையும் இசையோடு பாடிகாண்பித்தார். நடனத்துடன் திருக்குறள் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் ஓய்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் திருக்குறளை அபிநயத்தோடு ஆரம்பித்தார்.மாணவர்கள் எந்தக் கலையையும் பெரிதாக நினைத்துஅறிந்து செயல்பட வேண்டும்.
திருக்குறளில் விளையாட்டு விளையாட போகிறோம் என்றவுடன் மாணவர்கள் உற்சாகமாக கவனித்தனர்.முத்தமிழ் எவை? இயற்றமிழ்,இசைத்தமிழ்.நாடகத்தமிழ் இவற்றை பற்றி மாணவர்களிடையே விளக்கம் கேட்டே அறிய வைத்தார்.எண் வரக்கூடிய திருக்குறளை சொல்லச் சொல்லி அந்தக்குறளை நடித்துக் காட்டினார்.எட்டு,ஒன்பது தவிர மற்ற எண்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறள் சொல்லி அதற்கு நாட்டியம் ஆடிக்காட்டினார்.மேலும் எழுத்து ,சொல்,பொருள்,யாப்பு,அணி போன்றவற்றை விளையாட்டாக கேள்விகள் கேட்டு அதற்குரிய குறளை மாணவர்களை சொல்லவைத்து அதற்கு ஆடிகாட்டினார் . அகர,எண்ணென்ப,ஒருமையுள்,கற்க,சொல்லுக,நன்றி,துப்பார்க்கு,நன்றிக்கு வித்தாகும்,ஒருமையும்,உடுக்கை போன்ற பல குறள்களுக்கு நடனம் ஆடி காட்டி மாணவர்களை நடன அசைவின் மூலமாகவே குறள் சொல்ல துண்டினார்.
எப்பொருள் என்ற குறளுக்குகதைகூரி நடனம் ஆடி பல அபிநயங்களை செய்து இசையோடு பாடமுடியும் என்பதை செய்து காட்டினார். மாணவர்கள் நடனமாடுதல் இசை,நடனத்தோடு கற்பித்தால்,திருக்குறளையும் எளிதாக மனப்பாடம் செய்யாமல் மனதில் பதிய வைக்கலாம் என்பதை பரமேஸ்வரி,சொர்ணம்பிகா,பவனா,புனிதா ,ராஜேஸ்வரி,நித்யகல்யாணி ஆகிய மாணவிகளை அகர முதல என்ற குறளை நடனம் ஆடி இசையோடு கற்று கொடுத்து அவர்களையும் ஆட வைத்தார். திருக்குறளை எளிதாக எவ்வாறு எளிதாக படிக்கலாம் என்பதை 'அ க ம வே இ பொ த அ கோ பி' என்ற சூத்திரத்தின் மூலமாக முதல் அதிகாரத்தில் உள்ள பத்து குறளுக்கும் முதல் எழுத்தை நினைவில் வைத்துக் கொண்டால் இதனை ஏறு வரிசையிலும்,இறங்கு வரிசையிலும் நினைவில் வைத்து சொல்லலாம் எனக் கூறினார்.ஒரே மாதிரியாக வரக்கூடிய இரண்டு குறள்களையும் ,மூன்று பாலிலும் இடம் பெறக்கூடிய ஒவ்வொரு குறளையும் நடனத்துடன் ஆடி ,பாடி காட்டினார்.திருக்குறளை நடனமாடி சொல்லி கொடுத்ததை கற்று கொண்ட மாணவிகளில் கிருஷ்ணவேணி,காயத்ரி,தனலெட்சுமி ,கீர்த்தியா,மாணவர்கள் பவித்ரன்,நடராஜன்,சூரியா ,நவீன்குமார் ஆகியோர் மேடையில் நடனத்துடன் ஆடி காண்பித்தனர்.படிப்பறிவா ? பட்டறிவா?பரமேஸ்வரி என்ற மாணவி திருக்குறளை இவ்வளவு அழகாக நடனத்துடன் சொல்லி கொடுக்கிறிர்களே?இது படிப்பறிவா ? பட்டறிவா? என கேள்வி கேட்டார்.அதற்கு சுந்தர மகாலிங்கம் குறளை படித்துதான் அறிந்து கொண்டேன் என பதில் கூறினார்.மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில் ,நான் மதுரை மாவட்டம் ,பரவையை சார்ந்தவன்.கரூர் மாவட்டம் மஞ்சபுளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.திருக்குறள் மீது ஆழந்த ஈடுபாடு கொண்டதனால் இசை,நடனம் மற்றும் பாவனைகளுடன் அவற்றை பால்வாடி மாணவர்கள் முதல் பல்கலைகழக மாணவர்கள் வரை தேடி சென்று இலவச சேவையாக இதனை செய்து வருகின்றேன்.(எனது கைபேசி எண் :) அரசு பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி,தனியார் பள்ளி,கல்லூரிகள்,பல்கலைகழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் எந்த பாகுபாடும் காட்டாமல் சென்று இசையோடு கற்பித்தால்,திருக்குறளை எளிதாக அனைவர் மனதிலும் பதிய வைக்கலாம் என்ற நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றேன்.
மாணவர்கள் உறுதி
மாணவ,மாணவியர் பயற்சியின்நிறைவாக மேடையில் பேசும்போது நாங்களும் இதே போன்று திருக்குறளைக் கற்று நடனமாடி இசையோடு பள்ளிகளுக்கு சென்று கற்றுக் கொடுப்போம் என உறுதியோடு கூறினர். நிகழ்ச்சியின்நிறைவாக சௌமியா என்ற மாணவி நன்றி கூறினார்.பயிற்சியை ஆசிரியை முத்து மீனாள் தொகுத்து வழங்கினார்.
Good Good....Nalla muyarchi..
ReplyDeleteVery nice .
ReplyDeleterajalingamsir 2nd list pathiamaicher onnuma sollavillaya
ReplyDeleteABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......
ReplyDelete* தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.
நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
* TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்
* வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
சேம்பர் எண் : 222
வழக்கறிஞர் திரு .சங்கரன்
சேம்பர் எண்: 354
வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
வழக்கறிஞர் திரு நமோ.நாராயணன்
மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
திரு. கருப்பையா 9942342608.
keep it up pl more post sir
ReplyDelete