TET பணி நியமனக் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

TET பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?


7 பேருக்கு பணி நியமன ஆணை:

முதல்வர் இன்று வழங்குகிறார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28)வழங்குகிறார்.
இந்த ஆண்டு பட்டதாரிஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என 13ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில்7பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்.

பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?

இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப்பணி நியமனக்கலந்தாய்வு தேதிகள் ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

12 comments:

  1. பாதிக்கப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

    நமது காலம் தாழ்ந்த போராட்டத்தின் விளைவு தான் இது. 100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு தான் மன வேதனை அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த வேதனை அதிகமாகதான் இருக்கிறது. ஏனென்றால் நான் 106 மார்க். என் வாழ்வில் இனிமேல் நான் பட்டதாரி ஆசிரியர் ஆகவே முடியாது.

    சரி, வேலை பெறப்போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். முதலில் ஒழுக்கம் இரண்டாவது கல்வி மூன்றாவது உயர்வு. ஆனால் இன்று ஒழுக்கம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டார்கள். கல்வி மட்டும் தான் இன்று போதிக்கிறார்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. MONDAY CHENNAI VARUINGAL நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      Delete
  2. சீக்கிரம் கொடுங்கையா

    ReplyDelete
  3. அனைத்து ஆசிரிய நல்லுள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்..
    ஓர் ஆசிரியராக முதன்முறை ஆசிரியர் தினம் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ஓர் ஆசிரியரின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் படித்ததில் பிடித்ததை உங்களுடன் இந்த நல்ல நாளில் பகிர்ந்து கொள்கிறேன்...

    ஒரு மாணவன் விதை என்று வைத்துக்கொண்டால் அது முளைவிட்டு வளரத் தேவைப்படும் தண்ணீரை ஊற்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு நல்ல விதை வளமானதாக மட்டும் இருந்தால் போதாது… அந்த விதை நல்ல மண்ணில் புதைக்கப்பட்டு நல்ல முறையில் பேணப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.
    விதையைப் போல தான் மாணவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. விதைக்கு நல்ல மண்ணும், நல்ல சீதோசனமும், நல்ல தண்ணீரும் இருப்பதைப் போல, அவன் சேருகின்ற பள்ளியும், அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல கல்வியறிவையும், நல்ல பண்புகளையும், மிகச்சிறந்த ஒழுக்கத்தையும் கொண்டிருப்பதுடன் அதை அப்படியே அந்த மாணவர்களுக்குத் தவறாமல் கற்றுக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி கற்றுத்தருவது விதைக்கு நல்ல தண்ணீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும்.
    ஆசிரியர்கள் இவ்வாறு கற்றுக்கொடுக்கும்போது மாணவர்களின் ஆற்றலும், திறமையும் வெளிப்படும். அதன் விளைவாக நல்ல செயல்கள் மாணவர்களிடம் இருந்து வெளிப்படும். அந்த செயல்கள் கண்டிப்பாக அரிய பல சாதனைகளைக் கொண்டுவரும்.
    மாணவர்களுக்குக் கற்பனைத் திறன், நேர்மை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம், செயல்களில் முழு ஈடுபாடு, பொறுமை, விடாமுயற்சி, நேர்மறை மனப்பாங்கு போன்றவை அவசியம். இவையனைத்தும் மாணவர்களுக்கு இயற்கையிலேயே பொக்கிஷமாகப் புதைந்திருக்கிறது. அந்தப் புதையலைத் தேடி வெளிக்கொண்டுவரும் வழிவகைகளை ஆசிரியர்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் வாழ்க்கையின் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
    வகுப்பில் பாடம் எடுக்கும்போது மேற்கூரிய பண்புகள் வெளிப்படத் தேவையான நம்பிக்கையை தினமும் போதிக்க வேண்டும். சிறந்த தலைவர்கள், வெற்றியாளர்களின் சரித்திரங்கள், தன்னம்பிக்கைக் கதைகள் என்று கூறி எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்கும் மாணவர்களுக்கு தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்களை எப்போதும் விதைக்கும் சூழலே ஏற்படாது. ‘என்னால் எதையும் செய்ய முடியும்’, ‘நான் வெற்றியடைந்தே தீருவேன்’ என்பன போன்ற நேர்மறை எண்ணங்களே அவனது மனதில் வியாபித்திருக்கும். இத்தகைய செய்திகளைச் சொல்லும் ஆசிரியரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மாணவனுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக மாறிவிடும்.
    தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை ஒரு சிறந்த படைப்பாற்றல் மிக்க தலைமைப் பண்பு கொண்டவனாக மாற்ற வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருக்கிறது என்று உணர்ந்து பொறுப்புடன் கற்றுத்தர வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமையாகும். மாணவர்களின் கருத்துக்கள் சுதந்திரமாக வெளிவர வேண்டும். அப்போதுதான் புதுப்புது சிந்தனைகள் ஏற்படும். நாளடைவில் அந்த சிந்தனைகள் மனதில் பதிந்து, குறிக்கோளாக மாறி, நல்ல எண்ணங்கள் வழியாக செயல் வடிவமாகும். அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஆசிரியர்களையே, தன் வாழ்வை சிறந்த முறையில் கட்டமைத்தவராக எண்ணி மாணவன் தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவு கூறுவான்.
    குறிக்கோள்கள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம் என்பதைப் போல, குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கை என்றால் என்ன? என்று அறியாமல் தெளிவில்லாத கரடுமுரடான பாதையில் செல்பவனை ஆசிரியர்கள் தான் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும். மனிதனை அழகான முறையில் செதுக்கி, அனைவராலும் வணங்கப்படும் அழகிய சிலையாக வடிக்கும் சிற்பியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் தங்களின் அறிவு, விடாமுயற்சி, ஒழுக்கம் என்ற வரிகளைக் கொண்டு நல்ல சிலையை வடிவமைக்க வேண்டும்.
    கல்வி என்பது அள்ள அள்ளக் குறையாத சொத்து. அதை கொடுக்கக் கொடுக்க வளருமே அன்றி குறையாது. எனவே மாணவர்களுக்கு தாராளமாக நற்பண்புகளுடன் கூடிய கல்வியை வழங்குங்கள். அதைவிடுத்து வியாபாரம் ஆக்காதீர்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி புகட்டுவதை காசு பெற்றுக்கொண்டு, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதைப் போல உணருங்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி கொடுக்கும் செயல், புனிதமான கல்விக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இறந்த பிறகும் மண்ணில் வாழும் வரிசையில் முதலிடம் பெறும் ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாளைய தலைமுறை உங்கள் கையில்….

    நன்றி!

    ReplyDelete
  4. will there be any priority for students for their home district to select vacancies in their district itselt... will it be wheitage based or s.No based or caste based or BV/CV based or Priority to PH?VI first and then others or ... or... or... or... How will the counselling be held.???? pls share ur views.....

    ReplyDelete
  5. Still urdu SG & B.T will nt publish.
    We r in coma stage.

    ReplyDelete
  6. Tharmathin valvu thanai intha amma atchyil sudhu kavum. Namudaya ellorudya valvuim azhika vandhathu intha go 71. 7+1=8. Eight endral azhithal endru meaning. Seniorsku vantha go 71 enra emman namudya vazhlkayil pasa kayirai pottu nam uairai parithu senrathu. avargal sathithu vitargal. Nammai velthivitargal. Ayyogo enna venru solvathu endru thaeriyavillayae. thaevangalae !!! Neengal irukinrigala illaya. Neengal ellam poithano!!!!.nan intha thuyara sampavathai marakka mudiyavillayae. 90 kku mel eduthavargalin nilamai ennaavathu? Kdavulae neethan itharku valli kura vendum. namudaya nilamai inni yarkum varakudathu.

    ReplyDelete
  7. pani niyamanam pera pogum anaithu aasiriyarkalukkum enathu nal valthukkal

    ReplyDelete
  8. Dear paper I&II FRIENDS...
    We have a rally on monday (01.09.2014). Whose who are affected, please attend this rally with out fail with your family.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி