'உலக அளவில் 2015ம் ஆண்டில் 52 லட்சம் ஆசிரியர்கள் தேவை' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2014

'உலக அளவில் 2015ம் ஆண்டில் 52 லட்சம் ஆசிரியர்கள் தேவை'


பெ.நா.பாளையம் : 'உலகளவில் வரும் 2015ம் ஆண்டில் 52 லட்சம் ஆசிரியர்கள்தேவை உள்ளது' என, குஜராத் மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை கமிஷனர் ஜெயந்தி பேசினார்.

பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தா பல்கலை 9வது பட்டமளிப்பு விழா வெங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் ஆத்மபிரியானந்தர் வரவேற்றார். பல்கலை தலைமை நிர்வாகி சுவாமி அபிராமானந்தர் அறிமுக உரையாற்றினார்.விழாவில், சிறப்பு விருந்தினராகபங்கேற்ற குஜராத் கமிஷனர் ஜெயந்தி பேசுகையில், 'யுனெஸ்கோ கணக்கீட்டின்படி, உலகில் படிப்பறிவு இல்லாத 25 கோடி குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி அளிக்க வரும் 2015ம் ஆண்டில் 52 லட்சம்ஆசிரியர்கள் தேவைப்படுவர் எனக் கூறியுள்ளது.

போதிக்கப்படும் கல்வியில் ஏற்படும் மாற்றங்களை கிரகித்துக் கொள்ளும் ஆசிரியர்கள்தான் நாட்டுக்கு தேவை. ஆசிரியர் - மாணவர்கள் இடையே ஏற்படும் புனிதமான உறவு கற்பித்தலில் புரட்சியை ஏற்படுத்தும்'என்றார்.விழாவில் பல்கலை வேந்தரும், ராமகிருஷ்ண மிஷனின் பொது செயலாளருமான சுவாமி சுகிதானந்தாஜி மகராஜ் பேசினார். 222 பேருக்கு பட்டயம், பட்டங்கள் வழங்கப்பட்டன. பரமார்த்த சைதன்யர், டீன்கள் முத்தையா, அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி