‘வெயிட்டேஜ்’ முறைக்கு எதிர்ப்பு: சென்னையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 210 பட்டதாரி ஆசிரியர்கள் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2014

‘வெயிட்டேஜ்’ முறைக்கு எதிர்ப்பு: சென்னையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 210 பட்டதாரி ஆசிரியர்கள் கைது

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.


பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முன்பு நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே...

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘‘ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆசிரியர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டியவர்கள். எனவே நியாயமாக தகுதித்தேர்வு ஒன்றை நடத்தியே பணி நியமன ஆணை வழங்க வேண்டும். இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’, என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 84 பெண்கள் உள்பட 210 பேரையும் போலீசார் கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டவுடன், சுமார் 50 பேர் நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். கோயம்பேட்டில் நடத்திய போராட்டத்தின்போது, போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தினார்கள் என்றும், படித்த பட்டதாரி ஆசிரியர்களைப் போல போலீசார் தங்களை மரியாதையுடன் நடத்தவில்லை என்றும் புகார் கூறினார்கள். பின்னர் கமிஷனர் அலுவலகத்தில், கோரிக்கை மனு ஒன்றை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். கோரிக்கை மனுவில், தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தனர்.

27 comments:

  1. பிறந்த ஆண்டு வாரியாக தெரிவு பெற்றவர்களின் விவரங்கள்
    YEAR AGE NO OF SELECTED CANDIDATES

    1957 - AGE 57 1

    1958 - AGE 56 -


    1959 - AGE 55 2

    1960 - AGE 54 1

    1961 - AGE 53 2



    1962 - AGE 52 2

    1963 - AGE 51 5

    1964 - AGE 50 13

    1965 - AGE 49 26

    1966 - AGE 48 19

    1967 - AGE 47 33

    1968 - AGE 46 40

    1969 - AGE 45 46

    1970 - AGE 44 66

    1971 - AGE 43 92

    1972 - AGE 42 131

    1973 - AGE 41 169

    1974 - AGE 40 194

    1975 - AGE 39 228

    1976 - AGE 38 267

    1977 - AGE 37 256

    1978 - AGE 36 313

    1979 - AGE 35 329

    1980 - AGE 34 335

    1981 - AGE 33 435

    1982 - AGE 32 525

    1983 - AGE 31 576

    1984 - AGE 30 714

    1985 - AGE 29 906

    1986 - AGE 28 1039

    1987 - AGE 27 1082

    1988 - AGE 26 916

    1989 - AGE 25 780

    1990 - AGE 24 531

    1991 - AGE 23 371

    1992 - AGE 22 251

    1993 - AGE 21 1

    ---------------------

    TOTAL - 10697

    ---------------------

    TOTAL- 10697
    NOT AVAILABLE- 624



    10697+624=11321

    ReplyDelete
    Replies
    1. indha dtl ellam engaluku vendam sir, today case visaranaiku varuma varadha? adhai matum mudindhal solunga

      Delete
    2. After passing TET through employment its a final and best solution

      Delete
    3. Dear teacher..
      Aided School Vacant's available in chennai...
      P.G Chemistry and Commerce
      B.T Science with TET Pass (Sc/St/MBc)
      B.T.Maths with TET Pass (MBC)
      Contact Raj kumar - 9444588966
      Thiru - 9843951505...

      "With in One Week Appointment"

      Delete
  2. Good morning friends today stay case not hearing in Madurai high court but madras court cases hearing but not final judgement.so today no solution for our problem.

    ReplyDelete
  3. En sir ippadi seikirargal.selected unselected teachers oruvarukkum ingu niyam kidaippadhaga theriyavilaiye. Yena koduma koduma vivek sir....
    Matra nal pola indha nalum kadandhu pogum ......................................

    ReplyDelete
  4. AS PER THE ABOVE STATEMENT SENIORITY(EMPLOYMENT OR AGE)WITH TET PASS QUALIFICATION"S SELECTION ONLY THE BEST WAY.........

    ReplyDelete
  5. வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அரசு அலோசனை செய்து வருவதாக தெரிகிறது.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
    ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும்இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில்சேர்ந்தனர் TET 2013 அதிகஅளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக
    அளவில்ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படிஅறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர்தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.ஆனால் ஒரு பிரிவினர் தங்கள்பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்றுஇருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம்நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறுவிதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரைஉயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வுபெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்யஇடைகால தடை விதித்தது இதனைஎதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டுமனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில்இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதா கஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசுஅலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறைஅமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும்தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. சார் நான் இதை ஏற்றுக்கொண்டு வழி மொழிகிறேன் சார்

      Delete
  6. Ippo baathikka paduvorukku yaar bathil solvaargal?
    TRB notification la high court theerpuku intha list katupattathunu yerkanave solliruchu melum GO govt matrinal athupadi new list vida thayaarnum trb solliullathu.
    Govt GO maatra thayaar aagivittathu(veeramani petti).
    Ellam nallathe nadakkum.

    ReplyDelete
  7. After passing TET through employment its a final and best solution

    ReplyDelete
  8. Dear teacher..
    Aided School Vacant's available in chennai...
    P.G Chemistry and Commerce
    B.T Science with TET Pass (Sc/St/MBc)
    B.T.Maths with TET Pass (MBC)
    Contact Raj kumar - 9444588966
    Thiru - 9843951505...

    "With in One Week Appointment"

    ReplyDelete
  9. Yen sir today appointment tomorrow joining illaiya

    ReplyDelete
  10. If possible I will thank to amma as god

    ReplyDelete
  11. If possible I will thank to amma as god

    ReplyDelete
  12. Case enna achi sir ? judgement 2day varuma ? Yaravathu solluga sir

    ReplyDelete
  13. என்றுமே நீதிமன்றம் தவறான தீர்ப்பை தராது ஏனெனில் இது அனைத்து இந்தியாவிற்கும் பொருந்தும். அதனால் தவறான தீர்ப்பு கண்டிப்பாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். சிறிது காலம் கடந்தாலும் சரியான தீர்ப்பு வரும் .....

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. it is amazing if the case is coming for hearing .

    ReplyDelete
  16. I got First appointment order in my nearby 5 five district . but now I couldn't come out everyone shamed( naturally I am a pH) to me as unlucky fellow

    ReplyDelete
  17. My age is also above 30(33). So age is not a problem .Even the case is turned negative definitely I can get the job. I feel very panic for one week every selected candidates should get job

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி