வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு : கோயம்பேட்டில் மறியல் செய்த 250 பட்டதாரி ஆசிரியர்கள் கைது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2014

வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு : கோயம்பேட்டில் மறியல் செய்த 250 பட்டதாரி ஆசிரியர்கள் கைது.


தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் காலிபணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது.
சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். இதில், 90க்கு மேல் மதிப்பெண் பெற்று சுமார் 23,000 பேர் தேர்ச்சி அடைந்தனர். இடஒதுக்கீடு அடிப்படையில் மேலும் 40,000க்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், ஒவ்வொருவரின் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களுடன் தற்போது தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கூட்டும் வெயிட்டேஜ் முறையை அரசு கொண்டுவந்தது. இந்த முறையை பின்பற்றினால் கிராமப்புறங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய கல்வித்தரத்தால் குறைவான மதிப்பெண்களை பெற்று, பல வருடங்கள் ஆசிரியர் கனவில் உள்ளவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27 நாளாக உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள்நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டங்களைநடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் வந்தனர். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் கூறினர்.

அதனால் ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் போலீசார் தடுக்கவே,கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து 250 ஆசிரியர்களைபோலீசார் கைது செய்தனர். இதில் 100 பேர் ஆசிரியைகள். அவர்களை மதுரவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, தங்கள் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

9 comments:

  1. வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அரசு அலோசனை செய்து வருவதாக தெரிகிறது.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
    ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும்இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில்சேர்ந்தனர் TET 2013 அதிகஅளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக
    அளவில்ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படிஅறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர்தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.ஆனால் ஒரு பிரிவினர் தங்கள்பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்றுஇருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம்நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறுவிதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரைஉயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வுபெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்யஇடைகால தடை விதித்தது இதனைஎதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டுமனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில்இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதா கஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசுஅலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறைஅமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும்தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. If 5% relaxation is suitable for this year, then the forthcoming weightage also suitable for this year sir,

      Delete
  2. After passing TET through employment its a final and best solution

    ReplyDelete
  3. Thank u Mr nandhakumar sir for ur kind words

    ReplyDelete
  4. appdipp partha 5%relaxationkuda next yearkkuthan porunthum. eanna engalukku first cv muchapinthan antha go vanthathu. ithukku unga pathil nandakumar..?.

    ReplyDelete
  5. Seniority is best solution for Teachers appointment

    ReplyDelete
  6. Puthiya weitage murai yentha mathiriyana matrangalodu varum? Hsc Marksa mattum neekividuvargala?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி