சேத கட்டடங்களில் வகுப்புகளை நடத்தாதீர் - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2014

சேத கட்டடங்களில் வகுப்புகளை நடத்தாதீர் - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை


வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம்,”என,பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளி கட்டட மேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் கீறல் விழுந்து பராமரிப்பின்றி, சேதமடைந்த நிலையில்உள்ளன. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அக்கட்டடங்களில் வகுப்புகளை நடத்தவேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

துவக்க முதல் மேல்நிலை வரை அனைத்து அரசு பள்ளி கட்டடங்களின் நிலை குறித்து, பொதுப்பணித்துறை இன்ஜினியர்களின் உதவியுடன் ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நட௨த்த வேண்டாம். அங்கு நடத்தப்படும் வகுப்புகளை வேறு பகுதிக்கு மாற்றவும், பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதன் திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல், துறை உயர்அதிகாரிகளின் முறையான அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி அருகே தாழ்வாகசெல்லும் மின் வயர்கள், உயர் மின்அழுத்த கம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்க, வளாகத்தில் மழைநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

5 comments:

  1. ஐயா, அரசு பள்ளிகளில் எதற்கெல்லாம் மாணவர்கள் கட்டணம் செலுத்த வெண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி