ஒளிவு மறைவின்றி பணி நியமனம்; ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2014

ஒளிவு மறைவின்றி பணி நியமனம்; ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


"பணி நியமனங்களில் ஒளிவு மறைவின்றி, வெளிப்படை தன்மையை அரசுகடைபிடிக்க வேண்டும்,' என, தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், திருப்பூர் காந்தி நகர் முத்தண்ண செட்டியார் மண்டபத்தில், நிதியளிப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கனகராஜ் வரவேற்றார். தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் வின்சென்ட் பால்ராஜ், மகளிரணி செயலாளர் மார்க்ரெட் சில்வியா, பொதுசெயலாளர் முருகேசன் பேசினர்.அகில இந்திய செயலாளர் அண்ணாமாலை பேசியதாவது: ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் வழங்குவதில் குளறுபடி நடக்கிறது. பங்கு சந்தையில் முதலீடு செய்வது பாதுகாப்பற்றதாக தெரிகிறது. கடந்த 2006ல், மாநிலம் முழுவதும் 48 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணிவரன்முறை, 2008க்கு பிறகே கணக்கிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக, தொகுப்பூதிய ஊழியர்களாக இவர்களைஅரசு வைத்திருந்தது. இதனால், எவ்வித பலன்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒருவரை பணியிட மாற்றம் செய்து, அப்பணிக்கு மாவட்டம் தழுவிய "கவுன்சிலிங்' நடத்துகின்றனர். "கவுன்சிலிங்' மூலம் நடக்கும் நியமனங்களில், வெளிப்படை தன்மை இருப்பதில்லை.

"கவுன்சிலிங்' மூலம் ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. வரும் காலத்தில் கல்வித்துறையில் பணியிட மாற்றமும், நியமனங்களும் ஒளிவு மறைவின்றி நடக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்டபொரு ளாளர் இளஞ்செழியன், ஜான்பீட்டர், சந்திரசேகர், ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

1 comment:

  1. ஐயா, அரசு பள்ளிகளில் எதற்கெல்லாம் மாணவர்கள் கட்டணம் செலுத்த வெண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி