பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க அரசாணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2014

பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க அரசாணை.


தமிழக அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 827 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ளகணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் ஏற்கனவே 625 இருந்தன. அத்துடன்கூடுதலாக 175 சேர்த்து 827 நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் தற்போது தமிழக அரசு ஆணைவெளியிட்டுள்ளது(அரசாணை எண் 130. தேதி 5.9.14) இந்த உத்தரவின் படி கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் பெறப்பட்டு நியமிக்கப்படும்.மேலும் பிஎட் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம். ஏற்கனவே இந்த பணியிடங்களில பணியாற்றிய 625 கணினி பயிற்றுநர்கள் இந்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோரமுடியாது. மேலும், இனி வரும் காலங்களில் கணினி பயிற்றுநர்கள் நியமிக்கும் போது ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்தியே தேர்வு செய்யப்படுவார்கள்.

2 comments:

  1. அரசே செய்து இருக்கவேண்டிய ஆசிரியர் நியமனங்கள் அனைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுதான் அரசு செய்யும் என்றால் அரசு நிர்வாகம் எதற்கு?

    ReplyDelete
  2. what about sentority list for csteacher??up to which year they will selected .pls tell us ???

    sabari
    9884539316

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி