ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம்

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்வதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில், மாவட்ட கல்வி அதிகாரி, அரசு மேல்நிலைப்பள்ளி மூத்த தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஆகியோரைக் கொண்ட குழுவை செப்.,30க்குள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் சராசரியாக 80 முதல் 100 வரை ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு ஒப்புதலுக்குப்பின் நியமிக்கப்படுவர்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி