10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் மாதம் நடைபெறும் காலாண்டு தேர்வை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் வெ.வீரபாண்டியராஜ் ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:விருதுநகர் மாவட்டத்தில் காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மொழித்தாள் தேர்வுகள், காலாண்டு விடுமுறைக்குப் பின் அக்டோபர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்வுகள் எழுத முடியாமல், அவர்களுடைய கவனம் சிதறம். மேலும் விடுமுறை நாட்களில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும்.
மேலும் மொழித்தாளை அனைத்துப் பிரிவு மாணவர்களும் தேர்வு எழுதுவதால், விடைத்தாள்திருத்துவதில் ஆசிரியர்களுக்கு சிரமமும், தாமதமும் ஏற்படும். எனவே மொழித் தேர்வு விடுமுறைக்கு முன் செப்டம்பர் 20 மற்றும் 27 ஆகிய சனிக்கிழமைகளில் நடத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நலமாக இருக்கும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இது விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீரபாண்டியராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Ni8 11 maniku thoongama iruntha than kalviseithila 1 st idam pidikamudium pola.jolly jolly nan than frst
ReplyDeleteஅப்பாடி நினைக்காதிங்க vinithini p இந்த
ReplyDeleteபக்கம் ஒருத்தரும் வரதில்ல அதான் காரணம்........
என்னது தூக்கமா எங்கடா தூங்க விட்டீங்க
ReplyDeleteஆள்ளுக்கு நாட்டாம மாதிரி தீர்ப்பு சொல்லிட்டு திரியிரானுக
டேய் நீங்கெல்லாம் டீச்சரா இல்ல வக்கீலா சொல்லுங்கடா