தேர்தல் பணிக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் முற்றுகை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

தேர்தல் பணிக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் முற்றுகை.


வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக, ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள், தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு சென்ற பெண் ஆசிரியைகள்,"அங்கன்வாடி ஊழியர், பஞ்சாயத்து ராஜ், தபால், மாநகராட்சி அலுவலர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிக்கு பயன்படுத்த வேண்டும். எங்களைபி.எல்.ஓ., பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்,' என்று கூறி, மாநகராட்சி கமிஷனரிடம் மனு வழங்கினர்.ஆசிரியர்கள் கூறுகையில், "ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக ஆசிரியர்களை நியமிப்பதால், மாணவர்களின் கல்வி, தேர்வுப்பணிகள் பாதிக்கப்படுகிறது. கல்வித்திறன் குறைந்தால், எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக, தொடக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கிறது. எனவே, தேர்தல் பணியில்எங்களை ஈடுபடுத்த வேண்டாம்,' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி