தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்துக்குத் தடை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்துக்குத் தடை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - தினமலர்

தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்:

பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், என்னை பணிக்குத் தேர்வு செய்யவில்லை. அந்தச் சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.

இதற்கிடையே, தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. 2011-2012-இல் நடந்த தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அதன்பிறகும் பணிக்குத் தேர்வாகவில்லை. 2013-இல் நடந்த தகுதித் தேர்வில், 150-க்கு 92 மதிப்பெண்கள் பெற்றேன். ஆசிரியர் பணி நியமனத்துக்கு இது தகுதியான மதிப்பெண் ஆகும். ஆனால், பணி நியமனத்துக்கு முந்தைய நடைமுறைப்படி பரிசீலனை செய்யப்படவில்லை.

மேலும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதிகாண் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான அரசாணை 2014-ஆம் ஆண்டு மே 30-இல் வெளியிடப்பட்டது. இதில் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றைக் கொண்டு தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய நடைமுறை, பணி நியமனத்துக்குக் காத்திருக்கும் போட்டியாளர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக அமைந்துவிடும். ஏனெனில், நடைமுறையில் இருக்கும் தேர்வு முறை, வினாத்தாள், மதிப்பீடு ஆகியவையும், 25 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்வு முறையும் ஒரே மாதிரியானதல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக மதிப்பெண்கள் எடுப்பது என்பது சுலபமல்ல. ஆனால், இப்போது நிலை மாறியிருக்கிறது. ஆகவே, சமீபத்தில் தேர்வு எழுதியவர்களையும், பல ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு எழுதியவர்களையும் ஒரே மாதிரியாகக் கருதுவது ஏற்புடையதல்ல.

அதேபோல பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இந்தத் தகுதிகாண் மதிப்பெண் முறை அறிவியல்பூர்வமாக சிந்திக்காமல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இதன் அடிப்படையில் நடத்தப்படும் ஆசிரியர் பணி நியமனக் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, மேலும் 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரண், தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தார். இருப்பினும், கலந்தாய்வு நடத்துவதற்கு எவ்விதத் தடையும இல்லையென்று உத்தரவிட்டார். ஏற்கெனவே, தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அதற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

34 comments:

  1. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வருகின்ற அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    வெற்றி வெற்றி வெற்றி
    Pls call me
    .
    Rajalingam...9543079848
    Raja...............9442799974
    Manimaran.. 9894174462
    Thangavel....9003435097
    Ponnusamy. 9843311339
    Dinesh..........7305383952
    Nallenthiran 9003540800



    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. ----------------------—-
      முக்கிய செய்தி
      -------------------------

      வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

      அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

      வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

      வருகின்ற அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

      வெற்றி வெற்றி வெற்றி
      Pls call me
      .
      Rajalingam...9543079848
      Raja...............9442799974
      Manimaran.. 9894174462
      Thangavel....9003435097
      Ponnusamy. 9843311339
      Dinesh..........7305383952
      Nallenthiran 9003540800



      வாழ்க வளமுடன்.

      Delete
    2. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....அவன் அவன் இறுதிப்பட்டியல் வரதானு சாப்படாம துங்காம காத்திருந்து இப்பதான் ஒரு வழியா எல்லாம் முடியுது..பட்டியல் வருவதற்க்கு முன்னாடி உங்களுக்கலாம் சட்டம் தெரியாதா? இல்ல கோர்ட் எங்க இருக்கு தெரியலயா? அப்ப இதெல்லாம் பன்ன வேண்டியது தானே? ரொம்ப சந்தோசப்படாதிங்க!!!இந்த நிலைமை உங்களுக்கும் வரும் நிச்சயம்!!!!!!!

      Delete
    3. சரவணன் இப்போது உங்களுக்கு சந்தோசமா....

      Delete
    4. வணக்கம் நண்பர்களே
      இந்து நாளிதள், ஆசிரியர் தகுதி தேர்வு பிரச்சனை ‍ உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
      வெற்றிபெறுவோம்

      Delete
    5. Thambi GO 71 ponga thambi poi pillaigalai padika vainga......

      Delete
    6. நானும் தகுதி தேர்வில் 100 மேல மார்க்கு எடுத்து மத்த எல்லாத்துலயும் சராசரியா சிரமப்பட்டு 70 - 90 வரைவாங்கி இத்தனவருசத்துக்கப்புரம் வேலை வாங்க போறம்னு இருந்தது எல்லாம் எல்லாம் ஒரே நாள்ல தகர்ந்தது நானும் 12 வருசமா இருந்த போராட்டமெல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சேன் ஆனா கடைசியில் நேற்று செத்தே போயிட்டேன் இப்போது பிணமாக தான் இருக்கின்றேன் ஆனால் நீங்கள் மட்டும் சந்தோசமாக இருங்கள்

      நீங்க செலக்ட் ஆகம போனதுக்கு எங்களுக்கு தண்டனையா
      உண்மையா சொல்லுறேன் நீங்கலாம் நெல்லவே இருக்கணும்
      உங்க கிட்ட பணம் இருக்கு நீங்க கேஸ் போடறீங்க வீட்டை விட்டு வந்து இத்தனை நாளா சென்னையிலேயே தங்கியிருந்து போராட்டம் பண்ணறீங்க ஆனா நான் குடும்பத்தை பார்ப்பேனே இல்லை இந்த போராட்டத்த பார்ப்பேனா

      போராட்டம் செஞ்சா எல்லாருக்கும் வேலைன்னு வந்தா அப்பா கூட என்நிலம மோசம் தான் அதுக்கும் வர முடியுமான்னு தெரியல ஏன்னா அதுக்கும் பணம் வேணும்
      இதை டைப் செயுரப்ப கூட என்மனசுல இருக்கிற வலி கூட வெளிய தெரியாம மறசிடலாம் ஆனால் என்னோட கண்ணீர் அதை வெளியில் படம்பிடித்து கட்டி விடுகிறது

      நேற்று வீட்டிற்க்கே போகல போக பிடிக்கல எதோ ப்ரண்ட்ஸ் ரூம்ல தங்கிட்டேன் அதனால் தான் இப்போது இத டைப் செய்ய கூட முடியுது
      ஆனா இத டைப் பன்னவதுக்கு முன்னாடி கோடா அழல இப்ப நான் அடக்கனும்னு நினைச்சா கூட அழுகிய அடக்க முடியல
      வெட்டுக்கு பொய் அழுந்தா எல்லாரும் மனசு உடைஞ்சிடுவாங்க அதனால முழுசுமா இங்கயே அழுந்துடலாம்னு தங்கிட்டேன் ஆனா வீட்டுக்கும் போகாம இருக்க முடியாதே கடவுள் கிட்ட இப்போதைக்கு கேட்பதெல்லாம் நான் அங்கே பொய் அவங்க முன்னாடி அழுந்து அவங்களையும் கஸ்ட்டபடுத்த கூடாது அதுக்கு கடவுள் தான் உதவனும்

      நான் இந்த வெப் செயட்ட்ல நீங்க கொடுக்கற விளம்பரத்த பார்க்கறப்ப மனசு நிஜமா வே வலிக்குது அடுத்தவன் வாழ்க்கைய கெடுக்க அதற்க்கு எப்படியெல்லாம் வேலை செய்யுறீங்க

      உண்மைய செல்லுங்க உங்க போராட்டத்துல எத்தன பேரு என்னைவிட வயசுல அதிகமானவங்க
      எத்தனை பேரு உண்மையில என்ன விட அதிகமா மார்க்கு வாங்குனவங்க போராட்டத்துல எத்தனை பேரு உண்மையில சாப்படாம உன்னாவிரதம் இருந்தீங்கன்னு எனக்கு தெரியாது ஆனா இப்ப என்னால உண்மையில சாப்படவே முடியல நீங்க உண்ணாவிரதம் இருந்தீங்களோ இல்லையோ என்னை போல சிலரை நீங்க உண்ணாவிரதம் இருக்க வச்சுடீங்க

      இதுக்கு மேல என்னால டைப் செய்ய முடியல் அழுகைல கை நடுங்குது

      நான் இதுக்கு மேல இங்க வந்து இந்த வெப் சைட்ட பக்க போறதும் இல்ல பக்க என்கிட்டே எந்த கம்ப்யூட்டர் இல்ல ஆண் இந்த வெப் சைட் மூலமா தான் நீங்க போராட்டத்துக்கு ஆள் சேர்த்து எல்லாம் செய்யறீங்க

      என்னோட சில வார்த்தைகள எங்கயாவது யார்கிட்டயாவது சொல்லனும்னு நினைச்சேன் அத உங்ககிட்டே சொல்லலாம்னு தான் இங்க சொன்னேன்

      சரி நான் வீட்டுக்கு கெளம்புறேன் நீங்களாவது சந்தோசமா இருங்க வாழ்த்துக்கள்

      Delete
    7. Aaruthal sola varthaiyillai Ungaluku. Pani niyamananam nichayam undu kalangatheergal

      Delete
    8. உங்கள் வேலை பறிபோகாது. எல்லோருக்கும் வேலை கிடைப்பதே போராட்டத்தின் நோக்கம்.

      Delete
    9. என் கருத்தை ஏற்ற கல்வி செய்திக்கு நன்றி

      Delete
    10. nengalmattum nethu irunthu alugirenga...but pathika pata pala ayiram per and avarkal kudumbamae aalunthu kondu irukinrathu....

      Delete
    11. feel pannathinga sir.yellorum ingu suyanalavadhigalagathan irukirargal.podhunalavadhikal oruvaum illai.kadavul paathukkuvar.nadappadhellem nanmaikenu nenichukonga.nadapadhum nallathagave nadakkum.dont feel sir.

      Delete
  2. Poratam seibavargale ungaluku entha muraiyil weightage iruka vendum???????? Koorungal ungalathu karuthai.....


    Thavaru thavaru entru solgeerirgale.......... Thavarillatha oru weightage muraiyai sollungal piragu poradungal
    Enge sentruviteer mr.santhosh,rajalingam and others.....

    ReplyDelete
  3. Villupuram dt 160English vacancy iruku choose pannunga.... Not only English Sir .... Villupuram dt la neraya vacancy iruku

    ReplyDelete
  4. தடை உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். SRI SIR PLEASE TELL ME SIR.DEO OFFICE க்கு போக வேண்டுமா அல்லது வேண்டாமா ?. வேறு FORMALITITES நடக்குமா?

    ReplyDelete
    Replies
    1. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....அவன் அவன் இறுதிப்பட்டியல் வரதானு சாப்படாம துங்காம காத்திருந்து இப்பதான் ஒரு வழியா எல்லாம் முடியுது..பட்டியல் வருவதற்க்கு முன்னாடி உங்களுக்கலாம் சட்டம் தெரியாதா? இல்ல கோர்ட் எங்க இருக்கு தெரியலயா? அப்ப இதெல்லாம் பன்ன வேண்டியது தானே? ரொம்ப சந்தோசப்படாதிங்க!!!இந்த நிலைமை உங்களுக்கும் வரும் நிச்சயம்!!!!!!!

      Delete
  5. “”””TET பாஸ் பண்ணிய அனைவருக்கும் வேலை கிடைக்காத காரணம் ::
    1. குறைவான காலிபணியிடம்,
    2. அதிகமான தேர்ச்சி,
    3. அரசு பள்ளிகள் பல மூடபடுதல்....
    4. வகுப்பு வாரியான Backlog காலிபணியிடம்…. and Etc””””””””

    90க்கு மேல் ~18000. வேலை ~10000.. எப்படி இருந்தாலும் 8000 பேருக்கு வேலை இல்லை..... பிறகென்ன.... புரிந்துகொள்ளமாட்டிங்கிறேர்களே!!!........................................................... …………………….


    100 எடுத்துள்ளேன், 95 எடுத்துள்ளேன் வேலை இல்லை, 82 எடுத்தவனுக்கு வேலை, என்று முனங்குகிறீர்களே?,, 82 எடுத்து வேலை என்றால் அவர்கள் +2,Degree,B.Ed எல்லாவற்றிலும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்...,,,,,,,,,,,,,,,,.... ஆனால் 110 எடுத்தவர்களோ சுமாராக படித்திருந்தாலே போதும் வேலை கிடைத்திருக்கும்.... அந்த 82 மார்க் யாரும் ஒசில போட்டாங்களா.... ஆம் ஒசி என்றால் அந்த 82.ஐ உங்கள் 110ல் கழித்து விடுங்கள். இப்போது உமது மார்க் 28.. ஒகே.,..,,,,,,,,,,,,,,,.... IAS,TNPSC,UPSC,NET போன்ற எல்லா தேர்வுகளிலும் 0.2, 0.1ல் வேலை பறிபோய்க்கொண்டு தான் இருக்கிறது,, அதுக்கும் போராட வேண்டியது தானே!!!!,,.,.,.mmmmmmmm. என் கருத்தில் யாரேனும் காயபட்டிருப்பின்,,,,,,,SoRrY.,.,.,.,

    ReplyDelete
    Replies
    1. Hello ilavarasan sir,
      juniors ku ippo illenalum adutha murai kandipaga velai kidaika vaaippu ullathu. aanal +2 marks kuraivaga yeduthavargal yeppothume velaiku pogamudiyathu. +2 marks kuraivaga yeduthavargal velaiku poga vendum yendru ninaipathu thavara? intha murai TET marks kuraivaga yeduthavargal adutha murai athigamaga yedukalam, aanal avargalal marubadium +2 yelutha mudiyuma? poratathil iruppavargal thangal anaivarukum velai vendum yendru ketka villai. correct method follow pannanum yendre poradukirarkal. weightage method cancel panninal intha murai illavitalum adutha murai avargal vetri pera vaippu ullathu. aanal intha weightage muraial avargal yeppothume velaikku pogum vaippai ilanthuviduvargal. pls understand our seniors.

      Delete
  6. மருதுவம் படிப்பதற்கு அதிக மதிப்பெண் நிர்னயிக்கப்படுகிறது. பொறியியல் கல்விக்குஅதிக மதிப்பெண் நிர்னயிக்கப்படுகிறது உயர்ந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.TN.TET ல் மட்டும் தகுதித்தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களை எடுத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.எது எவ்வகையில் நியாயமாகும்?

    ReplyDelete
  7. 90% வெயிட்டேஜ் Cancel ஆக வாய்ப்பு உள்ளது

    ReplyDelete
  8. பந்தியில் முதலில் அமர்ந்தவர்களை அரசு ஆணை எண்.71ஆல் எழுப்பியது .கல்வித்துறை.82 மதிப்பெண் எடுத்தவர்களை பந்தியில் அமரவைத்தது.இப்பொழுது நீதிமன்றம்பந்தியில் அமர்ந்தவர்களை எழுப்பியுள்ளது.இதில் தவறு செய்தது பந்தியில் அமர்ந்தவர்களா? எழுப்பிய கல்வித்துறையா?

    ReplyDelete
    Replies
    1. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....அவன் அவன் இறுதிப்பட்டியல் வரதானு சாப்படாம துங்காம காத்திருந்து இப்பதான் ஒரு வழியா எல்லாம் முடியுது..பட்டியல் வருவதற்க்கு முன்னாடி உங்களுக்கலாம் சட்டம் தெரியாதா? இல்ல கோர்ட் எங்க இருக்கு தெரியலயா? அப்ப இதெல்லாம் பன்ன வேண்டியது தானே? ரொம்ப சந்தோசப்படாதிங்க!!!இந்த நிலைமை உங்களுக்கும் வரும் நிச்சயம்!!!!!!!

      Delete
    2. Engaluku job kidaikalana unga elarukum sandhosam. Weightage method marinalum unga yarukum job kidaika poradhu ila.

      Delete
  9. Hello antha tenth,.plustwo,degree, ellam padichathilirunthu mothamathan tet questions irunthathu itha en neenga purinchikka matengareenga,,?

    ReplyDelete
  10. ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்

    இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
    அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...

    வழக்கு...
    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
    அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
    So nama ellorum romba romba late...

    அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...

    அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...

    TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
    ஏன்..இப்பொழுதும் முடியும்..


    2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...

    ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...

    இது தான் சரியான தீர்வு....
    இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...

    வெற்றி நிச்சயம்....

    ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...

    நன்றி...
    Alan Ani......

    ReplyDelete
  11. THIS TOO WILL GO....so dont worry friends...yesterday mrng we woke up with lots of dream with full of pleasure but it all vanished in fractions of second....i dont know how this people r laughing when others in trouble...LIVE AND LET LIVE this should be the thought of good human being but here these people r teachers but most of their thought is IF I AM NOT LIVE NO ONE SHOULD LIVE.....in my eyes there is full of tears...it pains a lot like hell...not for stay order but by the people who laughs at me...but i know THIS TOO WILL GO....I WILL GET MY APPOINTMENT ORDER SOON....

    ReplyDelete
  12. its true, ippo vandha political leaders enn go71 publish panna podhu varavillai ?????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  13. நண்பர்களே சென்னை உதவிபெறும் பள்ளியில் 3 தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான அறிவியல்(SC FEMALE ANY SCIENCE ) இடம் உள்ளது . விருப்பம் உள்ளோர் தொடர்பு கொள்ளவும் .8144170981

    ReplyDelete
  14. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....
    Counseling muditha & kalandhukola chellum nanbargale kavalai padadhirgal namaku ' Simaasanam'
    Thayar , vatrerichal karargalin vaitrerichaluku court pota marundhu
    Nanbargale September 5 kalandhaaivu mudindhu vidum,
    Trb tet certificate koduthuvitadhu
    September 8th arasu badhilalithu
    Powrnami dhinathandru thadaiyaanai yai udaithu namaku pani aanai valangapaduvadhu urudhi sandhosamaga 'simaasanathil ' amara thayaarahungal,
    Angay siripavargal sirikatum adhu aanavasirpu
    Inge naangal sirikum punsiripe aanandha siripu

    ReplyDelete
  15. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....
    Counseling muditha & kalandhukola chellum nanbargale kavalai padadhirgal namaku ' Simaasanam'
    Thayar , vatrerichal karargalin vaitrerichaluku court pota marundhu
    Nanbargale September 5 kalandhaaivu mudindhu vidum,
    Trb tet certificate koduthuvitadhu
    September 8th arasu badhilalithu
    Powrnami dhinathandru thadaiyaanai yai udaithu namaku pani aanai valangapaduvadhu urudhi sandhosamaga 'simaasanathil ' amara thayaarahungal,
    Angay siripavargal sirikatum adhu aanavasirpu
    Inge naangal sirikum punsiripe aanandha siripu

    ReplyDelete
  16. நல்லதே நடக்கும்...

    ReplyDelete
  17. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    Because of poison G.o.no71

    Amma NANGAL SEITHOME
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA?




    ReplyDelete
  18. poratta karar kaluku job kidaikathu enru solbavarkaluku enrumae JOB KIDAIKATHU.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி