SSTA மாநில பொறுப்பாளர்களின் சென்னை தொடக்ககல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2014

SSTA மாநில பொறுப்பாளர்களின் சென்னை தொடக்ககல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு.


நேற்று காலை SSTA மாநில பொறுப்பாளர்கள் சென்னையில் உள்ள இயக்குனர்அலுவலகத்தில் மதிப்புமிகு தொடக்ககல்வி இயக்குனர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களை சந்தித்து பின்வரும் கோரிக்கைகள் பற்றி விரிவாக விவாதித்தனர்.

* SSTA சார்பாக தொடுத்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு.

*CRC வேலைநாளுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு (இயக்குநர் பதில் -விரைவில் SSA திட்ட இயக்குநரிடம் கலந்துஆலோசித்து முடிவு எட்டப்படும்)

* தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் CPS கணக்கு ஒப்புகை சீட்டு

* மலைப் பகுதி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு. மட்டும் அவர்கள் அந்த ஒன்றியங்களில் பணிஏற்ற நாளை Station seniority யாக கணக்கில் எடுத்துக்கொண்டு மாவட்ட பணி மாறுதல் வழங்குதல்.

* ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிவர பராமரிக்க அனைத்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குதல்.

*ஆசிரியர்களுக்கு மேற்படிப்பு படிக்க அனுமதி கேட்டு ஆசிரியர் குறைதீர்கூட்டத்தில் விண்ணப்பிக்கும் பொது அன்றே பரிசிலனை செய்து கண்டிப்பாக ஆணைகள் வழங்க ஆணையிடுதல்

*ஆசிரியர் குறைதீர் கூட்டத்தில் அனைத்து AEEO க்களும் கண்டிப்பாககலந்துகொண்டு. உடனேயே ஆணைகள் வழங்க ஆணையிடுதல்

* மாவட்ட பணி மாறுதல் பெற்ற சில ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஊதியம் உடனே வழங்கிட ஆணையிடுதல்.மேலும் விரிவாக விரைவாக பதிவேற்றம் செய்யப்படும்.

Thanks to- SSTA

2 comments:

  1. எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்க‌ளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்காக facebok ல் ஒரு பக்கத்தை திறந்துள்ளோம். பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அல்ல்து Arun Nanban என டைப் செய்து பார்க்கவும்..
      https://www.facebook.com/pages/பாதிக்கப்பட்ட-பட்டதாரி-ஆசிரியர்கள்/721544717925180

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி