10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணி ஆசிரியர்கள் பட்டியல்: தேர்வுத்துறை தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2014

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணி ஆசிரியர்கள் பட்டியல்: தேர்வுத்துறை தீவிரம்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 2 தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரண்டு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை பள்ளிகளில் காலியாக இருந்த இடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, தற்காலிக ஆசிரியர்கள் நடத்தி வந்தபாடங்களை புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நடத்துவார்கள். தற்காலிக ஆசிரியர்கள் பட்டதாரிகளுக்கு 7 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 4,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5,000 ஊதியம் பெற்று வந்தனர். புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால் தற்காலிக ஆசிரியர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை. அடுத்தகட்டமாக, பொதுத்தேர்வின்போது பறக்கும்படை, கேள்வித்தாள் காப்பு மைய பொறுப் பாளர், தேர்வு அறை கண்காணிப்பாளர் போன்ற பணிகளில் ஆசிரியர்களே நியமிக்கப்பட உள்ளனர்.அதற்காக, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கெடுத்து அனுப்ப வேண்டும். வரும் 28க்குள் இந்த பட்டியல் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் பட்டியல் வந்த பிறகு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் இறுதிப் பட்டியலை (நாமினல்ரோல்) அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதனால், ஆசிரியர்கள் குறித்த விவரங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சேகரித்து வருகின்றனர்.10ம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி 17ம் தேதி வரை நடக்கும். அதன்பிறகு ஆசிரியர்கள் பட்டியல், நாமினல்ரோல் ஆகியவற்றை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும். இதனால், இப்போதே அந்த பட்டியல்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

4 comments:

 1. No TET Exam more details you see today dinamalar newspaper thiruvanamalai edition

  ReplyDelete
  Replies
  1. AKILAN SIR, paper 2 la absent canditaes vacancies epa sir fill pannuvaanga , ithe waiting list la irunthu fill pannuvangala sir or next recrutmentlaya sir please reply sir..

   Delete
 2. paper 2 la absent canditaes vacancies epa sir fill pannuvaanga , ithe waiting list la irunthu fill pannuvangala sir or next recrutmentlaya sir please reply sir..

  ReplyDelete
 3. No TET exam this year. this is the news published in this site. How true it is we don't know.

  First govt. should give posting to the passed candidates (90 and above). May be it is very less. All problems will be solved. Then give all the candidates who passed TET 2013 (if 5% relaxation is applicable)
  But surely, 5% relaxation will be applicable only from the next TET. Because after all process is over this announcement came. So it is doubtful. All are depends on supreme court order.
  God is there. Hard work never fails.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி