பள்ளி, கல்லூரிகள் மூலம் தீபாவளி வெடி விபத்து தவிர்க்க விழிப்புணர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2014

பள்ளி, கல்லூரிகள் மூலம் தீபாவளி வெடி விபத்து தவிர்க்க விழிப்புணர்வு


சென்னை :தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வெடி விபத்தை தவிர்க்கவும், வெடியினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் வெடி வெடிக்க வேண்டும், இரவு 10 மணிமுதல் காலை 6 மணி வரை வெடி வெடிக்க கூடாது. அதிக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நேற்று மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தியது.

அடுத்த கட்டமாக, சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 22ம் தேதி ஆய்வு நடத்த உள்ளது. விற்பனை நிலையங்களில் பட்டாசுகளின் வேதிப் பொருட்கள், அவற்றின் அளவுகள் மற்றும் அவை வெடிக்கும்போது ஏற்படுத்தும் ஒலி, மாசு அளவுகள் பற்றிய தகவல்கள் அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.அதிகபட்ச ஒலி அளவான 125 டெசிபலுக்கு மேல் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பனை செய்யக் கூடாது. வெடி பொருட்களால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் விளைவுகள் மற்றும் வெடி விபத்து குறித்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தடை விதிக்கப்பட்ட வெடிகள் குறித்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி