10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்.


கடந்த செப்டம்பர், 25 முதல் அக்டோபர், 4ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.ஸி.,துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள், தேர்வு எழுதிய மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலம் இன்று, (29ம் தேதி) வரை நேரில் சென்று மறு கூட்டல் கட்டணத்துடன் கூடுதலாக ஆன்லைன் பதிவு கட்டணமாக, 50 ரூபாயை செலுத்தி பதிவுசெய்து கொள்ள வேண்டும்.மறு கூட்டலுக்கான கட்டணமாக, இருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் 305ரூபாயும், ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் 205 ரூபாயும் செலுத்த வேண்டும்.மார்ச், ஏப்ரல், 2015ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ். எல்.ஸி., பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்று முதல் அடுத்த மாதம், 7ம் வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை, ஆன்லைனில்பதிவுசெய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி