மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தாற்காலிக விரிவுரையாளர் பணி: 13 இல் நேர்முகத் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2014

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தாற்காலிக விரிவுரையாளர் பணி: 13 இல் நேர்முகத் தேர்வு.


திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிகவிரிவுரையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) டி.தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இப் பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் துறைக்கு முதுநிலை பாடம் கற்பிக்க தாற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்ற வாய்ப்பு உள்ளது.

தாவரவியல், தாவர உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மூலக்கூறு உயிரியல், சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பம் (தாவர அறிவியல் சிறப்பு பாடத்துடன்) இவற்றில் ஏதாவது ஒன்றில் முதுநிலைப் பட்டம், நெட், ஸ்லெட், எம்.பில், பி.எச்டி, தகுதி இருத்தல் வேண்டும்.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இம் மாதம் 13 ஆம் தேதி (திங்கள்கிழமை) முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நடைபெறும் நேர்முகத் தேர்வில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.முதுநிலை பட்டத்துடன் முனைவர் பட்டம், தேசிய, மாநில அளவில் தகுதிகாண் தேர்வு பெற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரமும், முதுநிலை, இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.ஏற்கெனவே கடந்த 16-7-2014 இல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி