குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணிதொடங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2014

குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணிதொடங்கியது.


குரூப்-4 தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி நேற்றுதொடங்கியது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்&1683, சுருக்கெழுத்து தட்டச்சர்&331, வரித் தண்டலர் &22, வரைவாளர்&53, நில அளவர்&702 ஆகிய மொத்தம்4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு, டிசம்பர் 21ம் தேதி நடக்கிறது. அறிவிப்பு வெளியான மறு நிமிடமே ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஏராளமான பட்டதாரிகளும் போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12ம் தேதி இறுதிநாள். தேர்வு கட்டணங்களை செலுத்த நவம்பர் 14ம் தேதி கடைசி நாள் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி