ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2014

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு.


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல்எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும், சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர், தமக்கு கீழ் உள்ள அரசு ஊழியருக்கான சம்பள பில் தயாரித்து, கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, சம்பள பில் பெறுவதை, காகித கோப்புகளாகவும், சிடி வடிவிலும், பெறப்பட்டு வந்தது.இதன்மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் சம்பளம் பெறும் தலைப்பு, மொத்த செலவு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது கருவூலத்துறை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் மாத சம்பளம் முதல், ஆன்லைனில் பில் சமர்பிக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் தனித்தனியே, "யூசர் ஐடி',"பாஸ்வேர்டு' வழங்கப்படும். கருவூலத்துறை இணையதளத்தில் இ-பே ரோல் எனும் பகுதியில், இதை பயன்படுத்தி, அலுவலர்களின் பில்களை, ஆன்லைனில்சமர்பிக்கலாம்.

பின் வழக்கம் போல, வங்கிக்கணக்குகளில், "இ.சி.எஸ்' முறையில் சம்பளம்வழங்கப்பட்டுவிடும். ஆவணங்களாக தயாரித்து வழங்கி வந்த முறையை, ஒழித்துள்ள நிலை, தலைமை அலுவலர்களின் பணி பளுவை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர் மாதத்துக்கான சம்பள பில்களை, "ரிகர்சல்' போல், ஆன்லைனிலும், பதிவு செய்துவிட்டு, ஆவணமாகவும் தரலாம் எனவும், அடுத்த மாதம் கண்டிப்பாக, ஆன்லைன் முறையில் மட்டுமே, பில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பில் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, நேற்று சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆன்லைனில் பில் சமர்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சேலம் கருவூல பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.

6 comments:

  1. சிறந்த முறை. .....இனிமேலாவது AEEO அலுவலகங்களில் என்னால் இலஞ்சம் கொடுக்க முடியாது என்று தைரியமாக கூறலாம். .....


    சம்பளத்தை வேண்டுமென்றே மாற்றிப்போட்டு ஆசிரியர்களை அளையவிடும் முறை இனி நடக்காது. ....


    மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ennathaan nadanthalum AEEO OFFICE,TRESSARY IVAIGALIL LANCHATTHI KATTUPADUTHUVATHU KADINAME.MERKANDA OFFICE GALIL WEB-CAMARA VAI PORUTHI UYAR ATHIGARIGAL KANKAANITHAAL LANCHEM KATTUKUL VARUM.

      Delete
  2. இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து இனி ஆனந்தமாக பணியாற்றலாம்

    ReplyDelete
  3. Idhu high matrum hr sec schoolgalukku mattumae porunthum. Matrapadi thodakka kalvithurai pallikalukku AEEO aluvalagathil thhaan online payroll podappadum.

    ReplyDelete
    Replies
    1. PURIYUTHU SIR.TREASURY ALATCHEL,LANCHEM ENRU SOLLI VAANGA MAATAARGAL ALLAVA.

      Delete
  4. Nan incharge HM porupil ullapothu treasuryl sambalam podavidamal clerk treassury il velai partha clerk lady yal paper kilithuvida soli audit aanathu.IPPADIPATTA NILAI MAARUM .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி