அப்துல் கலாம் நலமாக உள்ளார் : ஆலோசகர் புது தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

அப்துல் கலாம் நலமாக உள்ளார் : ஆலோசகர் புது தகவல்

கமுதி: ''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நலமாக உள்ளார்,'' என்று அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.

பசும்பொன் வந்திருந்த அவர் கூறியதாவது: மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்கள், பேரிடர் நிகழ்வு நடந்த இடங்களில் உண்மை நிலவரத்தை அறிய 'தெர்மல் இமேஜிங் கேமரா' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் எளிதாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தேவர் நினைவிடத்தில் இந்த கேமரா அண்ணா பல்கலை மேலாண்மை துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கலாம் உடல் நலம் குறித்து தவறான செய்திகள் வெளிவருகின்றன. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி