சீசரின் மனைவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2014

சீசரின் மனைவி


சீசரின் மனைவி சந்தேகத்திற்கப்பாற்பட்டு இருக்க வேண்டும்” என்று ஜுலியஸ் சீசர் உதித்த வரிகள் உதயமான சூழல் சுவையானது.

கி.மு. 62 ஆம் ஆண்டு ‘வசீகரமானவன்’ என்கின்ற பெயருடைய ப்யூப்ளியஸ் கிளாடியஸ் (publius clodius) என்கின்ற இளைஞன் ஒரு விஷமமான செயலை விளையாட்டாகச் செய்தான்.

அவன் ஒரு பெண்ணைப்போல உடையணிந்து கொண்டு ஜுலியஸ் சீசருடைய வீட்டிற்குள் நூழைந்தான்.

அச்சமயம் சீசருடைய வீட்டில் ஒரு மதச் சடங்கு நிகழ்ந்துகொண்டிருந்த்து. பெண்கள் மட்டுமே அந்தச் சடங்கில் கலந்து கொள்ள முடிந்த சடங்கு அது. அவன் எவ்வளவு சாதுரியமாக உடை உடுத்திச் சென்றிருந்தாலும் பிடிபட்டுவிட்டான்.



அவன் பிடிபட்ட செய்தி கசிந்த்தும், பலர் சீசருடைய மனைவி பாம்பியாவினுடைய ஒத்தாசையில்லாமல் அவன் அப்படி செய்த்திருக்க முடியாது என்றும், ஒருவேளை அவன் பாம்பியாவினுடைய காதலனாகக் கூட இருக்கலாம் என சந்தேகப்பட ஆரம்பித்தார்கள்.

ஆனால் பாவம் பாம்பியா வெகுளியாகவும் களங்கமற்றும் இருந்தாள். ஆனால் சீஸரோ “சீஸரின் மனைவி சந்தேகத்திற்கப்பாற்ட்டு இருக்க வேண்டும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளை உதிர்த்துவிட்டு அவளை மணவிலக்கு செய்துவிட்டான். இத்தனைக்கும் பாம்பியா அவனுடைய இரண்டாவது மனைவிதான்.

2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே பொது வாழ்க்கையில் ஈடுபடுவர்கள் வாழ்க்கை எவ்வளவு தூய்மையாகவும், சத்தேகங்களுக்கு அப்பாலும் இருக்க வேண்டும் என்கிற நியதியும் இருந்தது என்பதை நாம் உணர முடியும்.
ரோமாபுரிப் பேரரசு, மன்னன் டார்க்வின் என்ற ரோம் சிம்மாசனத்தில் ஏழாவதாக வாரிசு ஒருவன், காலடைன் என்கின்ற ரோமாபுரி மேல்குடிமகனின் மனைவியான லூக்ரெசியா என்கின்ற பெண்ணை பலாத்காரப் படுத்தியதற்காகத்தான் வீழ்ச்சியடைய நேரிட்டது என்பது வரலாறு; அது சீசருக்கும் தெரியும்.

ரத்தம் கசியும் லூக்ரெசியாவின் உடல் ரோம் நகரம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்ட போது ஏற்பட்ட புரட்சியே குடியரசுக்கு வழிவிட்டது; முடியரசுக்கு முடிவு ஏற்படுத்தியது.

சந்தேகம் ஏற்படாமல் நடந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு தூரம் வீண் சந்தேகப்படாமல் இருப்பதும் முக்கியமாகிறது.
எளிமையான வாழ்க்கை சந்தேகங்களற்றது. எளிதில் அணுகும் தன்மை வெளிப்படையானது;

யார் எல்லாருக்கும் தங்கள் கதவுகளை கதவுகளை எப்போதும் திறந்து வைதிருக்கிறார்களோ அப்போது பாதி தவறுகள் தனாகவே மறைந்து விடுகின்றன; சந்தடியில்லாமல் – அரண்மனை வாழ்க்கை சந்த்கங்களுக்குட்பட்தாக இருப்பதே அது பூடகமாக இருப்பதால்தான்.
நாம் கடக்க வேண்டிய கதவுகள் அதிகமாக இருந்தால் நம்முடைய பயமும் அதிகமாகும்; நம்மை ஏமாற்றும் வாய்ப்புகளும் ஏற்பட்டே தீரும்.

புறநானூற்றில் 400 ஆம் பாடலில் வருவது போல
“பலர்துஞ்சவும் தான் துஞ்சான்
உலகுகாக்கும் உயர்கொள்கைக் கேட்டான்”
என்று கோவூர்கிழார் புகழும் நலங்கிள்ளி போல இருந்தால் என்றும் ஐயமும் தேவையில்லை; சந்தேகமும் வேண்டாம்; இடைத்தரகரும் இரார்.

நன்றி திரு வெ.இறையன்பு IAS ..

12 comments:

  1. மிக அருமையான கட்டுரை அனைவருக்கும் ஏற்றது

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் மிக அருமையான தகவல்...
      அதுவும் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவரிடமிருந்து....

      Delete
  2. Not nice discipline is common to all. Why not women join.

    ReplyDelete
  3. அகிலன் , ஆதி திராவிடன் சார், ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் 2 பட்டியல் தகவல் பற்றிய பதிவிடவும். ..

    ReplyDelete
  4. Replies
    1. ஆதிதிராவிடர் நலத்துரையை நம்பி இனி இருப்பதை விட குருப் 4 கு முயற்சி செய்கிறேன் .

      Delete
  5. Anakku type higher result innum varavilly naan appady apply pannattum please yaravathu solunga

    ReplyDelete
  6. apply pannunga at the time of cerificate verification or counciling only you should have

    ReplyDelete
  7. Thankyou for reply mam. Exam date anounce pannuvatharku munnadi complite panni irukka vendiya avasiyam illaiya & apply panna cer. Num venume anna seiya solunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி