ஆசிரியைக்கு எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2014

ஆசிரியைக்கு எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு.


எம்.ஏ., -எம்.எட்., முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
கமுதி கே.என்., பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார்.
பி.ஏ.,- பி.எட்., தேர்ச்சி பெற்றதால், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். பின் எம்.ஏ.,- எம்.எட்., தேர்ச்சி பெற்றார். 2005 ஜூன் 30 ல் பாலசவுந்தரி ஓய்வு பெற்றார். அவர், ''பி.எட்., முடித்ததற்கு மேற்படிப்பிற்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது. எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க கோரி, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,'' என ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். தனி நீதிபதி, ''மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,'' என அரசுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் மேல்முறையீடு செய்தனர்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. பாலசவுந்தரி சார்பில் வக்கீல் என்.சதீஷ்பாபு ஆஜரானார்.

நீதிபதிகள்: ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தும் வகையில், அரசு ஊக்க ஊதியம் வழங்குகிறது. தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க முடியும் என்பதையும், பாலசவுந்தரி பணியின் போதே மூன்றாவது ஊக்க ஊதியம் கோரியிருக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவுப்படி, பாலசவுந்தரிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.

21 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. Is there any chance for pg 2nd list please share the updates

  ReplyDelete
  Replies
  1. My dear Kiruba.
   PGக்கு அந்தந்த நலத்துறையிலிருந்து இதுவரை ஆசிரியரை தேர்ந்தெடுத்துத்தர Trbக்கு காலிப்பணியிடம் பட்டியல் ஏதும் கொடுக்கப்படவில்லை.
   மேலும் அப்படி கொடுக்கப்படும்போது மிக மிக சொற்ப இடங்களே இருக்கும்.
   எனவே தங்களின் முயற்சியை விடாமல் நன்கு படியுங்கள்.
   கல்விச்செய்தி பார்ப்பதில் காலத்தை வீணடித்துவிடாதீர்.

   Delete
  2. Mr vijaykumar that am uyarthapatta pallikaluku epdi posting poda poranga

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Dear Vijay Sir ,

   To Join in Govt Aided School Tet pass is compulsory or not

   Delete
  2. Mr vijaykumar sir tharam uyartha pallikaluku epdi posting poda poranga plz reply trb ya epdi contact pannanum

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 4. Dear vijay kumar chennai sir...
  5% relax. Is aplicable for minority & ADWS list?

  ReplyDelete
  Replies
  1. நீதிமன்ற தீர்ப்பு.

   எனவே ஆசிரியர் தகு தித் தேர்வில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கும் அரசாணை செல்லாது என்று கூறி, அந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

   இருப்பினும் இந்த அரசாணை அடிப்படையில் பணி நியமனங்கள் நடை பெற்றிருந்தால் அதில் தலை யிடக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

   Delete
  2. Now for adw& min, is relaxation is there or not sir, please reply

   Delete
  3. At this juncture, as per the court direction, 5% relaxation would not continue further.

   Delete
 5. Mr Lokesh Still no one exactly do not know about relaxation case but it surely delay may be one or two month

  ReplyDelete
 6. Mr.mani sir Mr .vijayakumar Mr .Alex sir i have one problem pls clarify
  Nan PDKT DT.
  Nan select panna schoola maths vacunt ellanu HM Told our school HM call from CEO Office .He is told join pannikolungal endru ceo officel solli ullarkal nanum 26th join pannitten
  Enakku athe schoolla work panna mudiyuma r veru schoola matthu vangala ethi ethavathu problem varuma salary this month varuma daily sign pannukiren pls clear pannuga sir pls pls

  ReplyDelete
  Replies
  1. No problem sir government every month salary will be give to you but surplus staff are always using deputation to any where vacancies there

   Delete
 7. sir, In some of the schools ,English medium is introduced.For such schools ,one additional maths teachers were appointed.They are mentioning it as a created vacancy.so, no problem in your appointment.but your salary will be credited only after the order issued to the concerned school from CEO office.

  ReplyDelete

 8. GO71 & 5% வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்ய தேவையான அனைத்து ஆவனங்களும் சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர் நளினி சிதம்பரம் ஆபிசில் ரெடியாகிவிட்டது. நாளை இறுதி செய்யப்படுகிறது. திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்வது உறுதியாகிவிட்டது. காலம் தாழ்த்தாமல் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கீழ்கண்ட முகவரியில் சென்று பெயர் சேர்த்து கொள்ளவும்.

  ஆபீஸ் முகவரி.:-

  கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

  ReplyDelete
 9. is there any chance to cancel the minority,adw,kallar &corporation school notifications please any one clarify.Many of my friends selected in English department they are saying notifications canceled like that.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி